என் மலர்
நீங்கள் தேடியது "கைபர் பக்துன்வா"
- அதிகாலை 3 மணிக்கு கையெறி குண்டுகள், துப்பாக்கியால் தாக்குதல்.
- பயங்கரவாதிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள உள்ளது டெரா இஸ்மாயில் கான் மாவட்டம். இந்த மாவட்டத்தின் தராபன் தாலுகாவில் உள்ள காவல் நிலையம் மீது இன்று அதிகாலை 3 மணியளவில் பயங்கரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இநத் தாக்குதலில் காவல் நிலையத்தில் இருந்த 10 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 காயம் அடைந்தனர். பயங்கரவாதிகள் கடுமையான ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. காவல் நிலையத்தை சுற்றி வளைத்து கையெறி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்திய நிலையில், துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளனர்.
போலீஸ் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாகவும், அதிகாலை நேரம் என்பதால் அவர்கள் தப்பி ஓடி விட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்து பயங்கரவாதிகள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாதிகளை வேட்டையாடுவதற்கான அதிகப்படியான வீரர்கள் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் மட்டும் 93 தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் 90 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், 135 பேர் காயம் அடைந்ததாகவும் செய்தி நிறுவனம் ஒன்ற செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், 15 தனிநபர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.
தேர்தல் அலுவலக கட்டிடம் மீது கையெறி குண்டு வீச்சு: 6 பேர் படுகாயம்
பாகிஸ்தானில் வருகிற 8-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் சில நாட்களாக அந்த நாட்டில் பல இடங்களில் வன்முறை சம்பவங்களும், குண்டு வெடிப்புகளும் நடந்து வருவது பதற்றத்தை அதிகரித்து உள்ளது.
கடந்த வாரம் கராச்சியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகம் அருகே குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதன் தொடர்ச்சியாக பலுசிஸ்தான் மாகாணம் கலாட் நகர் முசுல் சராட் பகுதியில் உள்ள தேர்தல் அலுவலக கட்டிடத்தை குறி வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கையெறி குண்டுகளை வீசி விட்டு தப்பினார்கள்.
இந்த குண்டு அலுவலக கட்டிடம் அருகே விழுந்து வெடித்தது. இந்த சம்பவத்தில் பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த 6 தொண்டர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதுபற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியை சீல் வைத்து தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர். வெடித்த குண்டு எந்த வகையை சேர்ந்தது என்று தெரியவில்லை. அதனை போலீசார் ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். குண்டு வீசிய மர்ம மனிதர்களை தேடிவருகின்றனர்.
தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து பாகிஸ்தான் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- புலனாய்வுத்துறையின் ரகசிய தகவல் அடிப்படையில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.
- அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கில் சுடத் தொடங்கியதால், வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.
பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் நேற்றிரவு பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையில் பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
புலனாய்வுத்துறையின் ரகசிய தகவல் அடிப்படையில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டபோது இந்த சண்டை நடைபற்றது. இதில் லஷ்கர்-இ-இஸ்லாம் அமைப்பைச் சேர்ந்த இரண்டு முக்கிய கமாண்டர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
இந்த சண்டை கைபர் மாவட்டத்தில் உள்ள திராஹ் பள்ளத்தாக்கில் நடைபெற்றது. இதில் மொத்தம் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். 6 பேர் காயம் அடைந்தனர்.
பாதுகாப்புப்படையினர் 8 பேர் உயிரிழந்த நிலையில், ஏழு பேர் காயம் அடைந்தனர். துப்பாக்கிச்சண்டை பல மணி நேரம் நீடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சண்டையில் அருகில் இருந்து வீடுகளில் வசித்த பொதுமக்கள் சிலரும் காயம் அடைந்தனர்.
- பாகிஸ்தான் ராணுவத்தின் சோதனைச் சாவடியை கைப்பற்றியதாக தெரிக்-இ-தலிபான் பாகிஸ்தான்.
- சோதனைச் சாவடி கைவிடப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் பல பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அவர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்குள் ஊடுருவலை தடுக்க பல்வேறு இடங்களில் சோதனைப் சாவடிகள் அமைத்துள்ளது.
இந்த நிலையில் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள பஜாயுர் மாவட்டத்தில் உள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் சோதனைச் சாவடியை கைப்பற்றியதாக தெரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும். அந்த இடத்தில் தெரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இந்த தகவலை தெரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மூத்த பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில் "அந்த சோதனைச் சாவடி குறைக்கும் செயல்முறையில் ஒரு பகுதியாக காலி செய்யப்பட்டது. கொஞ்ச நாட்களுக்கு முன் கைவிடப்பட்டது. அங்கிருந்து ராணுவ வீரர்கள் புதிய கோட்டைக்கு மாற்றப்பட்டனர்.
இந்த செயல்முறை ஜமாயுர் மாவட்டத்துடன் நின்றுவிடவில்லை. வடக்கு மற்றும் தெற்கு வஜிரிஸ்தான் மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தார்.






