search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரம்"

    • அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் 10 கோடி மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
    • ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 3 கோடி மரக்கன்று நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    கவுகாத்தி:

    அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    3 முதல் 4 ஆண்டுகளில் 10 கோடி மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயித்துள்ளோம். இது வனப்பகுதியை 2 சதவீதம் அதிகரிக்க உதவும். இதனால் அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளில் சுற்றுச்சூழலில் நமக்கு சாதகமான தாக்கத்தைக் காண்போம்.

    வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 3 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு ஒரே நாளில் ஒரு கோடி மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 1.12 கோடி மரக்கன்றுகளை நட்டு 90 சதவீதம் உயிர் பிழைத்துள்ளது.

    மரம் நடும் பிரசாரத்தை செயல்படுத்த மாநில அரசு ஏற்கனவே ராணுவம், விமானப்படை, பள்ளிகள், கல்லூரிகள், சுயஉதவி குழுக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு ஏஜென்சிகள் மற்றும் மத்தியப் படைகளை இணைத்துள்ளது.

    மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காடுகளை அகற்றி மீட்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் காடு வளர்ப்பு இயக்கங்களை அரசு மேற்கொண்டு வருகிறது என தெரிவித்தார்.

    • படுகாயமடைந்த மனைவி சரளா தேவி, காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • முறிந்து விழுந்த மரத்தை முழுவதுமாக வெட்டி அங்கிருந்து அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஹைதராபாத்தில் உள்ள பொலராம் அரசு மருத்துவமனைக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த தம்பதி மீது மரம் முறிந்து விழுந்ததில் கணவர் ரவீந்திரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    படுகாயமடைந்த மனைவி சரளா தேவி, காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சரளா தேவி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    தொடர்ச்சியாக மழை பொழிந்து வருவதால் மரம் முறிந்து விழுந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    முறிந்து விழுந்த மரத்தை முழுவதுமாக வெட்டி அங்கிருந்து அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆனால் முறிந்து விழுந்த மரம் பல வாரங்களாக மெதுவாக சாய்ந்து வந்ததாகவும், அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது என்று உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

    தம்பதி மீது மரம் முறிந்து விழுந்த காட்சி மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. 

    • வனத்துறை ஊழியர் ஒருவர் கத்தியால் வெட்டிய போது மரத்திலிருந்து ஓடை போல் தண்ணீர் கொட்டியது.
    • இந்த மரத்தில் தண்ணீர் சேமிக்கும் அமைப்பு உள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கல்லூரி சீதாராம ராஜ் மாவட்டம் இந்துகூர் மலைத்தொடர் உள்ளது. இந்த மலைத்தொடரில் சிந்து ஊர் என்ற இடத்தில் நேற்று ரம்ப சோடவரம் மாவட்ட வன அலுவலர் நரேந்திரன் மற்றும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அடர்ந்த வனப்பகுதியில் கருப்பு நிறத்தில் இருந்த மரத்தைக் கண்ட வன அலுவலர் நரேந்திரன் தனது ஊழியர்களிடம் மொட்டு போல் உள்ள இடத்தில் கத்தியால் வெட்ட கூறினார்.

    வனத்துறை ஊழியர் ஒருவர் கத்தியால் வெட்டிய போது மரத்திலிருந்து ஓடை போல் தண்ணீர் கொட்டியது. இதனைக் கண்ட வனத்துறையினர் ஆச்சரியம் அடைந்தனர்.

    இந்த மரத்தில் தண்ணீர் சேமிக்கும் அமைப்பு உள்ளது.

    மரம் தனது தேவைக்கு ஏற்ப தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளும் என்றும் முதலையின் தோலை போல் மரத்தின் பட்டை உள்ளதால் இதற்கு முதலை மர பட்டை எனவும், அறிவியல் பெயர் டெர்மி னாலியா டோமென்டோசா என தெரிவித்தார்.

    தண்ணீரை சுவைத்து பார்த்து இந்த தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றது அல்ல எனவும் கூறினார். 

    • போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன.
    • தமிழக- கர்நாடக இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக ஆசனூரில் இருந்து கர்நாடகா மாநிலம் கொள்ளேகால் செல்லும் சாலை அமைந்துள்ளது.

    இந்நிலையில் இன்று காலை மாவள்ளம் பிரிவு அருகே சாலை ஓரத்தில் இருந்த தைய மரம் சாலையில் முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன.

    தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஆசனூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினர் 2 மணி நேரத்திற்கு பிறகு மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். பின்னர் போக்குவரத்து சீரானது. இதனால் தமிழக- கர்நாடக இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • புதுக்கோட்டை உழவர் சந்தையில் பழமையான வாகை மரம் வெட்டப்பட்டுள்ளது
    • சுற்று சூழல் ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை உழவர் சந்தையில் உள்ள பழமை வாய்ந்த வாகை மரம் திடீரென வெட்டப்பட்டுள்ளது. இதற்கு மரம் வளர்க்கும் சுற்று சூழல் ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுபோல் மரங்களை இனி யாரும் வெட்டாமல் இருக்க , மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நீர் நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • நல்ல வேளையாக அவ்வழியாக யாரும் அப்போது செல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

    குழித்துறை :

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இந்நிலையில் நேற்று மாலை முதல் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் மாவட்டங்களில் பல இடங்களில் பலத்த காற்றுடன் சூறைக் காற்றும் வீசியது. இதையடுத்து குழித்துறை தீயணைப்பு நிலையத்திலிருந்து பொதுப் பணித்துறை சுற்றுலா மாளிகை சாலையின் அருகில் நின்ற புளிய மரத்தின் கிளை முறிந்து மின்சார டிரான்ஸ்பார்மர் மீது விழுந்தது. இதனால் அந்த டிரான்ஸ்பார்மர் உடைந்து பயங்கர சத்தத்துடன் விழுந்தது. நல்ல வேளையாக அவ்வழியாக யாரும் அப்போது செல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மரக்கன்றுகள் நடும் பணி நடை பெற்றது.
    • மரங்களுடன் வாழும் போது தூய்மையான காற்று கிடைக்கிறது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேதாரண்யம் நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமார் தலைமை வகித்தார்.

    நாகை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கார்த்திகா மரக்கன்றுகளை நடும் பணியை துவக்கி வைத்து பேசியதாவது:- மரங்கள் உயிரின் சுவாசம் போன்றது மரங்க ளுடன் வாழும் போது தூய்மையான காற்று கிடைக்கிறது.

    இதனால் மனிதனின் வாழ்நாள் அதிகரிக்கிறது.

    எதையும் உணர்ந்து பார்க்கும் போது தான் அதன் சிறப்புகள் வெளிப்படும் அப்படித்தான் மரங்கள் மரங்களை நட்டு அவற்றுடன் பேச கற்றுக் கொள்ளுங்கள் அவற்றின் பயன் முழுமையாக கிடைக்கும் தற்போது திருமண விழாக்களில் மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது இது நமக்குள் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வை உணர்த்துகிறது என்றார்.

    நிகழ்ச்சியில் வேதாரண்யம் டி.எஸ்.பி சுபாஷ்சந்திரபோஸ், வழக்கறிஞர் சங்க தலைவர் பாரி வழக்கறிஞர் சங்க செயலாளர் பாரதிராஜா, துணை தலைவர் வெங்கடேஷ், பொருளார் மதியழகன் துணை செயலாளர் வீரகுமார் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் மணிவண்ணன், குமரவேல், மாதவன், அறிவுச்செல்வன், பாலசுப்பிரமணியன், அன்பரசு, மகேஷ், .கலியராஜன், ராஜசேகர், சுதாகர், ராஜ்குமார், குலாளன் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், காவல் ஆய்வாளர்கள், காவலர்கள், வழக்கறிஞர் எழுத்தர்கள், தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.

    • ஜே.சி.பி. மற்றும் நவீன எந்திரங்களின் உதவியுடன் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
    • இந்த வழித்தடத்தில் இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அருவங்காடு,

    குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பாதை மற்றும் மலையறையில் பாதையில் அவ்வப்போது மண் சரிவு மற்றும் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    இதனிடையே குன்னூர் அருகே உள்ள பழைய அருவங்காடு பகுதியில் ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதித்தது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு, நெடுஞ்சாலை துறை மற்றும் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை, தீயணைப்பு துறையினரும் இணைந்து ஜே.சி.பி. மற்றும் நவீன எந்திரங்களின் உதவியுடன் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இதனால் இந்த வழித்தடத்தில் இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    • வனத்துறை அதிகாரிகள் அறிவுரை
    • வனம் அழிந்தால் மிகப்பெரிய ஆபத்து

    நாகர்கோவில் :

    வனங்களை பாது காப்பது தொடர்பாக பள்ளி மாணவ, மாணவி கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது. அதன்பேரில், கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் இளைய ராஜா உத்தரவின் பேரில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளை வன பகுதிக ளுக்கு சுற்றுலா அழைத்து சென்று வனம், மரங்கள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

    அதன் ஒரு கட்டமாக, குமரி மாவட்டம் தாழக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 50 பேர், நேற்று வனம் சார்ந்த சுற்றுலா விழிப்புணர்வுக்காக 2 வேன் மூலமாக உதயகிரி கோட்டை உயிரியல் பூங்கா விற்கு அழைத்து செல்லப் பட்டனர். உயிரியல் பூங்காவை மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

    பல மாணவிகள் இப்போது தான் முதல் முறையாக உதயகிரி கோட்டை, உயிரியல் பூங்கா வுக்கு வந்து உள்ளோம் என தெரிவித்தனர். அவர்க ளுக்கு வனத்தின் பயன்கள் குறித்து விளக்கப்பட்டது. வன பாதுகாவலர் சிவக்கு மார், இந்த முகாமை தொடங்கி வைத்தார்.

    இயற்கை, காடு, வன விலங்குகள், நீர், ஆக்சிஜன், வெப்பநிலை குறித்து மாணவிகளுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. மரங்கள், வனம், இயற்கையை பாதுகாப்பது தொடர்பாக விளக் கப்பட்டது. உதவி வன பாதுகாவலர் சிவக்குமார் பேசுகையில், வனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். வனங்கள் அழிந்தால் தட்ப வெப்ப நிலை மாறி விடும். தமிழ்நாட்டில் தற்போது சுமார் 25 சதவீத காடுகள் உள்ளன. இதை 33 சதவீ தத்துக்கும் அதிகமாக உயர்த்த வேண்டும். அப்போது தான் எதிர்கால சந்ததிகளை பாதுகாக்க முடியும். ஒவ்வொருவரும் தங்களது பிறந்தநாள் மற்றும் முக்கிய பண்டிகை நாட்க ளில் கண்டிப்பாக மரங்கள் நட வேண்டும் என்றார்.

    சமூக காடுகள் சரகம் (நாகர்கோவில்) வன சரகர் ராஜேந்திரன் பேசுகையில், வன விலங்குகளின் சாம்ராஜ்யமாக காடுகள் உள்ளன. காடுகள் அழிந்தால் வன விலங்குகள் மட்டுமன்றி மனித இனமே அழிந்து விடும். காடுகளில் வன விலங்குகளின் சாணம் தான் உரமாக மாறுகிறது. யானை ஒரு நாளைக்கு 250 கிலோ உணவு உட்கொள் ளும். 30 கிலோ மீட்டருக்கு மேல் நடக்கும். அதன் சாணம் உரமாகிறது என்றார்.

    • தீயணைப்புத் துறையினர் அறுத்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்
    • சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார ப்பகுதிகளான காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதலே தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மேட்டுப்பாளையம் - சிறுமுகை சாலையில் மோத்தேபாளையம் பஸ்நிறுத்தம் அருகே சாலையோரம் இருந்த சுமார் 80 அடி உயரமுள்ள ராட்சத மரம் சாய்ந்தது. அப்போது அருகில் இருந்த மற்றொரு மரமும் சேர்ந்து சாய்ந்தது.

    வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில் அந்த சமயம் வாகனங்கள் எதுவும் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    இதனையடுத்து அவ்வழியே சென்றவர்கள் மேட்டுப்பாளையம் போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் அளித்தனர்.மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் ஜேசிபி எந்திரம் மற்றும் ராட்சத மரங்களை அறுக்கும் எந்திரம் மூலம் மரத்தை அறுத்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் சாலையின் நடுவே விழுந்த ராட்சத மரம் வெட்டி அகற்றப்பட்டது.

    சாலையில் விழுந்த மரம் முழுமையாக வெட்டி அகற்றப்பட்ட பின்னர் மேட்டுப்பாளையம் போலீசாரால் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. மேட்டுப்பாளையம் - சிறுமுகை சாலையில் சாலையின் நடுவே விழுந்த ராட்சத மரத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • பொக்லைன் எந்திரம் மூலம் பழமையான ஆலமரத்தை வேருடன் அகற்றிய கொடூரம்
    • பொதுமக்கள் செந்துறை தாசில்தாரிடம் புகார் மனு அளித்தனர்

       செந்துறை, 

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நிண்ணியூர் பெரிய ஏரியின் வடிகால் வாய்க்காலில் பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது.இந்த மரம் அப்பகுதியில் ஆடுமாடு மேய்ப்பவர்களுக்கும் வழிப்போக்கர்களும் இளைப்பாறும் இடமாக இருந்து வந்தது. இந்த நிலையில் அந்த ஆலமரத்தை அப்பகுதியில் உள்ள சிலர் பொக்லைன் எந்திரங்கள் மூலம் வேருடன் வெட்டி அப்புறப்படுத்திவிட்டனர்.பசுமையான ஆலமரத்தை கும்பல் எந்த அனுமதியும் இல்லாமல் வெட்டியது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதுபற்றி நிண்ணியூர் மேலத்தெரு ஊராட்சி உறுப்பினர் கவிவண்ணியா, பார்வதி மற்றும் பொதுமக்கள் செந்துறை தாசில்தாரிடம் புகார் மனு அளித்தனர்.ஆலமரத்தை வெட்டியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • மரம் மின்சார கம்பி மீது திடீரென்று சாலையின் குறுக்கே விழுந்தது.
    • மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    கொல்லங்கோடு:

    கொல்லங்கோடு - ஊரம்பு சாலையில் சிலுவை புரம் பகுதியில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக ஒரு மரம் மின்சார கம்பி மீது திடீரென்று சாலையின் குறுக்கே விழுந்தது.

    இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தை அப்புறப்ப டுத்தும் பணியை மேற் கொண்டனர். மேலும் இது குறித்து மின்வாரிய அலுவல கத்திற்கும் தகவல் கொடுக் கப்பட்டது. மின் ஊழியர் களும் சம்பவ இடத்திற்கு வந்து மின்சார கம்பியை சரி செய்தனர். எனினும் சாலை யின் குறுக்கே மரம் முறிந்து விழுந்ததால் சுமார் 1 மணி நேரம் போக்கு வரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×