search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pakistan election commission"

    • தேர்தலில் மோசடிகளும், முறைகேடுகளும் நடைபெற்றதாக செய்திகள் வெளிவந்தன
    • இம்ரான் கான் கட்சியின் உறுப்பினர்களின் "சன்னி இதெஹத் கவுன்சில்", ஒமர் அயுப் கானுக்கு ஆதரவளித்தது

    241 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பாகிஸ்தானில், பிப்ரவரி 8 அன்று, தேர்தல் நடைபெற்றது.

    பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் "பாகிஸ்தான் தெஹ்ரிக்-ஏ-இன்சாஃப்" (PTI) கட்சி போட்டியிட "பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்" (PEC) தடை விதித்தது. இதனை தொடர்ந்து அக்கட்சியின் வேட்பாளர்களில் பலர் சுயேட்சையாக போட்டியிட்டனர்.

    இந்த தேர்தலில் பெரிய அளவிலான மோசடிகளும், முறைகேடுகளும் நடைபெற்றதாக செய்திகள் வெளிவந்தன.

    பெரும் சர்ச்சைக்கு இடையே நடந்த இந்த தேர்தலுக்கு பிறகு, முடிவுகளை அறிவிப்பதிலும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தாமதம் ஏற்பட்டது.

    பிடிஐ கட்சியின் சுயேச்சை வேட்பாளர்கள் 93 இடங்களில் வென்றனர். இக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், "சன்னி இதெஹத் கவுன்சில்" (Sunny Ittehad Council) எனும் அமைப்பை உருவாக்கினர்.

    முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பிஎம்எல்-என் (PML-N) கட்சி 75 இடங்களிலும், பிலாவல் பூட்டோவின் "பாகிஸ்தான் மக்கள் கட்சி" (PPP) 54 இடங்களிலும் வெற்றி பெற்றது.


    தனிப்பெரும்பான்மை இல்லாததால் பிரதமர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவதில் சிக்கல் நீடித்து வந்தது.

    இந்நிலையில் இன்று, "நேஷனல் அசெம்பிளி" (National Assembly) என அழைக்கப்படும் பாராளுமன்றத்தின் கீழ்சபை (Lower House) பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக கூடியது.

    இந்த கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் முன்னாள் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் (Shehbaz Sharif) மீண்டும் பிரதமராக வாக்களித்தனர்.

    இதையடுத்து, பாகிஸ்தானின் பிரதமராக இரண்டாம் முறை ஷெபாஸ் ஷரீப் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக சபாநாயகர் அயாஸ் சாதிக் (Ayaz Sadiq) தெரிவித்தார்.

    336 உறுப்பினர்களை கொண்ட நேஷனல் அசெம்பிளியில் 201 வாக்குகள் பெற்று ஷெபாஸ் ஷரீப், 92 வாக்குகள் பெற்ற ஒமர் அயுப் கான் எனும் போட்டி வேட்பாளரை வென்றார்.

    "சன்னி இதெஹத் கவுன்சில்" ஒமர் அயுப் கானுக்கு ஆதரவளித்தது.

    பிரதமர் பதவிக்கு குறைந்தபட்சம் 169 ஆதரவு தேவைப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஷெபாஸ் ஷரீப், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (PML-N) கட்சியை தொடங்கியவரும், 3 முறை பாகிஸ்தான் பிரதமராகவும் இருந்தவருமான நவாஸ் ஷெரீப்-பின் இளைய சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேர்தலை ஒத்தி வைக்குமாறு இரண்டு முறை தீர்மானம் கொண்டு வரப்பட்டது
    • கேபி (KP) பிராந்திய பயங்கரவாதமும் தீர்மானத்தில் காரணமாக கூறப்பட்டுள்ளது

    2024 பிப்ரவரி 8 அன்று பாகிஸ்தான் பாராளுமன்ற 16-வது தேசிய அசெம்பிளிக்கான 342 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

    சில தினங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாராளுமன்றத்தின் மேல்சபையான செனட் உறுப்பினர்கள், தேர்தலை ஒத்தி வைக்குமாறு இரண்டு முறை தீர்மானம் கொண்டு வந்தனர்.

    நேற்று, தேர்தலை தள்ளி வைக்குமாறு 3-வது முறையாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    ஹிலாலுர் ரெஹ்மான் எனும் சுயேச்சை உறுப்பினர் கொண்டு வந்த இத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டதாவது:

    கடும் பனிப்பொழிவு மற்றும் குளிரால் மக்களால் தங்கள் ஜனநாயக கடமையை இயற்ற முடியாமல் போகலாம். மேலும், கைபர்-பக்துங்க்வா (Khyber-Pakhtunkhwa) பிராந்தியத்தில் நடைபெறும் தொடர் பயங்கரவாத தாக்குதல்கள், அப்பகுதியில் போட்டியிட உள்ள வேட்பாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. எனவே, பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் (Election Commission of Pakistan) பிப்ரவரி 8 தேர்தலை தள்ளி வைக்க வேண்டும். சம்பந்தபட்ட அனைவருக்கும் ஏற்ற ஒரு காலகட்டத்தில் தேர்தலை நடத்துவது நல்லது.

    இவ்வாறு அந்த தீர்மானம் கூறுகிறது.

    2018ல் தேர்வான பாராளுமன்றத்தின் பதவிக்காலம், கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைந்தது.

    அதை தொடர்ந்து, கடந்த 2023 நவம்பர் மாதம் நடைபெற்றிருக்க வேண்டிய தேர்தல் பல்வேறு காரணங்களால் தள்ளி போடப்பட்டது.

    அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இப்பிரச்சனையில் தலையிட்டது.

    இறுதியாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம், பிப்ரவரி 8 அன்று தேர்தல் நடைபெறும் என திட்டவட்டமாக தெரிவித்தது.

    தற்போது 3-வது முறையாக கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் என்ன இறுதி முடிவை எடுக்க போகிறது என அரசியல் விமர்சகர்கள் கவனித்து வருகின்றனர்.

    • முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் வேட்புமனுவை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
    • நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு தகுதிநீக்கம் செய்யப்பட்டவர் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    லாகூர்:

    பாகிஸ்தானில் பிப்ரவரி 8-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிடுவதற்காக முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் பிரதமருமான இம்ரான்கான் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

    பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளான லாகூர் மற்றும் மியான்வாலி ஆகிய 2 தொகுதிகளில் இம்ரான்கான் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில், இம்ரான்கானின் வேட்பு மனுக்களை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் இன்று நிராகரித்துள்ளது.

    லாகூரில் இருந்து நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலில் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது, ஏனெனில் அவர் அந்தத் தொகுதியில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர் அல்ல என்பதாலும், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு தகுதிநீக்கம் செய்யப்பட்டவர் எனவும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    2018 முதல் 2022 வரை பதவியில் இருக்கும்போது அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த குற்றத்திற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியை தழுவிய இம்ரான்கான் பிரதமர் பதவியை இழந்தார்.
    • இம்ரான்கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை விதித்தது பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்.

    இஸ்லாமாபாத்:

    இம்ரான் கான் பிரதமராக இருந்த காலத்தில் ஊழல், மோசடியில் ஈடுபட்டதாக அவர்மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. மேலும் தேர்தல் ஆணையம் அளித்த புகாரின் பேரில் தோஷகானா ஊழல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

    பாகிஸ்தான் சட்டத்தின்படி பதவிக்காலத்தில் பெறப்பட்ட பரிசுப்பொருட்களை மந்திரி சபையில் உள்ள தோஷகானா என்ற துறையிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் அந்த பொருட்களை விற்று இம்ரான்கான் தனது சொத்தாக மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுவே தோஷகானா வழக்கு என அழைக்கப்படுகிறது.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் இம்ரான் கான் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இஸ்லாமாபாத் செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர், பஞ்சாப் மாகாணம் அட்டோக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை விதித்து அந்நாட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியை தழுவிய இம்ரான்கான் பிரதமர் பதவியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் பகிரங்கமாக வாக்களித்த விவகாரத்தில் அந்நாட்டின் வருங்கால பிரதமர் இம்ரான் கான் தேர்தல் கமிஷனிடம் இன்று மன்னிப்பு கடிதம் அளித்தார். #ImranKhan #ImranKhanapology
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் 25-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ- இன்சாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

    அதை தொடர்ந்து அக்கட்சியின் தலைவரான இம்ரான்கான் பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். இவர் இஸ்லாமாபாத் எம்.பி. தொகுதி உள்பட 5 தொகுதிகளில் போட்டியிட்டு மூன்றில் வெற்றி பெற்றார்.

    தேர்தல் தினத்தன்று இஸ்லாமாபாத்  தொகுதியில் வாக்களித்த இம்ரான் கான் அனைவரும் பார்க்கும்படி பகிரங்கமாக தனது வாக்கை பதிவு செய்த போட்டோ மற்றும் வீடியோ அனைத்து பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாகிஸ்தான் தேர்தல் கமி‌ஷனில் புகார் செய்யப்பட்டது.

    தேர்தல் கமி‌ஷனின் 4  உயரதிகாரிகள் கொண்ட அமர்விடம் பதில் அளிக்கும்படி இம்ரான் கானுக்கு தலைமை தேர்தல் கமி‌ஷனர் நோட்டீஸ் அனுப்பினார்.

    அதற்கு இம்ரான் கான் சார்பில் அவரது வழக்கறிஞர் பாபர் அவான் நேரில் ஆஜராகி எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில், இம்ரான்கான் வாக்குப்பதிவு செய்த போட்டோவும், வீடியோவும் அவரது அனுமதியின்றி எடுக்கப்பட்டது.

    இம்ரான்கான் வாக்களித்த போது தொண்டர்களின் கூட்ட நெரிசலால் வாக்கை பதிவு செய்வதை மறைப்பதற்கு அமைக்கப்பட்டிருந்த திரை கீழே விழுந்துவிட்டது. எனவே பகிரங்கமாக வாக்களித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை என கூறப்பட்டிருந்தது.

    ஆனால், அவரது பதிலை தேர்தல் கமி‌ஷன் ஏற்றுக் கொள்ளவில்லை மாறாக பகிரங்கமாக வாக்களித்தற்காக இம்ரான்கான் மன்னிப்பு கேட்டு தனது கையொப்பத்துடன் பிரமாண பத்திரம்  தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

    இதைதொடர்ந்து, தேர்தல் கமிஷனின் 4 உயரதிகாரிகள் கொண்ட அமர்வின் முன்னர் இம்ரான் கானின் கையொப்பத்துடன் கூடிய பிரமாண பத்திரத்தை அவரது வழக்கறிஞர் இன்று தாக்கல் செய்தார்.

    பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்தின்படி, வெளிப்படையாக வாக்களிப்பது குற்றமாகும். இதற்கு அதிகபட்சமாக ஆறுமாத சிறை காவல் அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இவை இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. #ImranKhan #ImranKhanapology 
    பாகிஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி 116 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. #ImranKhan #PakistanGeneralPoll #ElectionCommissionofPakistan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த 25-ம் தேதி பாராளுமன்றத்தின் 272 தொகுதிகளுக்கும், 4 மாகாணங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி சுமார் 115 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த தேர்தல் முடிவுகளை நவாஸ் ஷரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி உட்பட சில எதிர்க்கட்சிகள் ஏற்க மறுப்பு தெரிவித்து வருகின்றன. தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளன. அதே சமயம் எவ்வித முறைகேடுகளும் நடக்கவில்லை என பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், இந்த தேர்தல் முடிவுகளை அதிகாரப்பூர்வமாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  அதில் 272 தொகுதிகளில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 116 தொகுதிகளில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

    66 தொகுதிகளில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இத்துடன் மாகாண தேர்தலின் முடிவுகளை அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், பஞ்சாப் மாகாணத்தில் சுமார் 129 தொகுதிகளில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. சிந்து மாகாணத்தில் 76 தொகுதிகளில் பாகிஸ்தான் மக்கள் கட்சியும், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 66 தொகுதிகளில் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியும், பலோசிஸ்தான் மாகாணத்தில் 15 தொகுதிகளில் அவாமி கட்சி வெற்றி பெற்றுள்ளதாகவும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. #ImranKhan #PakistanGeneralPoll #ElectionCommissionofPakistan
    ×