search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலக ரத்ததான தின விழிப்புணர்வு நடைபயணம்
    X

    ரத்ததானம் வழங்கிய கல்லூரிகள், தன்னார்வ அமைப்புகளுக்கும் நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    உலக ரத்ததான தின விழிப்புணர்வு நடைபயணம்

    • உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த விரும்புபவர்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரத்ததானம் செய்வது நல்ல பலன் அளிக்கும்.
    • இரத்த தானம் செய்தவருக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது.

    தஞ்சாவூர்:

    ரத்த தானத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 14 உலக ரத்ததான தினமாக கொண்டாடப்படுகிறது.

    அதன்படி இன்று தஞ்சை மீனாட்சி மருத்துவமனை மற்றும் செஞ்சிலுவை சங்கம் தஞ்சை கிளை சார்பில் தஞ்சையில் உலக ரத்ததான தின விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. தஞ்சை குழந்தை இயேசு ஆலயத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி, குழந்தை இயேசு தேவாலயத்தின் பங்குத் தந்தை அம்புரோஸ், செஞ்சிலுவை சங்க ஆலோசகர் மரு.வரதராஜன் ஆகியோர் கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.

    மேலும் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் பொது மேலாளர் டாக்டர் பால முருகன், ரத்த மண்டல வங்கி மருத்துவர் ஆர்த்தி, அவசர சிகிச்சை துறை தலைவர் மரு.சரவணவேல் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி மணிவாசகம் ஆகியோர் கலந்து கொண்டனர்மக்களிடம் ரத்ததானம் வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்பேரணியில் பதாகைகள் எடுத்துச் செல்லப்பட்டது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த விரும்புபவர்கள், உடற்பயிற்சி, ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்வது போன்ற விஷயங்களை மேற்கொள்வதோடு மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரத்ததானம் செய்வதும் நல்ல பலன் அளிக்கும்.

    அவ்வாறு தானம் செய்யப்படும் இரத்தம், பல உயிர்களைக் காப்பாற்ற பயன்படும். குறிப்பாக இரத்த தானம் செய்தவருக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. சிறிது நேர ஓய்வுக்குப்பின் தனது அனைத்து வேலைகளையும் அவர் செய்யலாம். இந்த நடைப்பயணத்தில் நடைபயண சங்க உறுப்பினர்கள், ரோட்டரி - லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.நகரின் முக்கிய பகுதிகள் வழியாக சென்ற நடைபயணம் மீனாட்சி மருத்துவமனையின் வளா கத்தில் முடிவடைந்தது. மேலும் இந்தாண்டின் ரத்ததானம் வழங்கிய கல்லூரி களுக்கும் தன்னார்வ அமைப்புகளுக்கும் நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. நடைப்பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளை தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் சார்பில் செய்திருந்தனர்.

    Next Story
    ×