என் மலர்
நீங்கள் தேடியது "tag 114761"
- உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த பயிற்சியை உடனே தொடங்கிவிடுங்கள்.
- தினமும் கயிற்றில் குதித்து பயிற்சி பெறுவது எலும்புகளை வலுவடையச் செய்யும்.
கயிற்றில் குதிப்பது பார்ப்பதற்கு சாதாரணமாக தெரிந்தாலும் இது அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சி வகையை சார்ந்ததாகும். கயிற்றை சுழலவிட்டு துள்ளி குதிக்கும் 'ஸ்கிப்பிங்' பயிற்சியை பலரும் குழந்தைகளுக்கான விளையாட்டாகவே பார்க்கிறார்கள். சிறந்த உடற்பயிற்சி வடிவங்களில் இதுவும் ஒன்றாகும். உடற்பயிற்சி மீது ஆர்வம் இல்லாதவர்கள் கூட தினமும் ஒரு நிமிடம் ஒதுக்கினால் போதும். ஜம்பிங் ரோப், ஸ்கிப்பிங் ரோப் என்று அழைக்கப்படும் இந்த கயிறு தாண்டி குதிக்கும் பயிற்சியை செய்துவந்தால் கிடைக்கும் நன்மைகள்:
* இது சிறந்த கார்டியோ பயிற்சியாகும். உடல் உறுப்புகளின் ஒருங்கிணைப்பை மேம்படுத்தும். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்யும்.
* கயிற்றில் குதிப்பது பார்ப்பதற்கு சாதாரணமாக தெரிந்தாலும் இது அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சி வகையை சார்ந்ததாகும். கயிற்றில் துள்ளி குதிப்பது இதயத்தை வலிமையாக்கும். இதய நோய்களில் இருந்து பாதுகாக்கும்.
* கயிற்றில் குதிப்பது மன நிலையை மேம்படுத்தும். கவனம் செலுத்தும் திறனை அதிகரிக்கச் செய்யும்.
* ஸ்கிப்பிங் செய்வது உடலின் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். விரைவாக சோர்வு எட்டிப்பார்க்கும் நிலையை மாற்றிவிடும்.
* கவலை அல்லது மனச்சோர்வு அடையும் சமயத்தில் ஸ்கிப்பிங் பயிற்சி பெறலாம். அது உடல் நலனிலும், மன நலனிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
* தினமும் கயிற்றில் குதித்து பயிற்சி பெறுவது எலும்புகளை வலுவடையச் செய்யும்.
* இந்த பயிற்சியின்போது அதிக வியர்வை உற்பத்தியாகும். இதன் மூலம் உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறும். இதனால் சருமம் இயற்கையாகவே பொலிவு பெறும்.
* உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த பயிற்சியை உடனே தொடங்கிவிடுங்கள். இது மெட்டபாலிசத்தை துரிதப்படுத்தி தொப்பையை குறைக்கும்.
- உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த விரும்புபவர்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரத்ததானம் செய்வது நல்ல பலன் அளிக்கும்.
- இரத்த தானம் செய்தவருக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது.
தஞ்சாவூர்:
ரத்த தானத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 14 உலக ரத்ததான தினமாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி இன்று தஞ்சை மீனாட்சி மருத்துவமனை மற்றும் செஞ்சிலுவை சங்கம் தஞ்சை கிளை சார்பில் தஞ்சையில் உலக ரத்ததான தின விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. தஞ்சை குழந்தை இயேசு ஆலயத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி, குழந்தை இயேசு தேவாலயத்தின் பங்குத் தந்தை அம்புரோஸ், செஞ்சிலுவை சங்க ஆலோசகர் மரு.வரதராஜன் ஆகியோர் கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.
மேலும் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் பொது மேலாளர் டாக்டர் பால முருகன், ரத்த மண்டல வங்கி மருத்துவர் ஆர்த்தி, அவசர சிகிச்சை துறை தலைவர் மரு.சரவணவேல் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி மணிவாசகம் ஆகியோர் கலந்து கொண்டனர்மக்களிடம் ரத்ததானம் வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்பேரணியில் பதாகைகள் எடுத்துச் செல்லப்பட்டது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த விரும்புபவர்கள், உடற்பயிற்சி, ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்வது போன்ற விஷயங்களை மேற்கொள்வதோடு மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரத்ததானம் செய்வதும் நல்ல பலன் அளிக்கும்.
அவ்வாறு தானம் செய்யப்படும் இரத்தம், பல உயிர்களைக் காப்பாற்ற பயன்படும். குறிப்பாக இரத்த தானம் செய்தவருக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. சிறிது நேர ஓய்வுக்குப்பின் தனது அனைத்து வேலைகளையும் அவர் செய்யலாம். இந்த நடைப்பயணத்தில் நடைபயண சங்க உறுப்பினர்கள், ரோட்டரி - லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.நகரின் முக்கிய பகுதிகள் வழியாக சென்ற நடைபயணம் மீனாட்சி மருத்துவமனையின் வளா கத்தில் முடிவடைந்தது. மேலும் இந்தாண்டின் ரத்ததானம் வழங்கிய கல்லூரி களுக்கும் தன்னார்வ அமைப்புகளுக்கும் நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. நடைப்பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளை தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் சார்பில் செய்திருந்தனர்.
- உடற்பயிற்சி செய்யும்போது, நிறைய கேள்விகளும், சந்தேகங்களும் நமக்குள் எழும்.
- ஜிம்முக்கு சென்று பயிற்சி செய்பவர்களுக்கும் வழிகாட்டுகிறது, இந்த தொகுப்பு.
வீ ட்டிலேயே உடற்பயிற்சி செய்பவர்களுக்கும், ஜிம்முக்கு சென்று பயிற்சி செய்பவர்களுக்கும் வழிகாட்டுகிறது, இந்த தொகுப்பு. உடற்பயிற்சி செய்யும்போது, நிறைய கேள்விகளும், சந்தேகங்களும் நமக்குள் எழும். அவை அனைத்திற்கும் தீர்வு காண தொடர்ந்து படியுங்கள்.
பொதுவான தவறுகள்
நிறைய பேர், உடற்பயிற்சிக்கு முன்னர் சாப்பிடவேண்டிய உணவில் அக்கறை காட்டுவதில்லை. உடம்பில் எனர்ஜி இல்லாமல், உடற்பயிற்சிகளைச் செய்யக் கூடாது. உண்மையில் தசை, தொடை போன்ற பகுதிகளுக்கான பயிற்சி செய்பவர்களிலிருந்து, மன அமைதிக்காக மெடிடேஷன் செய்பவர்கள் வரை அனைவருக்கும் அவரவர் செய்யும் பயிற்சிக்கேற்ப எனர்ஜி தேவை.
உடற்பயிற்சிக்கு முன்
உடற்பயிற்சிகளை தொடங்குவதற்கு முன் நிச்சயம் சாப்பிட வேண்டும். அப்படி நீங்கள் சாப்பிடும் உணவுகள், ரத்த சர்க்கரை அளவை கணிசமாக உயர்த்துவதாக இருக்க வேண்டும். காரணம், ரத்த சர்க்கரை அளவு அதிகமாகும்போது அடுத்த சில மணி நேரங்களுக்கு உடல் எனர்ஜெட்டிக்காக இருக்கும். அந்த வகையில், 'வொர்க்-அவுட்' செய்வதற்கு முன்னர் சாப்பிடவேண்டிய உணவுகளின் பட்டியலில் ஆப்பிள், ஆரஞ்சு, பேரிக்காய், பப்பாளி, பீனட் பட்டர் தடவிய முழு தானிய ரொட்டி, ஓட்ஸ், தயிர், கிரீன் டீ, நட்ஸ் போன்றவை கட்டாயம் இருக்க வேண்டும்.
எப்போது சாப்பிடலாம்
உடற்பயிற்சி செய்யப் போவதற்கு, 40 முதல் 60 நிமிடங்களுக்கு முன்னர் சாப்பிட்டுவிட வேண்டும்.
உடற்பயிற்சிக்குப் பின்
உடற்பயிற்சி செய்யும்போது, உடலிலிருக்கும் சக்தி அனைத்தும் பயன்படுத்தப்பட்டிருக்கும். எனவே, உடற்பயிற்சிக்குப் பின்னரும் சாப்பிட வேண்டும். நீங்கள் உட்கொள்ளும் உணவுகள் அனைத்தும் எளிதில் விழுங்கக்கூடிய, அதிகம் மென்று சாப்பிட அவசியமில்லாத உணவுகளாக இருக்க வேண்டும்.
பொதுவாக, உடற்பயிற்சி செய்து முடித்ததும் பலரும் எனர்ஜிக்காக எலெக்ட்ரோலைட்ஸ், புரோட்டீன் டிரிங்ஸ் போன்றவற்றை உட்கொள்வார்கள். அவற்றுக்குப் பதிலாக தண்ணீர், இளநீர், வாழைப்பழம் போன்றவற்றை உட்கொள்ளலாம்.
'வொர்க்-அவுட்' செய்யும்போது, உடலிலிருக்கும் அமினோ அமிலம் அனைத்தும் நீங்கிவிடும் என்பதால், அமினோ அமிலம் அதிகமிருக்கும் உணவுகளை உட்கொள்ளலாம். தசைக்கான வலிமையை அதிகரிப்பதில் அமினோ அமிலத்துக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. அந்த வகையில், அவித்த முட்டை, தயிர், மோர், பால் போன்றவற்றை உட்கொள்வது மிக நல்லது. கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை முழுமையாக தவிர்த்துவிட வேண்டும்.
உடற்பயிற்சியின் போது தண்ணீர் குடிக்கலாமா?
உடற்பயிற்சிக்கு முன்னரும் பின்னரும், 2 முதல் 3 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். உடற்பயிற்சியின்போது, ஒவ்வொரு 15-20 நிமிடங்களுக்கும் சிறிது தண்ணீர் குடிக்கவும். பெரும்பாலும் பயிற்சி செய்யும்போது அதிகமாக தண்ணீர் தாகம் எடுக்கும். தாகம் எடுத்தவுடன் வேக வேகமாக தண்ணீர் அருந்திவிடாமல், கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கவும்.
புதிதாக 'ஜிம்' செல்பவர்களுக்கு...!
முதன்முறையாக உடற்பயிற்சி செய்யும் சிலர், வார்ம்-அப் செய்யாமல் நேரடியாகப் பயிற்சிகளை மேற்கொள்வதுண்டு. வார்ம்-அப் செய்யாமல், பயிற்சியைத் தொடங்கவேண்டாம். புதிதாக ஜிம் போகும் சிலர், ஆர்வத்தில் அளவுக்கதிகமாக பயிற்சி செய்வதுண்டு. கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் பயிற்சி நேரத்தையும், பயிற்சி முறைகளையும் அதிகப்படுத்துங்கள். அதுதான் உடலுக்கும் ஆரோக்கியத்துக்கும் நல்லது.
- 60 வயதைத் தாண்டியவர்களுக்கு, உடற்பயிற்சியின் அவசியம் மேலும் கூடுகிறது.
- நடைப்பயிற்சி தவிர சின்னச் சின்ன உடற்பயிற்சிகள் செய்யலாம்.
60 வயதில் உடற்பயிற்சி கூடாது என்று நினைப்பவர்கள், அந்த எண்ணத்தை விட்டுவிடுங்கள். தசைகளை ஸ்ட்ரெட்ச் செய்யவும், எலும்புகளைப் பலப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் எல்லா வயதினருக்குமே உடற்பயிற்சி அவசியம். தொடர் உடற்பயிற்சி மனநலனுக்கும் கைகொடுத்து ஸ்ட்ரெஸ்ஸை விலகச் செய்யும். சொல்லப்போனால் 60 வயதைத் தாண்டியவர்களுக்கு, உடற்பயிற்சியின் அவசியம் மேலும் கூடுகிறது. தண்டுவடப் பிரச்னைகள், இடுப்பு மூட்டுப் பிரச்னைகள் என, இந்த வயதுக்கு மேல் ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்க, அவர்கள் தினமும் தசை மற்றும் எலும்புகளை வலிமைப்படுத்தும் பயிற்சிகளைச் செய்து வருவது நல்லது.
வயது முதிர்ந்தோருக்கு நடைப்பயிற்சி என்பது இதயத்துடிப்பைச் சீராக்கவும், தசைகளையும் எலும்புகளையும் வலுப்பெறச் செய்யவும் உதவும். வீட்டில் மேடு, பள்ளமற்ற சமதளப் பகுதியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அந்தப் பகுதி மிகவும் வழுவழுப்போ, அதிகம் சொரசொரப்போ இல்லாத வகையில் இருக்க வேண்டும். எந்த இடையூறும் இன்றி நடக்கக்கூடிய வகையில் பொருள்கள் எதுவும் குறுக்கே இல்லாத பரப்பாக இருக்கலாம்.
அந்த நீண்ட பரப்பில் நேராகவும், `8' எண் வடிவிலும் நடக்கலாம். வெறும் வயிற்றில் நடக்காமல் கொஞ்சம் தண்ணீர் அருந்திக்கொள்ளலாம். முதல் பத்து நிமிடங்களுக்கு மெதுவாக நடக்கத்தொடங்கி, அடுத்த 20 நிமிடங்களில் சற்று வேகத்தை அதிகரித்துக்கொள்ளலாம். நடக்கும்போது உடலில் வலி எதையாவது உணர்ந்தால் சிறிது ஓய்வெடுத்துக்கொண்டு பின்னர் தொடரலாம். வலி தொடர்ந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். காலையிலோ, மாலை 6 மணிக்குப் பின்னரோ நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.
நடைப்பயிற்சியின்போது வெறுமனே நடக்காமல், கைகளையும் விரல்களையும் மடக்கி விரித்து அவற்றுக்கும் பயிற்சி தரலாம்.
நடைப்பயிற்சி தவிர சின்னச் சின்ன உடற்பயிற்சிகள் செய்யலாம். ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் நிரப்பி, இரண்டு கைகளுக்கும் வெயிட் லிஃப்டிங் பயிற்சி கொடுக்கலாம். தோள்களுக்கும் கைகளுக்கும் இது நல்ல பயிற்சியாக அமையும்.
ஏரோபிக், யோகா பயிற்சிகள் செய்யலாம். பிடித்த பாடல்களை மென்மையாக ஒலிக்கவிட்டு அவற்றைக் கேட்டுக்கொண்டும் பயிற்சி செய்யலாம்.
- உடற்பயிற்சி மிகவும் முக்கியமானதுதான்.
- பலருக்கு உடற்பயிற்சி செய்வது என்பது வேப்பங்காய் போல் கசக்கும்.
பலருக்கு உடற்பயிற்சி செய்வது என்பது வேப்பங்காய் போல் கசக்கும். ஆனால், உடற்பயிற்சி செய்து பழகியவர்களுக்கு, ஒரு நாள் உடற்பயிற்சி செய்யவில்லை என்றாலும் அது மிகப்பெரிய கவலையாக இருக்கும். உடல் நலம் பாதிக்கப்பட்டாலும் கூட உடற்பயிற்சி செய்யத் தவற மாட்டேன் என்று அடம்பிடிப்பார்கள்.
படுத்த படுக்கையாக இருக்கும் சூழல் ஏற்பட்டால் தவிர்த்து மற்ற நேரங்களில் உடற்பயிற்சி செய்வேன் என்று அடம்பிடிப்பார்கள். உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஓய்வாக இருப்பது கூட அவர்களுக்கு முடியாத காரியமாக இருக்கும்.
உடல் நலம் பாதிக்கப்பட்ட சூழலில் உடற்பயிற்சி செய்யலாமா என்பது பற்றிப் பார்ப்போம்.
உடல் நலம் பாதிக்கப்பட்டால், அதில் இருந்து சரி செய்ய நம்முடைய உடல் கடுமையாக பாடுபடும். கடுமையாக உழைக்கும். இந்த சூழலில் நாம் ஓய்வாக இருப்பதுதான் உடலுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய உதவி. அதனுடன் மருந்துகள் எடுத்துக்கொள்வது, நோய் பாதிப்பில் இருந்து உடல் வேகமாக குணமடைய உதவும்.
உடல் நலம் பாதிக்கப்பட்டாலும் உடற்பயிற்சி செய்வேன் என்று செய்தால், அது நோயில் இருந்து குணமாவதை நாமே தாமதம் செய்கிறோம் என்று அர்த்தம். அது மட்டுமல்ல, லேசான காய்ச்சல்தான் என்று கூறிவிட்டு ஜிம் போன்று வெளி இடங்களுக்குச் செல்வதன் மூலம் மற்றவர்களுக்கும் நோய்த் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கின்றீர்கள் என்று அர்த்தம்.
எனவே, உடல் நலம் பாதிக்கப்பட்டால் சரியாகும் வரை ஓய்வாக இருப்பது நல்லது. அது லேசான பாதிப்பாக இருந்தாலும் சரி, ஓய்வாக இருந்து, உடல் தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ள உதவி செய்ய வேண்டும். நம்முடைய உடலுக்கு நாம் உண்மை உள்ளவர்களாக இருக்க வேண்டும். உடல் நலம் சரியான பிறகு எடுத்த எடுப்பில் கடுமையான பயிற்சிகள் செய்யக் கூடாது. லேசான பயிற்சிகளுடன் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக கடினமான பயிற்சி என்ற நிலைக்கு செல்ல வேண்டும்.
தேவை எனில் மருத்துவர், உடற்பயிற்சி ஆலோசகர் ஆலோசனை பெற்று செயல்படலாம். லேசான பாதிப்பாக இல்லாமல், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற தீவிர பாதிப்பாக இருந்தால், மருத்துவர் ஆலோசனை பெற்று அதன் அடிப்படையில் செயல்படுவது நல்லது. உடற்பயிற்சி மிகவும் முக்கியமானதுதான்.
- உடற்பயிற்சியை தொடர்ந்து பின்பற்றும் விஷயத்தில் சிலர் தவறான வழிமுறைகளை கையாளுகிறார்கள்.
- உடற்பயிற்சி செய்வது உடல் எடையை குறைக்கவும் சீராக நிர்வகிக்கவும், உதவும்.
உடற்பயிற்சி என்பது தொடர் விளையாட்டு முறையை போன்றது. தினமும் தவறாமல் அதனை பின்பற்றி வர வேண்டும். உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமான உடல் அமைப்பை பேணுவதற்கான சிறந்த வழிமுறையாகும். உடல் ரீதியாக மட்டுமின்றி மன ரீதியாகவும் வலு சேர்க்கக்கூடியது. உடற்பயிற்சியை தொடர்ந்து பின்பற்றும் விஷயத்தில் சிலர் தவறான வழிமுறைகளை கையாளுகிறார்கள். சரியான முறையில் 'வொர்க் அவுட்' செய்யாதது, நேரமின்மை, சலிப்பு, உடல்நல பிரச்சினை போன்ற காரணங்களை காட்டி சில காலம் உடற்பயிற்சியை தவிர்த்துவிடுவார்கள். அல்லது இடைவெளி விட்டு தொடர்வார்கள்.
உடற்பயிற்சியை பின்பற்றுவதற்கு தடையாக இருக்கும் விஷயங்களை கருத்தில் கொள்ளாமல் உடல் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனெனில் உடற்பயிற்சி செய்வது உடல் எடையை குறைக்கவும் சீராக நிர்வகிக்கவும், உதவும். உடலில் 'ஸ்டெமினா' எனப்படும் ஆற்றல் அளவை அதிகரிக்க துணைபுரியும். பல்வேறு விதமான நோய்களில் இருந்து பாதுகாப்பு வழங்கும். மன அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும். மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆழ்ந்த தூக்கத்தை வரவழைக்கும். ஆதலால் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி முக்கியமானதாக கருதப்படுகிறது.
உடற்பயிற்சியை தடையில்லாமல் பின் தொடர்வதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
எளிமையாக தொடங்குங்கள்:
ஒரே நாளில் உடற்பயிற்சியில் சிறந்த நிலையை எட்ட முடியாது. ஆரம்பத்திலேயே கடினமான உடற்பயிற்சியை தேர்ந் தெடுத்தால் சோர்வடைந்துவிடுவீர்கள். உடலில் நீரிழப்பும் ஏற்படும். எனவே ஆரம்பத்தில் எளிமையான பயிற்சியை தொடருங்கள். அரை மணி நேரம் விறுவிறுப்பாக நடப்பது, 15 நிமிடம் நடனம் ஆடுவது அல்லது யோகா மேற்கொள்வது போன்ற பயிற்சிகளில் ஈடுபடலாம். அதன் பிறகு உடற்பயிற்சியை தொடங்கலாம். நீண்ட நாட்கள் உடற்பயிற்சி செய்து வருபவர்களும் இடையில் நிறுத்தியவர்களும் கூட இந்த முயற்சியை பின் தொடரலாம்.
எளிமையாக தொடங்கும்போது, அன்றாட வழக்கத்துடன் தொடர்ந்து பின்பற்றுவதற்கு வாய்ப்பு உண்டாகும். நீண்ட காலத்திற்கு ஆரோக்கியத்தை உறுதி செய்ய வித்திடும். எடை இழப்பு இலக்கை அடைவதற்கான ஒரு கருவியாக உடற்பயிற்சியை கருதாமல் வாழ்க்கை முறை தேர்வாக ஏற்று தினமும் கடைப் பிடிக்க வேண்டும்.
சரியான உடற்பயிற்சியை தேர்ந்தெடுங்கள்:
உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் ஒருவித சலிப்பு காரணமாக சிலர் பாதியிலேயே நிறுத்திவிடுவார்கள். சரியான உடற் பயிற்சியை தேர்ந்தெடுக்காததுதான் அதற்கு காரணம். நிறைய பேர் தங்கள் நண்பர் ஜிம்முக்கு செல்கிறார் என்பதற்காக தானும் சேர்ந்துவிடுவார்கள். நண்பர் மேற்கொள்ளும் கடுமையான பயிற்சிகளை பார்த்து தானும் மேற்கொள்வதற்கு விரும்புவார்கள். அதுபோன்ற முயற்சியில் ஈடுபடாமல் தங்கள் உடல் வாகுக்கு பொருத்தமான 'வொர்க் அவுட்'டை கண்டறிந்து செயல்பட வேண்டும்.
ஏரோபிக் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்:
ஒரே விதமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். அவை சலிப்பை ஏற்படுத்திவிடும். ஏரோபிக்ஸ் பயிற்சிகள், உடல் வலிமையை அதிகரிக்கச் செய்யும் பயிற்சிகள் என வெவ்வேறு பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும்.
நேரம் ஒதுக்குங்கள்:
உடற்பயிற்சியை தவிர்ப்பதற்கு நேரமின்மையை பலர் காரணமாக முன்வைக்கிறார்கள். அன்றாடம் செய்யும் வேலைகளுக்கு நேரம் ஒதுக்குவதுபோல உடற்பயிற்சிக்கும் போதிய நேரம் ஒதுக்க வேண்டும். உடற்பயிற்சிக்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கினால், மற்ற விஷயங்களுக்கு தானாகவே நேரம் கிடைத்துவிடும். ஏனெனில் உடற்பயிற்சி செய்வதால் மந்த உணர்வு நீங்கும். எந்த வேலையையும் சுறுசுறுப்பாக செய்து விட முடியும்.
நண்பர்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்:
தனிமையில் உடற்பயிற்சி செய்வது சில காலத்திற்கு பிறகு சலிப்புணர்வை ஏற்படுத்தக்கூடும். நண்பர்களுடன் சேர்ந்து குழுவாக உடற்பயிற்சி செய்வது கூடுதல் நன்மைகளை தரும். உடற்பயிற்சி செய்வதை குறிக்கோளாக கடைப்பிடிக்க தொடங்கிவிடுவீர்கள். அவர்களுடன் சேர்ந்து புதிய உடற் பயிற்சிகளையும் முயற்சிக்க பழகிவிடுவீர்கள்.
சத்தான உணவை உண்ணுங்கள்:
உடல் நலத்துக்கு உடற்பயிற்சி முக்கியமானது, அதுபோல் உணவும் அவசியமானது. எனவே, உடற்பயிற்சி செய்யதொடங்கும்போது, உணவிலும் கவனம் செலுத்துங்கள். பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் சமச்சீரான உணவை உண்ணுங்கள்.
போதுமான தண்ணீர் குடிப்பதும் ஆரோக்கியத்திற்கு உகந்தது. தினமும் குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீர் பருகுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு 'வார்ம் அப்' பயிற்சியை தவறாமல் மேற்கொள்ளுங்கள். உடற் பயிற்சி செய்து முடித்த பிறகு போதிய ஓய்வு எடுக்கவும் மறக்காதீர்கள்.
- ஓடும் முறைகளிலேயே, சில வித்தியாசங்கள் இருக்கின்றன.
- ஜாக்கிங், ரன்னிங், ஸ்பிரின்டிங்... மூன்றுக்குமான வித்தியாசங்களை தெரிந்து கொள்வோமா...?
உடற்பயிற்சிக்காக சிலர் நடக்கிறார்கள். சிலர் ஓடுகிறார்கள். வாக்கிங் மற்றும் ஜாக்கிங் இவை இரண்டிற்கும் நமக்கு வித்தியாசம் தெரியும். ஆனால் ஓடும் முறைகளிலேயே, சில வித்தியாசங்கள் இருக்கின்றன. ஜாக்கிங், ரன்னிங், ஸ்பிரின்டிங்... இப்படி மூன்று பெயர்களில் அழைக்கிறார்கள். இவை மூன்றுக்குமான வித்தியாசங்களை தெரிந்து கொள்வோமா...?
ஜாக்கிங் : ஜாக்கிங் என்பது வேக நடை. இதில் ஓடுவதற்கு பதிலாக வேகமாக நடக்கிறோம். மற்றவற்றை ஒப்பிடும்போது, இது குறைவான ஆற்றல் கொண்ட உடற்பயிற்சி. எப்பொழுது நீங்கள் ஜாக்கிங் செல்கிறீர்களோ அப்பொழுது உங்களது வேக அளவு ஒரு மைல் தூரத்திற்கு 10 நிமிடம் என்ற கணக்கில் இருக்கும். உங்களது வேகம் அதை விட அதிகமானால், அது 'ரன்னிங்' பயிற்சியாகிவிடும். அதனால் மிதமான வேகத்தை பராமரிக்க வேண்டும். மேலும் ஜாக்கிங் செய்யும்போது நீங்கள் சீராக சுவாசிப்பதும் அவசியம். அப்போதுதான், இதயத்துடிப்பு சாதாரணமாக இருக்கும். அதிக தொலைவிற்கு ஜாக்கிங் செய்ய உதவும். உடலில் கார்டிசால் அளவை ஜாக்கிங் குறைக்கும். மேலும் இதய ஆரோக்கியத்திற்கு இது சிறந்ததாகும்.
ரன்னிங் : இது ஓட்டப்பயிற்சி. உங்கள் உடலின் இயல்பான வேகத்தில் ஓடுவதுதான் ரன்னிங். இது ஜாக்கிங்கை விட இருமடங்கு ஆற்றல் கொண்ட உடற்பயிற்சி. அதனால் அதிக கலோரிகளை எரிக்க முடியும். ஆனால் ஜாக்கிங்கைவிட, ரன்னிங் பயிற்சிக்கு அதிக ஆற்றலும், வெகுநாள் பயிற்சியும் அவசியம். உங்களது கால் களின் உறுதிக்கு ரன்னிங் உதவியாக இருக்கும். மேலும் இதய ஆரோக்கியத்திற்கும் சிறந்ததாக அமையும்.
* ஸ்பிரின்டிங் : தன் இயல்பான ஓட்டத்திறனைவிட, சற்று வேகமாக ஓடுவதுதான் ஸ்பிரின்டிங். இதில் தனது வழக்கமான ஓட்ட வேகத்தை விட அதிகபட்ச வேகத்தை சீராக பராமரிக்க வேண்டும். மேலும் ஸ்பிரின்டிங்கில் செயல்பட அதிக ஆற்றல் தேவைப்படும். இது குறைந்த தூரத்தை வேகமாக கடக்க உதவும். இந்த உடற்பயிற்சியானது அதிகபட்ச கலோரிகளை எரிக்கவும், நுரையீரலின் செயல்பாட்டை அதிகப் படுத்தவும் உதவும். ஸ்பிரின்டிங் இளைஞர்களின் எடை குறைப்பு முயற்சியை விரைவாக செயல்படுத்த சிறந்ததாகும்.
- ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி முக்கியமானதாக கருதப்படுகிறது.
- ஒரே விதமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
உடல் ரீதியாக மட்டுமின்றி மன ரீதியாகவும் வலு சேர்க்கக்கூடியது. உடற்பயிற்சியை தொடர்ந்து பின்பற்றும் விஷயத்தில் சிலர் தவறான வழிமுறைகளை கையாளுகிறார்கள். சரியான முறையில் 'வொர்க் அவுட்' செய்யாதது, நேரமின்மை, சலிப்பு, உடல்நல பிரச்சினை போன்ற காரணங்களை காட்டி சில காலம் உடற் பயிற்சியை தவிர்த்துவிடுவார்கள். அல்லது இடைவெளி விட்டு தொடர்வார்கள். உடற்பயிற்சியை பின்பற்றுவதற்கு தடையாக இருக்கும் விஷயங்களை கருத்தில் கொள்ளாமல் உடல் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
ஏனெனில் உடற்பயிற்சி செய்வது உடல் எடையை குறைக்கவும் சீராக நிர்வகிக்கவும், உதவும். உடலில் 'ஸ்டெமினா' எனப்படும் ஆற்றல் அளவை அதிகரிக்க துணைபுரியும். பல்வேறு விதமான நோய்களில் இருந்து பாதுகாப்பு வழங்கும். மன அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும். மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆழ்ந்த தூக்கத்தை வரவழைக்கும். ஆதலால் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி முக்கியமானதாக கருதப்படுகிறது.
எளிமையாக தொடங்குங்கள்: ஒரே நாளில் உடற்பயிற்சியில் சிறந்த நிலையை எட்ட முடியாது. ஆரம்பத்திலேயே கடினமான உடற்பயிற்சியை தேர்ந் தெடுத்தால் சோர்வடைந்துவிடுவீர்கள். உடலில் நீரிழப்பும் ஏற்படும். எனவே ஆரம்பத்தில் எளிமையான பயிற்சியை தொடருங்கள். அரை மணி நேரம் விறுவிறுப்பாக நடப்பது, 15 நிமிடம் நடனம் ஆடுவது அல்லது யோகா மேற்கொள்வது போன்ற பயிற்சிகளில் ஈடுபடலாம். அதன் பிறகு உடற்பயிற்சியை தொடங்கலாம். நீண்ட நாட்கள் உடற்பயிற்சி செய்து வருபவர்களும் இடையில் நிறுத்தியவர்களும் கூட இந்த முயற்சியை பின் தொடரலாம். எளிமையாக தொடங்கும்போது, அன்றாட வழக்கத்துடன் தொடர்ந்து பின்பற்றுவதற்கு வாய்ப்பு உண்டாகும். நீண்ட காலத்திற்கு ஆரோக்கியத்தை உறுதி செய்ய வித்திடும். எடை இழப்பு இலக்கை அடைவதற்கான ஒரு கருவியாக உடற்பயிற்சியை கருதாமல் வாழ்க்கை முறை தேர்வாக ஏற்று தினமும் கடைப் பிடிக்க வேண்டும்.
சரியான உடற்பயிற்சியை தேர்ந்தெடுங்கள்: உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் ஒருவித சலிப்பு காரணமாக சிலர் பாதியிலேயே நிறுத்திவிடுவார்கள். சரியான உடற்பயிற்சியை தேர்ந்தெடுக்காததுதான் அதற்கு காரணம். நிறைய பேர் தங்கள் நண்பர் ஜிம்முக்கு செல்கிறார் என்பதற்காக தானும் சேர்ந்துவிடுவார்கள். நண்பர் மேற்கொள்ளும் கடுமையான பயிற்சிகளை பார்த்து தானும் மேற்கொள்வதற்கு விரும்புவார்கள். அதுபோன்ற முயற்சியில் ஈடுபடாமல் தங்கள் உடல் வாகுக்கு பொருத்தமான 'வொர்க் அவுட்'டை கண்டறிந்து செயல்பட வேண்டும்.
ஏரோபிக் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்: ஒரே விதமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். அவை சலிப்பை ஏற்படுத்திவிடும். ஏரோபிக்ஸ் பயிற்சிகள், உடல் வலிமையை அதிகரிக்கச் செய்யும் பயிற்சிகள் என வெவ்வேறு பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும்.
நேரம் ஒதுக்குங்கள்: உடற்பயிற்சியை தவிர்ப்பதற்கு நேரமின்மையை பலர் காரணமாக முன்வைக்கிறார்கள். அன்றாடம் செய்யும் வேலைகளுக்கு நேரம் ஒதுக்குவதுபோல உடற்பயிற்சிக்கும் போதிய நேரம் ஒதுக்க வேண்டும். உடற்பயிற்சிக்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கினால், மற்ற விஷயங்களுக்கு தானாகவே நேரம் கிடைத்துவிடும். ஏனெனில் உடற்பயிற்சி செய்வதால் மந்த உணர்வு நீங்கும். எந்த வேலையையும் சுறுசுறுப்பாக செய்து விட முடியும்.
நண்பர்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்: தனிமையில் உடற்பயிற்சி செய்வது சில காலத்திற்கு பிறகு சலிப்புணர்வை ஏற்படுத்தக்கூடும். நண்பர்களுடன் சேர்ந்து குழுவாக உடற்பயிற்சி செய்வது கூடுதல் நன்மைகளை தரும். உடற்பயிற்சி செய்வதை குறிக்கோளாக கடைப்பிடிக்க தொடங்கிவிடுவீர்கள். அவர்களுடன் சேர்ந்து புதிய உடற் பயிற்சிகளையும் முயற்சிக்க பழகிவிடுவீர்கள்.
சத்தான உணவை உண்ணுங்கள்: உடல் நலத்துக்கு உடற்பயிற்சி முக்கியமானது, அதுபோல் உணவும் அவசியமானது. எனவே, உடற்பயிற்சி செய்யதொடங்கும்போது, உணவிலும் கவனம் செலுத்துங்கள். பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் சமச்சீரான உணவை உண்ணுங்கள். போதுமான தண்ணீர் குடிப்பதும் ஆரோக்கியத்திற்கு உகந்தது. தினமும் குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீர் பருகுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு 'வார்ம் அப்' பயிற்சியை தவறாமல் மேற்கொள்ளுங்கள். உடற் பயிற்சி செய்து முடித்த பிறகு போதிய ஓய்வு எடுக்கவும் மறக்காதீர்கள்.
- வார்ம் அப் பயிற்சிகள் செய்துவிட்டுத்தான் உடற்பயிற்சிகளைத் தொடங்க வேண்டும்.
- மனதுக்கு திருப்தியும் உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும்.
உடற்பயிற்சி ஆரம்பிப்பதற்கு முன்பு வார்ம் அப் பயிற்சிகள் அவசியம். வார்ம் அப் என்றதும் நிறையபேர் ஸ்ட்ரெட்ச்சிங் பயிற்சிகளை நினைத்துக்கொள்கின்றனர். இது தவறு.
ஸ்ட்ரெட்ச்சிங் பயிற்சியானது தசைகளை நீட்டுகிறது. ஓய்வாக இருக்கும் நம்முடைய தசைகளுக்குத் திடீரெனக் கடினமான பயிற்சி அளிக்கும்போது உள்காயங்கள் ஏற்படலாம். எனவே, வார்ம் அப் பயிற்சிகள் செய்துவிட்டுத்தான் உடற்பயிற்சிகளைத் தொடங்க வேண்டும்.
நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, நீந்தும் பயிற்சி, ஏரோபிக்ஸ், பளு தூக்கும் உடற்பயிற்சிக் கூடம், உங்களுக்கு பிரியப்பட்ட எந்த விளையாட்டும் ஆகட்டும்… இவற்றைச் செய்வதற்கு முன்பும் (Before warm up) ஓடி களைத்த பின்பும் (Cooling Down) எலும்புகளின் அனைத்து இணைப்புகளையும், எல்லா தசை மண்டலங்களையும், உடலின் தோலையும் சுருக்கி – நீட்டும் (Stretching) பயிற்சி மிகவும் முக்கியமானது.
வார்ம் - அப் செய்யும்போதே நம் உடல் வெப்பமாவதை நம்மால் உணரமுடியும். அந்த நிலை வரும்வரை நாம் தொடர வேண்டும்.
அப்போதுதான் அட்ரினலின் போன்ற பல ஹார்மோன்கள் சுரக்கும். 'அட்ரினலின்' மகிழ்ச்சிக்கான ஹார்மோன் ஆகும்.
'ஹேப்பி ஹார்மோன்ஸ்' சுரப்பதால் மைண்ட் ரிலாக்ஸ் ஆகும்.
உடலில் உள்ள கொழுப்பு அமிலங்கள் கரைந்து உடலுக்குத் தேவையான ஹார்போஹைட்ரேட் கிடைக்கும். எந்த ஒரு செயலைச் செய்தாலும் நேர்த்தியாக செய்யும் பழக்கம் உருவாகும்.
விரக்தி மனநிலை குறையும்.
நேர்மறையான எண்ணங்கள் அதிகரிக்கும்.
தேவையற்ற கவலைகள், பயம், கெட்ட எண்ணங்கள், தேவையற்ற பதற்றம் குறையும்.
விழிப்புஉணர்வு, தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
வார்ம் - அப் செய்து முடிக்கும்போது மனதுக்கு திருப்தியும் உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும்.
வார்ம் - அப் எவ்வளவு அவசியமோ அதே அளவுக்கு முடிந்ததும் கூல் -டவுன் அவசியம். வார்ம் அப்பில் செய்த அதே ஸ்ட்ரெட்ச்சிங் தான் கூல் - டவுனிலும் செய்யவேண்டும்.
- ஸ்ட்ரெச்சிங் செய்யும்போது உடலின் ஒவ்வொரு பகுதிகளிலும் ரத்த ஓட்டம் வேகமாகும்.
- பொறுமையாக ஸ்ட்ரெச்சிங் செய்யவேண்டும்.
உடற்பயிற்சி, விளையாட்டு போன்ற செயல்பாடுகளுக்கு மனரீதியாக நாம் தயாராகிவிட்டாலும், நம் உடல் தயாராக வேண்டியது மிக அவசியம். கிரிக்கெட், ஃபுட்பால், பளுதூக்குதல் என எந்த விளையாட்டும் துவங்குவதற்கு முன்பாக விளையாட்டு வீரர்கள் மைதானத்தில் மித வேகத்தில் ஓடிக் கொண்டிருப்பார்கள். கையைக் காலை தூக்கி 'ஸ்ட்ரெச்' செய்து தயார் ஆகிக் கொண்டிருப்பார்கள். உடற்பயிற்சி, விளையாட்டு இப்படி உடலின் எந்த ஒரு தீவிர செயல்பாட்டுக்கும் முன்பாக நம் உடலை அதற்குத் தயார் செய்ய 'வார்ம் - அப்' செய்யவேண்டியது அவசியம்.
"வார்ம் - அப், உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதற்காக செய்யப்படுவது. இதில் ஸ்ட்ரெச்சிங் முக்கியமான ஒன்று. ஸ்ட்ரெச்சிங் செய்யும்போது உடலின் ஒவ்வொரு பகுதிகளிலும் ரத்த ஓட்டம் வேகமாகும். அதனால், தசைகளில் உள்ள அடுக்குகள் (Layers) திறக்கும். தேவையான அளவுக்கு ஆக்சிஜனும் கிடைக்கும். இதனை உடலைத் தூண்டும் பயிற்சிகள் என்று சொல்லலாம் (Golgi tendon stimulation).
அதிக எடையான ஒரு பொருளைத் தூக்குவதற்கு முன்போ, அல்லது அதிக வேகத்தில் ஓடுவதற்கு முன்போ இதுபோன்ற ஸ்ட்ரெச்சிங் மிக அவசியம். இதனால் தசைக்கும், மூளைக்கும் இடையே ஒருங்கிணைவு ஏற்படும். தசைகளுக்கு அதிகமாக ரத்தம் செல்லும்போது எந்த ஒரு வேலையையும் அதிக நேரம் செய்யமுடியும். திசுக்களில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்போது காயங்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
தசைகளுக்கு, தசை நார்களுக்கு (ligament) அதிகமாக ரத்தம் செல்லும்போது உடலின் நெகிழ்வுத்தன்மையும் (Flexibility ), மூட்டுக்களின் இயக்கமும் (Range of motion ) நன்றாக இருக்கும்.
15 நிமிடம் முதல் 30 நிமிடங்கள் வரை கண்டிப்பாக வார்ம் - அப் செய்யவேண்டும். அப்போதுதான் தசைகள் தயாரான நிலைக்கு வரும் (Muscle accommodation). அதற்குப் பிறகுதான் மற்ற தீவிரமான உடற்பயிற்சிகளில், விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டும். வாக்கிங் போவதாக இருந்தால் கூட ஸ்ட்ரெச்சிங் மிக அவசியம்.
ஸ்ட்ரெட்ச்சிங் வகைகள் :
கை, கால், கழுத்து, தொடை, எழும்பு மூட்டு, தோள்பட்டை என்று உடலின் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் தனித்தனி வார்ம் - அப்கள் உள்ளன. ஒரே இடத்தில் நின்று கொண்டு செய்யக்கூடியவை ஸ்டாடிக் ஸ்ட்ரெச்சிங் (Static stretching ). நகர்ந்துகொண்டு, ஓடிக்கொண்டு செய்வது டைனமிக் ஸ்ட்ரெச்சிங் (Dynamic Stretching). இதில் ஸ்டாடிக் ஸ்ட்ரெச்சிங் அதிக நன்மைகளைத் தரக்கூடியது. உட்கார்ந்த இடத்தில் இருந்துகொண்டே கூட ஸ்ட்ரெச்சிங் செய்யமுடியும்.
ஹேம்ஸ்டிரிங் ஸ்ட்ரெச்சிங் (Hamstring stretching), குவாட்ரிசெப்ஸ் ஸ்ட்ரெச்சிங் (quadriceps stretch) போன்றவை மிகவும் எளிமையானவை, அதிக பயன் தரக்கூடியவவை.
அதிலும் கண்டஞ்சதைக்கான ஸ்ட்ரெச்சிங் (calf muscles stretching) மிகவும் முக்கியமானது. காலுக்குக் கீழே உடலின் உறுப்புக்கள் அனைத்துக்கும் ரத்தத்தை கொண்டு செல்வதற்கான நரம்புகள் கண்டஞ்சதையில்தான் உள்ளன. இதனால், கண்டஞ்சதை, 'உடலின் இரண்டாவது இதயம்' என்று அழைக்கப்படுகிறது.
எந்த ஒரு செயலைச் செய்தாலும் முதலில் சோர்வடைவது கண்டஞ்சதைதான். இந்த ஸ்ட்ரெச்சிங் செய்துவிட்டால் உடல் எளிதாகச் சோர்வடைவதை தவிர்க்க முடியும்.
ஸ்ட்ரெட்ச்சிங் எப்படி இருக்கக் கூடாது?
கைக்கு ஒருநாள், காலுக்கு ஒருநாள் என்று தனித்தனியாகச் செய்யக் கூடாது. ஒட்டுமொத்த உடலுக்கானதாக ஸ்ட்ரெச்சிங் இருக்கவேண்டும்.
பொறுமையாக ஸ்ட்ரெச்சிங் செய்யவேண்டும். செய்யும்போது சுவாசம் ஆழ்ந்த நிலையிலும் ( Deep Breathing ) நிதானமாகவும் இருக்கவேண்டும்.
கடமைக்கு ஐந்து நிமிடங்கள் செய்துவிட்டு அடுத்த வேலைக்குப் போய்விடக் கூடாது. தசைகளின் வெப்பநிலை அதிகரிக்கும் அளவுக்கு வார்ம் - அப் செய்யவேண்டும்.
- 30 நிமிடங்கள் வலிமையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
- தினமும் 3 மைல்கள் நடக்க வேண்டும்.
உங்களுக்கு பிடித்திருக்கு மிகவும் எளிதாக இருக்கு என்பதற்காக, ஒரே பயிற்சியை தொடர்ந்து மேற்கொண்டு இருத்தல் கூடாது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், சவாலாக இருக்கும் வகையிலான பயிற்சிகளை அதிகளவு மேற்கொள்ள வேண்டும். மாதத்திற்கு ஒருமுறையாவது,பயிற்சிகளை மாற்றிக்கொண்டே இருத்தல் வேண்டும். இதில் இதய பாதுகாப்பு பயிற்சிகளும் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும். அப்போது தான் நமக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
வாரம் இரண்டு அல்லது 3 முறை ஜிம்முக்கு செல்வது, இதய பராமரிப்புக்கு வழிவகுக்கும் என்றபோதிலும், உடல் எடையை குறைக்க திட்டம் இட்டுள்ளவர்கள், தினமும் ஜிம்முக்கு சென்று கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ளுதல் அவசியம் ஆகும். தினமும் 3 மைல்கள் நடக்க வேண்டும், அல்லது ஓட வேண்டும் அல்லது சைக்கிளிங் செய்ய வேண்டும். அல்லது 30 நிமிடங்கள் வலிமையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதை அன்றாட பழக்கம் ஆக்கிக்கொள்ள வேண்டும். நன்கு வியர்வை வரும்வரை கடுமையாக பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதை குறிப்பெடுத்து கொள்ள வேண்டும். எந்தளவிற்கு வியர்வையின் அளவு அதிகரிக்கிறேதோ, அந்த வேகத்திற்கு உங்களது உடல் எடை குறையும் என்பதை எந்த தருணத்திலும் மறக்கக் கூடாது.
வெறும் வயிற்றில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டால், உடல் எடை குறைந்து விடும் என்ற தவறான கருத்தை பலர் தங்கள் மனதில் நிலைநிறுத்தி உள்ளனர். இது மிகவும் தவறான போக்கு ஆகும். கடுமையான பயிற்சிகளை மேற்கொள்வதற்கு 1 மணிநேரம் முன்பு, கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொண்டால், நமது பயிற்சிகள் சிறப்பாக அமைவதோடு, நாம் எதிர்பார்த்த பலன்கள் கண்கூடாக கிடைப்பதை காணலாம். இந்த தருணத்தில்,கொழுப்பை குறைக்கும் பயிற்சிகளை நாம் தவறாது மேற்கொள்ள வேண்டும்.
நானும் ஜிம்முக்கு போறேன் பேர்வழி என்று வலு குறைந்த பயிற்சிகளை மட்டுமே செய்துவந்தால், உடல் எடை மட்டுமல்ல, எந்த நற்பலன்களும் நமக்கு கிடைக்காது என்பதை நாம் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். கடுமையான உடற்பயிற்சிகள் செய்து நமது உடலை எந்தளவிற்கு வருத்தி செய்கிறோமோ, அந்த அளவிற்கான நற்பலன்களை நாம் நிச்சயம் பெற முடியும்.
அதிக எடையிலான பளுவை தூக்கி பயிற்சி செய்வதன் மூலம், அது நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துகிறது. தசைப்பிடிப்புகளை உறுதி செய்து, நமது உடல் எடையில் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்த உதவுகிறது.
150 பவுண்டு எடை கொண்ட ஒருவர், டிரெட்மில்லில் 5 அல்லது 6 மீட்டர் பெர் ஹவரில் பயிற்சி மேற்கொண்டால்ல, அவரது உடலில் உள்ள கலோரியில் 25 சதவீதம் எரிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. உங்களது வேகம் அதிகரிக்க அதிகரிக்க உடல் எடையில் அதிக மாற்றத்தை காணலாம்.
கடினமான பயிற்சிகளுக்கு இடையே யோகா, முதுகுப்பயிற்சி உள்ளிட்ட இலகுவான பயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதய பாதுகாப்பு பயிற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
- முதலில் உடற்பயிற்சி பற்றி ஒரு தெளிவு அவசியம்.
- தகுதி பெற்ற பயிற்சியாளர் இருக்கிறாரா என்பதை கவனிக்க வேண்டும்.
நாகரீக மாற்றம், புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் காரணமாக இன்று நவீன உடற்பயிற்சிக்கூடங்கள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய உடற்பயிற்சி கூடங்களில் மல்டி பெஞ்ச், டிரெட் மில் ரன்னிங் மெஷின், பெஞ்ச் பிரஸ் என பலவிதமான நவீன உபகரணங்கள் உள்ளன. இதுமட்டுமில்லாமல் மல்டி ஸ்டேஷன் எக்யூப்மென்ட்ஸ்களும் உள்ளன.
இதில் 4 ஸ்டேஷன் எக்யூப்மென்ட்ஸ், 6 ஸ்டேஷன் எக்யூப்மென்ட்ஸ், 12 ஸ்டேஷன் எக்யூப்மென்ட்ஸ் எனப் பல வகையான உடற்பயிற்சி கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள். உடல் எடையைக் குறைக்கவும், அதிகரிக்கவும் தனித்தனியே வசதி இருக்கிறது. இவ்வாறு, அனைத்து வசதிகளுடன் இந்த நவீன உடற்பயிற்சிக் கூடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதால் உடலைக் கட்டுகோப்பாக வைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் இந்த பயிற்சி கூடங்களை நாடி செல்கின்றனர்.
முக்கியமாக பளு தூக்குதல், தடகளம், கால்பந்து, நீச்சல், வாலிபால், பேஸ்கட்பால், கிரிக்கெட் உட்பட பலவிதமான போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் அதிகம் செல்கின்றனர். அப்படி செல்கிறவர்கள் சிலவற்றைக் கவனிக்க வேண்டும்'.
''முதலில் உடற்பயிற்சி பற்றி ஒரு தெளிவு அவசியம். தனக்கு என்ன மாதிரியான பயிற்சிகள் அவசியம், என்னென்ன உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும் என்னென்ன பயன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எத்தனை மணி நேரம் பயிற்சி செய்ய வேண்டும் என்ற தெளிவும் அவசியம். மணிக்கணக்காக பயிற்சிகள் செய்வது ஆரோக்கியமானது இல்லை. நவீன உடற்பயிற்சிக் கூடங்களில் பலதரப்பட்ட உபகரணங்கள் இருப்பதால் அத்தனையையும் நாம் பயன்படுத்தியாக வேண்டும் என்று அவசியம் இல்லை.
முக்கியமாக, உடற்பயிற்சிக்கூடத்தில் அவற்றையெல்லாம் விளக்கி சொல்வதற்கும், உங்களை வழிநடத்துவதற்கும் தகுதி பெற்ற பயிற்றுவிப்பாளர் இருக்கிறாரா என்பதை கவனிக்க வேண்டும். ஏனெனில், உடற்பயிற்சி செய்வதில் பல நுட்பமான விஷயங்கள் இருக்கின்றன. வார்ம்அப் செய்த பிறகு உடலை வளையும் தன்மை உடையதாக செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் உள்காயங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு.
ஆனால், இன்றைய நவீன உடற்பயிற்சிக் கூடங்களில் எண்ணற்ற உபகரணங்கள் இருந்தாலும் அதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கிறது. ஏ.சி. வசதியுடன் கூடிய அறையில் வியர்வை வெளியேறாமல், வலி இல்லாமல் உடற்பயிற்சி செய்வதால் முழுமையான பயன் இல்லை. அதேபோல் நல்ல காற்று, சூரிய ஒளி நுழைய முடியாத அறையில் உடற்பயிற்சி செய்யும் வழக்கமும் தவறானதே.
இதனால் எலும்பின் வலிமைக்குப் போதுமான வைட்டமின் டி கிடைக்காமல் போகும். உடற்பயிற்சியால் தசைகள் வலுப்பெற்றிருந்தாலும் எலும்புகள் பலவீனமாகவே இருக்கும். இந்த குறைபாட்டை சரி செய்ய கால்சியம் மாத்திரைகள் சாப்பிடுவதாலும் பெரிய பலன் இல்லை. இந்தக் குறைபாடுகளை எல்லாம் தவிர்க்க முடிந்தவரை காற்றோட்டமுள்ள, சூரிய வெளிச்சம் படுகிற நவீன உடற்பயிற்சிக் கூடங்களைத் தேர்ந்தெடுப்பதே சரியானது.






