அனுமதியின்றி வெட்டப்பட்ட மரம் - வருவாய்த்துறையினர் விசாரணை

5 வயதுடைய சீனி புளிய மரம் வளர்ந்து இருந்தது. பல்லடம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெட்டப்பட்ட மரத்தை படத்தில் காணலாம்.
வெட்டப்பட்ட மரத்தை படத்தில் காணலாம்.
Published on

பல்லடம் :

பல்லடம் ஜே.கே.ஜே.காலனி முதலாவது வீதி அருகே, சுமார் 5 வயதுடைய சீனி புளிய மரம் வளர்ந்து இருந்தது. இதனை நேற்று சிலர் வெட்டுவதாக வரு வாய்த் துறையினருக்கு புகார் வந்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு அவர்கள் சென்ற போது அங்கு அந்த மரத்தை சிலர் முழுமையாக வெட்டி விட்டனர். உரிய அனுமதியின்றி மரம் வெட்டியது குறித்து வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இது குறித்து பல்லடம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com