என் மலர்
நீங்கள் தேடியது "cancelled"
- கோவில்பட்டி-குமாரபுரம் இடையே ெரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- ெரயில் இன்றும், வருகிற 17-ந் தேதியும் தேதியும் ரத்து.
கோவை,
கோவை-நாகர்கோவில் ெரயில் இன்றும், வருகிற 17-ந் தேதியும் தேதி பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ெரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலம் ெரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை ெரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட கோவில்பட்டி-குமாரபுரம் இடையே ெரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவை-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ெரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, இன்றும், வருகிற 17-ந் தேதியும் காலை 8 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் கோவை-நாகர்கோவில் விரைவு ரயில் (எண் 16322) திண்டுக்கல்-நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட தேதிகளில் இந்த ெரயிலானது கோவை-திண்டுக்கல் இடையே மட்டும் இயக்கப்படும்.
இதேபோல மே 3 மற்றும் 17-ந் தேதி காலை 7.35 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் நாகர்கோவில்-கோவை விரைவு ெரயில் (எண் 16321) நாகர்கோவில்-திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட தேதிகளில் இந்த ெரயிலானது, திண்டுக்கல்-கோவை இடையே மட்டுமே இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- எந்திரம் பொருத்திய பைபர் படகில் மீன்பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
- ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரி:
புதுவை மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடலில் மீன்வளத்தை பாதுகாத்திட புதுவையில் கவர்னர் உத்தரவின்படி மீன்பிடி தடைக்காலம் கடந்த 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி கனகசெட்டிகுளம் முதல் புதுக்குப்பம் வரையிலான பாரம்பரிய மீன்பிடி படகுகளான கட்டுமரம், நாட்டு படகுகளை தவிர அனைத்து வகை படகுகள் குறிப்பாக இழுவலைகள், இழுமடி வலைகள் கொண்டு விசைப்படகு மற்றும் எந்திரம் பொருத்திய பைபர் படகில் மீன்பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே மீனவர்கள் மீன்பிடி தடைக்கால உத்தரவை முறையாக கடைபிடிக்க வேண்டும். தடைகாலத்தில் எந்திரம் பொருத்தப்பட்ட பைபர் படகில் இழுவலைகள், இழுமடி வலைகளை பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டால் அவர்கள் மீது புதுவை கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் சம்பந்தப்பட்ட மீனவர்களுக்கு மீன்வளத் துறையின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் எதுவும் வழங்கப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கரூர்-திருச்சி இடையேயான 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து
- பொறியியல் பணி நடைபெறுவதாக தென்னக ரெயில்வே அறிவிப்பு
கரூர்,
சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், கரூர் மாவட்டம் லாலாபேட்டை குளித்தலை ரயில்வே ஸ்டேஷன் இடையே பொறியியல் தொடர்பான பராமரிப்பு பணிகள் நாளையும் நாளை மறுநாளும் (3, 4-ந்தேதி) நடக்கிறது. இதனால், மதியம், 3:55 மணிக்கு கரூரில் இருந்து புறப்பட்டு, மாலை, 5:55 மணிக்கு திருச்சி செல்லும், எக்ஸ்பிரஸ் ரயில் (எண்-06882) சேவை ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் திருச்சியில் இருந்து மாலை, 6:20 மணிக்கு புறப்பட்டு, இரவு, 8:30 மணிக்கு கரூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்-06123) சேவையும், நாளையும், நாளை மறு நாளும் ரத்து செய்யப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
- திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
- திருநெல்வேலி ரெயில் நிலையத்தில் இருந்து திருச்சிக்கு பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி:
திருநெல்வேலி - திருவனந்தபுரம் ரெயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக திருச்சி- திருவனந்தபுரம் இடையே இயக்கப்பட்டு வரும் இன்டர்சிட்டி ரெயில் ேசவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்படும் (வண்டி எண் 22627) ரெயில், திருநெல்வேலி- திருவனந்தபுரம் இடையேயும், மறு மார்க்கத்தில் திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து முற்பகல் 11.35 மணிக்கு புறப்படும் (வண்டி எண் 22628) ரெயில், திருவனந்தபுரம் - திருநெல்வேலி இடையேயும் வரும் 4-ந் தேதி முதல் 9 மற்றும் 14 முதல் 17-ந் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. அதே வேளையில், திருநெல்வேலி ரெயில் நிலையத்தில் இருந்து திருச்சிக்கு பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கும்பகோணம் வழியாக செகந்திராபாத் நகருக்கு இயங்கிய சிறப்பு ரெயில் திடீரென ரத்து செய்யப்பட்டது.
- தீபாவளியை ஒட்டி வரும் பயணிகளுக்கு நல்ல பயனாக அமையும்.
பாபநாசம்:
தீபாவளி பண்டிகையை ஒட்டி செகந்திராபாத்-தஞ்சாவூர் இடையே சென்னை எழும்பூர், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம் பாபநாசம் வழியாக ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
வண்டி எண் 07685 செகந்திராபாத்-தஞ்சாவூர் சிறப்பு ரயில் அக்டோபர் 22 மற்றும் 29ம் தேதிகளில் (சனிக்கிழமை) இரவு 8.25 மணிக்கு செகந்திராபாத்தில் புறப்பட்டு நால்கொண்டா, குண்டூர், தெனாலி, சென்னை எழும்பூர் (ஞாயிறு காலை 10.15), திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, வழியாக மறுநாள் ஞாயிற்று கிழமை மாலை 5.10 மணிக்கு கும்பகோணம், 5.24 மணிக்கு பாபநாசம் வந்து தஞ்சாவூருக்கு இரவு 7.00 மணிக்கு சென்றடையும்.
மறு மார்கத்தில் வண்டி எண் 07686 தஞ்சாவூரிலிருந்து அக்டோபர் 24 மற்றும் 31ம் தேதி (திங்கட்கிழமை) காலை 7.00 மணிக்கு புறப்பட்டு பாபநாசம் (7.19 காலை) கும்பகோணம் (7.48 காலை) சென்னை எழும்பூர் (பகல் 2.00 மணி) வந்து செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணிக்கு செகந்திராபாத் சென்றையும். கும்பகோணம் வழியாக செகந்திராபாத் நகருக்கு இயங்கிய சிறப்பு ரயில் திடீரென ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது பண்டிகைக்கால சிறப்பு ரயில் இவ்வழியே அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
இந்த சிறப்பு ரயில் ஆந்திரா, தெலுங்கானா மாநில பகுதிகளில் மற்றும் சென்னையில் இருந்து மெயின் லயன் பகுதிக்கு தீபாவளியை ஒட்டி வரும் பயணிகளுக்கு நல்ல பயனாக அமையும்.
இத்தகவலினை திருச்சி தென்னக ரயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினரும், பாபநாசம் ரயில் பயணிகள் சங்க செயலாளருமான சரவணன் தெரிவித்துள்ளார்.
- காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த நிலையில் வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் மட்டுமே அமைக்கப்பட வேண்டும்.
- டைல்ஸ் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கிற அனுமதியை தமிழக அரசு ரத்து செய்து உத்திரவிட வேண்டும்.
அம்மாப்பேட்டை:
சாலியமங்களம் அருகே விளை நிலங்கள் நடுவே தனியார் டைல்ஸ் உற்பத்தி நிறுவனம் தொடங்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாய சங்கத்தினர் முற்றுகையிட்டு போரா–ட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, தாசில்தார் மதுசூதனன் மற்றும் வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விவசாய சங்கத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது விவசாய சங்கத்தினர் காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த நிலையில் வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் மட்டுமே அமைக்கப்பட வேண்டும்.
விளை நிலங்களை பாதிக்கும் வகையில் டைல்ஸ் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கிற அனுமதியை உடனடியாக தமிழக அரசு ரத்து செய்து உத்திரவிட வேண்டும் என்று கூறினர். உங்களது கோரிக்கைகள் குறித்து மேல் அதிகாரிகளிடம் எடுத்து கூறப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர்.
- ரூ.1.48 கோடி டெண்டர் ரத்து நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.
- டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை ஆலங்குடியை சேர்ந்த தனவிமல், உயர் நீதிமன்ற கிளையில் த ாக்கல் செய்த மனு: புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டத்தில் சாலைகளை பலப்படுத்தும் பணிகளுக்கு டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த டெண்டருக்கு நான் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தேன். ஆனால் நான் உரிய ஆவணங்களை சமர்பிக்கவில்லை என்று கூறி எனது விண்ணப்பத்தை நிராகரிப்பட்டது. விசாரித்தபோது போலி ஆவணம் சமர்ப்பித்த நெம்மக்கோட்டையை சேர்ந்த ஒருவருக்கு 20 சதவீத கமிஷனை பெற்றுக் கொண்டு டெண்டர் ஒதுக்க முடிவு செய்ததாக தெரியவந்தது. இதனால் திருவரங்குளம் வட்டத்தில் 5 சாலைகளை பலப்படுத்தும் பணிக்கான டெண்டரை ரத்து செய்ய உத்தவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ஜி. ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் தாக்கல் செய்த பதில் மனுவில் ரூ.1.48 கோடி மதிப்பிலான சாலை பலப்படுத்தும் பணி ரத்துசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுவை முடித்து நீதிபதி உத்தவிட்டார்.
- தமிழகத்தில் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின் கீழ், 67 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
- மத்திய அரசு தொழில்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.
திருப்பூர்,
பள்ளிக்கல்வியை முடிக்கும் மாணவர்கள், வேலைக்கு தகுதியானவர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், வழக்கமான பாடத்திட்டத்துடன், தொழிற்பயிற்சி அளிக்கும் திட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின் கீழ், 67 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஏற்ப பல்வேறு தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தை பொறுத்த வரை ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவங்கப்பட்டது.பல்திறன் தொழில்நுட்பம் என்ற பிரிவில் விவசாயம், எலக்ட்ரானிக் வயரிங் மற்றும் ஸ்விட்சிங் வேலை, கார்பெண்டர், கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
ஆட்டோமோட்டிவ் என்ற பிரிவில் கார், மோட்டார் சைக்கிள் என்ஜின் மற்றும் அவற்றை பழுதுபார்க்கும் முறை குறித்து அத்தனை நுட்பங்களும் கற்றுத் தரப்படும். ஆனால், தொழிற்கல்வி பாடங்களை நடப்பாண்டு முதல் நிறுத்தி விடுமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.நடப்பாண்டு முதல் 9ம் வகுப்பில் இதற்காக புதிதாக மாணவர்களை சேர்க்க வேண்டாம் எனவும், ஏற்கனவே பயின்று வரும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குபிளஸ் 2 வகுப்பு வரை தொடரவும் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து தலைமையாசிரியர்கள் கூறியதாவது:-
மத்திய அரசு தொழில்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் தொழில் கல்வியானது6 பிரிவுகளின் கீழ் 12 பாடங்களாக செயல்பாட்டில் உள்ளது.எனவே 9,10-ம் வகுப்புகளுக்கு தொழில் பயிற்சி வகுப்புகள் நிறுத்தியதால் எவ்வித பாதிப்பும் இல்லை. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு தயாராக கூடுதல் நேரம் கிடைக்கும். இதில் பெறப்படும் சான்றிதழ்களை அவர்கள் சுய தொழில் தொடங்கவும், வங்கிக்கடன் பெறவும் பயன்படுத்தலாம்.எனினும் அதுமட்டுமே போதுமானதாக இல்லை. அதேசமயம் இடை நிற்றல் அதிகரிக்க வாய்ப்பில்லை.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு கூறியதாவது:-
கோடை விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், வாரத்தின் இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. பிரேக் மற்றும் வி.ஐ.பி. புரோட்டோக்கால் தரிசனத்தில் சென்று ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களுக்கு குறைந்த எண்ணிக்கையில் தரிசன டிக்கெட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது தவிர்க்க முடியாத காரணத்தால், அறிவிப்பில் மாற்றம் செய்யப்பட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வாரத்தின் இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. வி.ஐ.பி. புரோட்டோக்கால் தரிசனத்தில் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் தரிசன டிக்கெட் வழங்கப்படும்.
உயர் அந்தஸ்தில் உள்ள ஒரு அரசு அதிகாரிக்கு 6 வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும். அதற்கு மேல் வழங்கப்படமாட்டாது. ஒரே சிபாரிசு கடிதத்தில் 3 பக்தர்களுக்கு வி.ஐ.பி. தரிசன டிக்கெட் வழங்கப்படமாட்டாது. ஒரு வி.ஐ.பி. சிபாரிசு கடிதத்துக்கு ஒரு வி.ஐ.பி. தரிசன டிக்கெட் மட்டுமே வழங்கப்படும்.
இந்த உத்தரவு கோடைக்காலம் முடியும் வரை அமலில் இருக்கும். அதற்கு பக்தர்கள் தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ‘‘13-ந் தேதி ஒரே நாளில் 99 ஆயிரத்து 840 வி.ஐ.பி. பக்தர்களுக்கும், 20-ந் தேதி 1 லட்சத்துக்கும்மேல் வி.ஐ.பி. பக்தர்களுக்கும் சாமி தரிசன அனுமதி வழங்கப்பட்டுள்ளது’’ என தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு தெரிவித்துள்ளார். #Tirupati