என் மலர்
நீங்கள் தேடியது "படகு போக்குவரத்து"
- கடற்கரை கிராமங்களிலும் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது.
- வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் பவுர்ணமியையொட்டி கடல் நீர்மட்டம் இன்று திடீரென தாழ்வாக காணப்பட்டது. முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியது. இந்திய பெருங்கடல், அரபிக்கடல் ஆகிய 2 கடல்களும் சீற்றமாக காணப்படுகிறது.
கடல் உள்வாங்கியதால் கடலுக்கு அடியில் இருந்த மணல் பரப்புகளும், பாசி படிந்த பாறைகளும் வெளியே தெரிந்தன. இதன் காரணமாக கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.
இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். காலை 9 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதும் படகு போக்குவரத்து தொடங்கியது. இதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வமுடன் பயணம் செய்து விவேகானந்த நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி பாலத்தை பார்வையிட்டு வருகின்றனர்.
மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடிபோன்ற கடற்கரை கிராமங்களிலும் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் உள்ள கடற்கரை பகுதி மணல் பரப்பாகவும், பாறைகள் நிறைந்த பகுதியாகவும் காட்சியளித்தது. வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை.
- கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் கன்னியாகுமரியில் சீசன் களைகட்டி உள்ளது.
- பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது.
இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளை இன்றி தொடர்ச்சியாக இந்த படகு போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த படகில் பயணம் செய்வதற்காக சாதாரண கட்டணமாக நபர் ஒன்றுக்கு தலா ரூ.75 வீதமும், கியூவில் காத்து நிற்காமல் நேரடியாக செல்வதற்காக சிறப்பு கட்டணமாக நபர் ஒன்றுக்கு தலா ரூ.300 வீதமும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தற்போது பள்ளிகளுக்கு தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் கன்னியாகுமரியில் கோடை விடுமுறை சீசன் களைகட்டி உள்ளது. இதனால் மற்ற நாட்களை விட அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குடும்பம்-குடும்பமாக கன்னியாகுமரிக்கு படையெடுத்து வந்த வண்ணமாக உள்ளனர்.
இந்த சீசனில் நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வரை கன்னியாகுமரிக்கு வருகிறார்கள். இந்த சீசன் நேரத்தில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் வட்டக்கோட்டைக்கு இயக்கப்படும் திருவள்ளுவர் சொகுசு படகை சின்னமுட்டம் துறைமுகத்துக்கு கொண்டு சென்று பராமரிப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. அதேபோல விவேகானந்தா படகையும் சின்னமுட்டத்தில் கரை ஏற்றி பராமரிப்பு பணிகளை செய்து வருகிறது. இதனால் தற்போது குகன் மற்றும் பொதிகை படகு மட்டுமே விவேகானந்தர் மண்டபத்துக்கு இயக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் மாலை 4 மணிக்கு வழக்கம்போல் படகு போக்குவரத்து நிறுத்தப்படுவதால் அதன் பிறகு படகு துறைக்கு வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினம் தினம் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் செல்ல முடியாமலும் கண்ணாடி பாலத்தை பார்க்க முடியாமலும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லக்கூடிய அவலநிலை இருந்து வருகிறது. தினமும் மாலை 4 மணிக்கு பிறகு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வரை படகுத்துறைக்கு வந்து கண்ணாடி பாலத்தை காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற நிலை இருந்து வந்தது.
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காலங்களில் மட்டும் 3 நாட்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை படகு போக்குவரத்து கூடுதலாக 4 மணி நேரம் நீட்டிக்கப்பட்டு இயக்கப்பட்டது. அதேபோல கோடை விடுமுறை சீசன் காலங்களில் மாலை 4 மணிக்கு பிறகு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை தவிர்க்கும் வகையில் கோடை காலம் முடியும் வரை படகு போக்குவரத்து நேரத்தை காலை 8 மணிக்கு தொடங்குவதற்கு பதிலாக 2 மணி நேரத்துக்கு முன்னதாக அதிகாலை 6 மணிக்கு தொடங்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
எனவே சுற்றுலா பயணிகளின் விருப்பத்திற்கு ஏற்ப கோடை விடுமுறை சீசன் முடியும் வரை கண்ணாடி பாலத்தை பார்க்க படகு போக்குவரத்து நேரத்தை நீட்டிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்குமா? என்று மாலை மலரில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அதன் எதிரொலியாக விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று முதல் படகு போக்குவரத்தை காலை 8 மணிக்கு தொடங்குவதற்கு பதிலாக ஒரு மணி நேரம் முன்னதாக காலை 7 மணிக்கு தொடங்குவதற்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். இந்த படகு போக்குவரத்து நேரம் மாற்றம் கோடை கால சீசன் முடியும் நாளான ஜூன் 1-ந்தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி இன்று அதிகாலை 6.45 மணிக்கு படகு துறையில் உள்ள டிக்கெட் கவுண்டர் திறக்கப்பட்டு படகு டிக்கெட் விநியோகம் தொடங்கியது. அதைத்தொடர்ந்து படகு போக்குவரத்து காலை 7 மணிக்கு தொடங்கியது. சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து மிகுந்த ஆர்வத்துடன் படகில் பயணம் செய்தனர். இந்த படகு போக்குவரத்து நேர மாற்றத்தை கண்காணிப்பதற்காக சென்னையில் இருந்து பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக பொது மேலாளர் (இயக்கம்) தியாகராஜன் இன்று நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசும் பணி
- இன்று முதல் மீண்டும் திருவள்ளுவர் சிலையை நேரில் சென்று பார்வையிட சுற்றுலா பயணிகள் அனு மதிக்கப்பட்டனர்.
கன்னியாகுமரி :
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியா குமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு 133 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை கடந்த 2000-ம்ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.
கடல் நடுவில் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளதால் அடிக்கடி உப்பு காற்றினால் சேதம் அடைந்து வருகிறது. இதனால் கடல் உப்பு காற்றின் பாதிப்பில் இருந்து இந்த திருவள்ளு வர் சிலை சேதமடைவதை தடுப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசும் பணி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி 4 ஆண்டு களுக்கு பிறகு இந்த முறை திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணியானது ரூ.1 கோடி செலவில் கடந்த ஜூன் மாதம் 6-ந்தேதி தொடங்கப்பட்டது. 133 அடி உயரம் கொண்ட சிலையை சுற்றி சுமார் 60 டன் எடை கொண்ட ராட்சத இரும்பு பைப்புகள் கொண்டு சாரம் அமைக்கப்பட்டு முதலில் சிலையை தண்ணீர் கொண்டு முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் சிலையின் இணைப்பு பகுதிகளில் உள்ள வெடிப்புகளை சரி செய்யும் விதமாக சுண்ணாம்பு, கடுக்காய், பனை வெல்லம் ஆகியவை கொண்ட கலவை பூசும்பணி நடைபெற்றது.
அதன்பிறகு காகித கூழ் கலவை சிலை மீது ஒட்டப்பட்டு சிலையில் படிந்துள்ள உப்பினை அகற்றும் பணி நடை பெற்று முடிந்தது. அதைத்தொடர்ந்து தண்ணீர் கொண்டு முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் ஜெர்மன்நாட்டில்இருந்து இறக்குமதி செய்யப்பட்ட "வாக்கர்"எனப்படும் ரசாயன கலவை பூசப்பட்டது.
தற்போது இந்த பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் இந்த பணிக்காக 60 டன் எடை கொண்ட இரும்பு பைப்புகள் மூலம் சிலையை சுற்றி அமைக்கப்பட்ட சாரத்தினை பிரிக்கும் பணி நடைபெற்று முடிந்துள்ளது. ரசாயன கலவை பூசும்பணி நிறைவடைந்து உள்ளதை தொடர்ந்து திருவள்ளுவர் சிலை புதுப்பொலிவுடன் காட்சிஅளிக்கிறது.
இதைத்தொடர்ந்து 6 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு படகுபோக்குவரத்து இயக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று முதல் மீண்டும் திருவள்ளுவர் சிலையை நேரில் சென்று பார்வையிட சுற்றுலா பயணிகள் அனு மதிக்கப்பட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஆர்வமாக சென்று பார்வையிட்டனர்.
- இன்று காலை 8 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.
- திருவள்ளுவர் சிலைக்கு இதுவரை படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது.
இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இதில் பொதிகை படகு சின்னமுட்டம் துறைமுகத்தில் கரை ஏற்றப்பட்டு பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் தற்போது குகன், விவேகானந்தா ஆகிய 2 படகுகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரி கடலில் இன்று காலை நீர்மட்டம் திடீரென்று தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது.
இதனால் இன்று காலை 8 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. தற்காலிகமாக படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருந்தது. இதனால் கன்னியாகுமரிக்கு வந்து சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதற்கிடையில் காலை 10 மணிக்கு கடலின் தன்மை சகஜ நிலைமைக்கு திரும்பியதை தொடர்ந்து காலை 10 மணிக்கு பிறகு 2 மணி நேரம் தாமதமாக படகு போக்குவரத்து தொடங்கியது. அதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வத்துடன் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர். ஆனால் திருவள்ளுவர் சிலைக்கு இதுவரை படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.
- விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 3 மணி நேரம் தாமதமாக தொடக்கம்
- காலை 11 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகுபோக்குவரத்து தொடங்கியது
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி கடல் உள்வாங்குவது, கடல் நீர்மட்டம் தாழ்வது, கடல் நீர்மட்டம் உயர்வது, கடல் சீற்றம், கடல்கொந்தளிப்பு, ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுவது, அலையே இல்லாமல் கடல் அமைதியாக குளம்போல் காட்சியளிப்பது, கடல் நிறம் மாறுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் பவுர்ணமி முடிந்த பிறகு கடந்த 2 நாட்களாக கன்னியாகுமரியில் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது.
இன்று 2-வது நாளாக கடல் சீற்றம் நீடிக்கிறது. இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்ககடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. அதே வேளையில் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றமாகமாகவும் காணப்பட்டது.
இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப் படவில்லை.
இதனால் இன்று காலை விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை நுழைவு வாயிலில் 3 மணி நேரம் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதற்கிடையில் காலை 11 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 3 மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகுபோக்குவரத்து தொடங்கியது. அதன்பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர்.
கன்னியாகுமரி முக்கடல் சங்கத்தில் சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க சுற்றுலா போலீசார் தடை விதித்தனர். மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட் டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக வீசின.
- பகவதி அம்மன் கோவில் தேரோட்டத்தில் சுற்றுலா பயணிகள் பங்கேற்க ஏற்பாடு
- கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாகத்திரு விழாவை யொட்டி நாளை தேரோட்டம் நடக்கிறது.
கன்னியாகுமரி. மே.31-
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாகத்திரு விழாவை யொட்டி நாளை தேரோட்டம் நடக்கிறது. காலை 8-30 மணிக்கு மேல் 9 மணிக்குள் திருத்தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.
இந்த தேரோட்டத்தில் விவேகானந்தர் நினைவுமண்டபம் மற்றும் விவேகானந்த கேந்திர தொழிலாளர்கள் குடும்பத்துட ன்பங்கேற்பதற்கு வசதியாகவும் சுற்றுலாப் பயணிகள் இந்த தேர் திருவிழாவில் கலந்து கொண்டு தேர் இழுப்பதற்கு வசதியாகவும் நாளை காலை 8 மணிக்கு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகுபோக்கு வரத்து தொடங்குவதற்கு பதிலாக 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கு கிறது. இந்த தகவலை கன்னியா குமரி விவேகானந்த கேந்திர நிர்வாக அதிகாரி அனந்தஸ்ரீ பத்மநாபன் தெரிவித்து உள்ளார்.
- விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்க கடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது.
- 1 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.
கன்னியாகுமரி:
அமாவாசை தினம் என்பதால் கன்னியாகுமரியில் ஒரு புறம் கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது.
இன்னொரு புறம் கடல் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்க கடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. அதே வேளையில் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றமாகவும் காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.
இதற்கிடையில் காலை 9 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 1 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.
அதன்பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர். கன்னியாகுமரி முக்கடல் சங்கத்தில் கடல்சீற்றம் காரணமாக சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க சுற்றுலா போலீசார் தடை விதித்தனர். மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது.
இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக வீசின. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் பெரும்பாலான கட்டுமரம் மற்றும் வள்ளம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
- அமாவாசை முடிந்த நிலையில் இந்த மாற்றம் நிகழ்ந்து வருகிறது
- 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி கடலில் கடந்த 2 நாட்களாக சில மணி நேரம் கடல் உள்வாங்கி வருகிறது. அமாவாசை முடிந்த நிலையில் இந்த மாற்றம் நிகழ்ந்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடல் உள்வாங்குதல் மற்றும் சீற்றம் காரணமாக படகு போக்குவரத்து தாமதம் மற்றும் ரத்து செய்யப்பட்டு வருகிறது.
இன்று 3-வது நாளாக கன்னியாகுமரியில் கடல் ஒரு புறம் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது. இன்னொரு புறம் கடல் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவுமண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்து உள்ள வங்ககடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. இருப்பினும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை நுழைவு வாயிலில் சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர். இதற்கிடையில் காலை 10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத் தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக வீசின. வட்ட கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை.
- விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 3 மணி நேரம் ரத்து
- பகல் 11 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி கடலில் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் அமாவாசை முடிந்த நிலையில் இன்று தொடர்ந்து 4-வது நாளாக கன்னியாகுமரியில் ஒரு புறம் கடல்சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப் படுகிறது. இன்னொரு புறம் கடல் உள்வாங்கி காணப்படுகிறது.
கடல் நடுவில் அமைந் துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்ககடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப் படவில்லை.
விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை நுழைவுவாயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதற்கிடையில் பகல் 11 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது.
இதைத் தொடர்ந்து 3 மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு விவேகா னந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதன்பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்தனர்.
முக்கடல் சங்கமத்தில் கடல் சீற்றம் காரணமாக சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க போலீசார் தடை விதித்தனர். மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங் களில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக வீசின. வட்ட கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை.
- படகு போக்குவரத்து கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
- வசதிகளை அதிகரிப்பதற்காக மேலும் சில நாட்கள் தேவை என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு:
இந்தியா-இலங்கை இடையிலான படகு போக்குவரத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரி காரைக்காலில் இருந்து இலங்கை யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு படகு போக்குவரத்து தொடங்க முடிவு செய்யப்பட்டது. இந்த போக்குவரத்து கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் போக்குவரத்து தொடங்கவில்லை.
இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையில் படகு போக்குவரத்து தொடங்குவது மேலும் தாமதமாகும் என இலங்கை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து துறை மந்திரி நிமல் சிறிபால டிசில்வா தெரிவித்தார்.
"இந்தியாவுடன் படகு போக்குவரத்தை தொடங்க இலங்கை தயாராக உள்ளது. ஆனால் படகு சேவைக்காக இந்தியா தேர்ந்தெடுத்த துறைமுகத்தை மாற்றுவதால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. புதிதாக நாகப்பட்டினம் துறைமுகத்தை தேர்வு செய்துள்ள இந்திய அதிகாரிகள், அங்கு வசதிகளை அதிகரிப்பதற்காக மேலும் சில நாட்கள் தேவை என்று தெரிவித்துள்ளனர்" என இலங்கை மந்திரி விளக்கம் அளித்துள்ளார்.
- சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் காத்திருந்தனர்
- திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்ககடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்துகாணப்பட்டது.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரிகடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி கடல் உள் வாங்குவது, நீர்மட்டம் தாழ்வது, கடல் நீர்மட்டம் உயர்வது, கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு, ராட்சதஅலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுவது, அலையே இல்லாமல் கடல் அமைதியாக குளம்போல் காட்சியளிப்பது, கடல் நிறம் மாறுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் பவுர்ணமி முடிந்த பிறகு கடந்த ௨ நாட்களாக கன்னியாகுமரியில் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது. இன்று 2-வது நாளாக கடல் சீற்றம் நீடிக்கிறது. இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்ககடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்துகாணப்பட்டது.
அதேவேளையில் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றமாகமாகவும் காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரிகடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.
இதனால் இன்று காலை விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துகழக படகுத்துறை நுழைவு வாயிலில் 3 மணி நேரம் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதற்கிடையில் காலை 10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர்.
கன்னியாகுமரி முக்கடல் சங்கத்தில் சுற்றுலா பயணிகள் கடல் சீற்றம் காரணமாக கடலில் குளிக்க போலீசார் தடை விதித்தனர். மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடிபோன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் இந்தகடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல்15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக வீசின.
- விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 2 மணி நேரம் பாதிப்பு
- சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி கடலில் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அப்போது கடல் நீர் திடீரென உள்வாங்குவது, கடல் சீற்றம் போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன.
கடல் சீற்றம்
அமாவாசை தினமான இன்றும் கன்னியாகுமரியில் கடல் நீர் "திடீர்"என்று உள்வாங்கியது. ஒரு புறம் கடல் சீற்றமாகவும் கொந்த ளிப்பாகவும் காணப்பட்டது. மற்றொரு புறம் கடல் உள்வாங்கி காணப்படுகிறது.
விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளு வர் சிலை அமைந்து உள்ள வங்ககடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. அதேவேளையில் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றமா கமாகவும் காணப்பட்டது. எனவே விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்கு வரத்து தொடங்கப்ப டவில்லை. இதனால் காலையிலேயே படகுத்துறை நுழைவு வாயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். காலை 10 மணிக்கு கடல் சகஜநிலைக்கு திரும்பியதைத் தொடர்ந்து படகு போக்குவரத்து தொடங்கியது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தைபடகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர்.
மேலும் கன்னியாகுமரி,சின்னமுட்டம்,வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரைகிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின. இதனால் இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்பட வில்லை.






