நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து நவம்பர் 19 முதல் டிசம்பர் 18 வரை நிறுத்தம்

நவம்பர் 15, 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கப்பல் இயக்கப்படும்.டிசம்பர் 18, 2024க்குப் பிறகு நாங்கள் சேவையை மீண்டும் தொடங்குவோம்.
நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து நவம்பர் 19 முதல் டிசம்பர் 18 வரை நிறுத்தம்
Published on

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையே கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கியது. போதிய பயணிகள் முன்பதிவு இல்லாததால், நாள்தோறும் நாகை துறைமுகத்திலிருந்து இயக்கப்படுவதாக இருந்த இந்த கப்பல் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் கப்பல் போக்குவரத்து இருந்து வந்தது.

இதற்கிடையே பயணிகள் வருகை அதிகரித்து வருவதால் நவம்பர் 8-ம்தேதி முதல் வாரத்தில் செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு உள்ளிட்ட 5 நாட்கள் கப்பல் இயக்கப்படும் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை வரும் 19ம் தேதி முதல் டிசம்பர் 18ம் தேதி வரை வானிலை காரணமாக நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "2024 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி முதல் டிசம்பர் 18 ஆம் தேதி 2024 ஆம் ஆண்டு வரை வானிலை காரணமாக கப்பல் சேவை நிறுத்தப்படுவதற்கு முன்னதாக, நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன் துறை ஆகிய இரு பகுதிகளிலும் பயணிகளின் வசதிக்காக எங்கள் சிவகங்கை கப்பல் 2024 நவம்பர் 15, 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். டிசம்பர் 18, 2024க்குப் பிறகு நாங்கள் சேவையை மீண்டும் தொடங்குவோம், திட்டங்களில் ஏதேனும் மாற்றம் இருந்தால் நாங்கள் உங்களுக்குத் தெரியப்படுத்துவோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com