search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "enquiry"

    • கல்லூரி மாணவி-மருந்துகடை ஊழியர் உள்பட 3 பேர் மாயமாகினர்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான எலிசபெத் ராணியை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் காளிதாஸ். இவரது மகள் மாரிசெல்வி (வயது 22). இவர் நெல்லை அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். விடுமுறைக்காக ஊருக்கு வந்தவர் எப்பொதும் செல்போனில் பேசியபடி இருந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்தனர். இந்த நிலையில் வீட்டில் இருந்த மாரிசெல்வி திடீரென மாயமானார். எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் பலனில்லை. இதைத் தொடர்ந்து மகளை கண்டுபிடித்து தருமாறு ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் காளிதாஸ் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மருந்துகடை ஊழியர்

    விருதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் பிரகாஷ் ராஜ் (26) மருந்தாளுனர் படிப்பு முடித்துவிட்டு சூலக்கரையில் உள்ள ஒரு மருந்துக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் தனது கல்வி சான்றிதழ்களை புதுப்பிப்பதற்காக கோவை செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார்.

    பின்னர் 4 நாட்களாகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் விசாரித்தபோது விரைவில் வந்து விடுவதாக கூறியுள்ளார். ஆனால் அவர் வீட்டுக்கு வரவில்லை. அவரை தொடர்பு கொண்டபோது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவர் எங்கு சென்றார் என விசாரித்து கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதைத் தொடர்ந்து ஆமத்தூர் போலீஸ் நிலையத்தில் பால்ராஜ் புகார் கொடுத்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை பகுதியை சேர்ந்தவர் ஜவகர்ராஜ். இவரது மனைவி எலிசபெத் ராணி (40). தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றவர் அங்கு செல்ல வில்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடிய வில்லை.

    இதைத் தொடர்ந்து மனைவியை கண்டுபிடித்துத் தருமாறு ஜவகர் ராஜ் ஸ்ரீவில்லி புத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான எலிசபெத் ராணியை தேடி வருகின்றனர்.

    • அம்பை காவல் உட்கோட்டத்தில் விசாரணை கைதிகளை துன்புறுத்திய புகார்கள் தொடர்பாக அமுதா ஐ.ஏ.எஸ். விசாரணை நடத்தி வருகிறார்.
    • அவர் வருகிற 17, 18 ஆகிய நாட்களில் அம்பாசமுத்திரம் தாசில்தார் அலுவலகத்தில் அடுத்த கட்ட விசாரணையை நடத்துகிறார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை காவல் உட்கோட்டத்தில் விசாரணை கைதிகளை துன்புறுத்தியதாக வர பெற்ற புகார்கள் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள தமிழக அரசால் நியமிக்கப்பட்டு உள்ள உயர்மட்ட விசாரணை அதிகாரி அமுதா ஐ.ஏ.எஸ. கடந்த 10-ந் தேதி அம்பை தாசில்தார் அலுவல கத்தில் தமது விசா ரணையை மேற்கொண்டார்.

    அதன் தொடர்ச்சியாக அவர் வருகிற 17, 18 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அம்பாசமுத்திரம் தாசில்தார் அலுவலகத்தில் தமது அடுத்த கட்ட விசா ரணையை மேற் கொள்ள உள்ளார்.

    அம்பை காவல் உட்கோட்டத்தில் காவல் துறை யால் விசாரணை கைதிகளை துன்புறுத்திய தாக வர பெற்ற புகார்கள் தொடர்பாக விசா ரணை அலுவலரிடம் நேரில் புகார் அளிக்க விரும்பு பவர்கள், ஆவணங்கள், தகவல்கள் அல்லது வாக்கு மூலங்களை அளிக்க விரும்பு வோர் 17, 18-ந்தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அம்பை தாசில்தார் அலுவலகத்தில் உயர்மட்ட விசாரணை அலுவலர் முன்பாக நேரில் ஆஜராகலாம்.

    ஏற்கனவே சேரன்மகா தேவி சார் ஆட்சியர், உட்கோட்ட நடுவரிடம் புகார், வாக்குமூலம் அளித்தவர்கள் மீண்டும் ஒரு முறை வர வேண்டியது கட்டாயம் இல்லை.

    ஆனால் உயர்மட்ட விசா ரணை அலுவலர் முன்னிலை யில் மீண்டும் ஒருமுறை வாக்கு மூலம் அளிக்க விரும்பி னாலோ, புகார், கூடுதல் தகவல்களை அளிக்க விரும்பினாலோ அவர்களும் நேரில் வரலாம். பாதிக் கப்பட்டு இதுவரை புகார் தெரிவிக்காத நபர்கள் யாரேனும் இருப்பினும் அவர்களும் விசாரணை அதிகாரியை நேரில் சந்தித்து புகார் தெரிவிக்கலாம்.

    மேலும் விசா ரணை அலுவலரிடம் நேரடி யாக புகார் அளிக்க இயலாத வர்கள் ambai.inquiry@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக (18-ந்தேதி மாலை 4 மணி வரை அனைத்து நாட்களிலும்) புகார் அளிக்கலாம் அல்லது 17-ந்தேதி மற்றும் 18-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 918248887233 என்ற தொலை பேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

    • 5 வயதுடைய சீனி புளிய மரம் வளர்ந்து இருந்தது.
    • பல்லடம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் ஜே.கே.ஜே.காலனி முதலாவது வீதி அருகே, சுமார் 5 வயதுடைய சீனி புளிய மரம் வளர்ந்து இருந்தது. இதனை நேற்று சிலர் வெட்டுவதாக வரு வாய்த் துறையினருக்கு புகார் வந்தது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு அவர்கள் சென்ற போது அங்கு அந்த மரத்தை சிலர் முழுமையாக வெட்டி விட்டனர். உரிய அனுமதியின்றி மரம் வெட்டியது குறித்து வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இது குறித்து பல்லடம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காளைகளை பிடிப்பதற்காக அதன் உரிமையாளர்கள் பின் தொடர்ந்து ஓடினர்.
    • பலத்த காயம் அடைந்த அந்த காளை பரிதாபமாக உயிர் இழந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாதாக்கோட்டையில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். போட்டியானது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது.

    அப்போது வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வந்த 2 காளைகள் திடீரென போட்டி நடைபெறும் இடத்தை விட்டு வெளியே ஓடியது. வேகமாக ஓடிய காளைகள் திருச்சி சாலையில் ஓடிக்கொண்டிருந்தது.

    காளைகளை பிடிப்பதற்காக அதன் உரிமையாளர்கள் பின் தொடர்ந்து ஓடினர். அப்போது ஒரு காளை மாடு பாலத்தின் வழியாக ஓடிய போது தவறி கீழே விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அந்த காளை பரிதாபமாக உயிர் இழந்தது.

    இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், காளையின் உரிமையாளர் அரியலூர் மாவட்டம் வெங்கனூரை சேர்ந்த முத்துக்குமார் (வயது 45) என்பது தெரியவந்தது.

    ஜல்லிக்கட்டில் காளை ஒன்று உயிர் இழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • மேல்மலையனூரில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த அரசு ஊழியர் பலியானார்.
    • கடந்த 3-ந் தேதி அலுவலகத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜாமணி (வயது 57) மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம நல அலுவலராக பணிபுரிந்து வந்தார். கடந்த 3-ந் தேதி அலுவலகத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக சாலை ஓரத்திலிருந்த சிமெண்ட் கட்டை மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராஜமணியை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.பின்பு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ராஜாமணி இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டெல்லி திகார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதியின் முதுகில், பழுக்க காய்ச்சிய கம்பியால் ஓம் என எழுதியது தொடர்பாக டெல்லி நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. #DelhiCourt #TiharInmate
    புதுடெல்லி:

    டெல்லி திகார் சிறைச்சாலையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் கைதி ஒருவர், சிறையில் மனிதாபிமானமற்ற முறையில் கடுமையாக துன்புறுத்தப்பட்டுள்ளார். 2 நாட்களாக சாப்பாடு எதுவும் கொடுக்காமல் பட்டினி போட்டதுடன், அவரது முதுகில் பழுக்க காய்ச்சிய கம்பியால் ஓம் என்று எழுதி உள்ளனர். சிறை கண்காணிப்பாளர் ராஜேஷ் சவுகான் இந்த செயலை செய்துள்ளார்.

    இது தொடர்பாக பாதிக்கப்பட்ட விசாரணைக் கைதி, தனது வழக்கறிஞர் மூலம் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக சிறைத்துறை டிஜிபி மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.  சிறையில் நடந்த கொடூர சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி 24 மணி நேரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.



    மேலும், சிறையில் உள்ள அனைத்து சிசிடிவி பதிவுகள் மற்றும் மற்ற கைதிகளின் வாக்குமூலங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட கைதிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறை கண்காணிப்பாளரை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #DelhiCourt #TiharInmate
    கிருஷ்ணகிரி அருகே நடந்து சென்ற முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகே உள்ள பையனப்பள்ளி பகுதியை சேர்ந்த விவசாயி ராமசாமி (வயது 65), இவர் நேற்று கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் பையனப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த நேரம் அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. 

    இதில் ராமசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சர்தார்உசேன் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
    பரங்கிமலை ரெயில் விபத்து விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. விபத்தில் தொடர்புடைய மின்சார ரெயில் டிரைவர், ‘கார்டு’ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #Parangimalai #TrainAccident #StThomas
    சென்னை:

    சென்னை பரங்கிமலை ரெயில் விபத்து தொடர்பான விசாரணையை ரெயில்வே போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். ரெயில் விபத்தில் பயணிகள் உயிரிழந்தது தொடர்பாக வழக்கு எண் 174(மர்ம சாவு, சந்தேக மரணம்) பதிவு செய்யப்பட்டு இருந்தது.

    இதுதொடர்பாக கடந்த 8-ந் தேதி (சனிக்கிழமை) முதற்கட்ட விசாரணை சென்டிரல் ரெயில்வே போலீஸ் டி.எஸ்.பி. இரா.ரவி தலைமையில் நடந்தது. இதில் ரெயில் விபத்து நடந்தபோது அந்த மின்சார ரெயிலை இயக்கிய டிரைவர், ‘கார்டு’ மற்றும் கடற்கரை, மாம்பலம், பரங்கிமலை ரெயில் நிலைய அதிகாரிகள் என 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    அன்றைய தினம் ரெயில் விபத்து எப்படி ஏற்பட்டது? இதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள்? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றது.

    இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி நடந்து முடிந்த முதற்கட்ட விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. அன்றைய தினம் நடத்தப்பட்ட விசாரணையில் ரெயில் டிரைவர், ‘ரெயிலை இயக்குவது மட்டும் தான் என்னுடைய வேலை. கூட்டம் அதிகமாக இருப்பது குறித்தும், பயணிகள் படிக்கட்டில் தொங்கி வருவது குறித்தும் ‘கார்டு’ தனக்கு தகவல் அளிக்கவில்லை என்றும், அவர் தகவல் அளித்து இருந்தால் பக்கவாட்டு சுவர் இருந்த இடத்தில் வேகத்தை குறைத்து இருப்பேன்’ என்றும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட இந்திய குற்றவியல் நடை முறைச் சட்டம் பிரிவு 174-ன் கீழான வழக்கை இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304(ஏ)-க்கு (உள்நோக்கம் இல்லாமல் மரணத்தை விளைவித்தல்) மாற்றப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மின்சார ரெயில் டிரைவர், கார்டு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    இதையடுத்து வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) அடுத்தகட்ட விசாரணை நடைபெற இருக்கிறது. இதில் முதற்கட்ட விசாரணையில் ஆஜரான 5 பேரும் மீண்டும் ஆஜராகிறார்கள். அதுமட்டுமில்லாமல் அன்றைய தினம் சாதாரண பாதையில் இருந்து விரைவு பாதையில் செல்வதற்கு அதிகாரம் அளித்த அதிகாரியையும், மேலும் சிலரையும் விசாரணைக்கு அழைத்து இருக்கின்றனர்.

    இந்த விசாரணையில் ரெயில் விபத்து குறித்து முழு தகவல்களும், என்னென்ன மாதிரியான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன என்ற தகவல்களும் வெளியாகும் என்று போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 
    அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இன்று நடைபெற இருந்த வக்கீல்களின் ஆய்வை திடீரென ரத்து செய்து விசாரணை ஆணையம் நேற்று இரவு உத்தரவிட்டுள்ளது. #JayalalithaaDeath #ApolloHospital
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து நடத்தி வருகிறது. இந்த விசாரணையின் தொடர்ச்சியாக, அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவு, சிறப்பு அறை உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வக்கீல்கள் பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோரை விசாரணை ஆணையம் நியமித்து உத்தரவிட்டது. இந்த வக்கீல்கள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்ய இருந்தனர்.



    இந்தநிலையில், வக்கீல்களின் ஆய்வை திடீரென ரத்து செய்து விசாரணை ஆணையம் நேற்று இரவு உத்தரவிட்டுள்ளது. வக்கீல்கள் ஆய்வு மேற்கொள்வதற்கு வசதியாக முன்னேற்பாடுகளை செய்யவில்லை என்றும், அதனால் மற்றொரு நாளில் இந்த ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் கேட்டுக் கொண்டதாகவும், அதை ஏற்றுக் கொண்டு இன்று நடைபெற இருந்த ஆய்வுப்பணி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  #JayalalithaaDeath #ApolloHospital  #tamilnews 
    ×