என் மலர்
நீங்கள் தேடியது "ferry service"
- கப்பல் போக்குவரத்துக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதாக மந்திரி டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்
- இது நடைமுறை படுத்தப்பட்டால் காரைக்காலில் இருந்து 3 மணி நேரத்தில் இலங்கை சென்றடையலாம்.
புதுச்சேரி:
காரைக்கால்- இலங்கை யாழ்ப்பாணம் இடையே கப்பல் போக்குவரத்தை தொடங்க புதுவை அரசு முடிவு செய்தது. கடந்த ஆண்டே இதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கின.
யாழ்ப்பாணம்-காரைக்கால் இடையே பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதாக இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தாவும் தெரிவித்துள்ளார். இது நடைமுறை படுத்தப்பட்டால் காரைக்காலில் இருந்து 3 மணி நேரத்தில் இலங்கை சென்றடையலாம்.
இந்நிலையில், புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காரைக்கால் - இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கும் என்றார். இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் காலதாமதம் ஏற்படுவதால் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
நாகூர் கச்சா எண்ணெய் குழாய் உடைப்பால் காரைக்கால் கடலில் பாதிப்பா? என அதிகாரிகள் ஆய்வு செய்வதாகவும் அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறினார்.
- இந்தியா, இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- காங்கேசன் துறைக்கும், பாண்டிச்சேரிக்கும் இடையிலான கப்பல் சேவை ஜனவரியில் தொடங்கப்படும் என்றார்.
கொழும்பு:
இலங்கை மந்திரி நிமல் சிறிபால டி.சில்வா கொழும்புவில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
இந்தியா, இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
புத்த கயா செல்லும் யாத்ரீகர்களுக்கும், வர்த்தக பயணங்களை மேற்கொள்பவர்களுக்கும் இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும் என அவர் கூறினார்.
மேலும், இத்திட்டத்தின் முதல்கட்டமாக இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன் துறைக்கும், பாண்டிச்சேரிக்கும் இடையிலான கப்பல் சேவை வரும் ஜனவரி மாத மத்தியில் தொடங்கப்படும் என தெரிவித்தார்.