search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lakshmi Narayanan"

    • அமைச்சர் லட்சுமி நாராயணன் தகவல்
    • செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் திட்டம் 2017-ல் தொடங்கப்பட்டது. கடல் அரிப்பு இயற்கை நிகழ்வு.

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரை தலைமை செயலகம் எதிரில் செயற்கை கடல் மணல்பரப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கடற்கரை சாலை டூப்ளே சிலை அருகே அருகே கடலில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதை அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது: ஆண்டுதோறும் சிறிதளவு கடல் அரிப்பு இருக்கும். இந்த ஆண்டு அதிக கடல் அரிப்பு உள்ளது.

    இதுகுறித்து கடல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்து ஆய்வு செய்ய கூறியுள்ளோம். செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் திட்டம் 2017-ல் தொடங்கப்பட்டது. கடல் அரிப்பு இயற்கை நிகழ்வு.

    ஒரு இடத்தில் மணல் எடுத்தால் அடுத்த இடத்தில் சேரும். இடிந்து விழுந்த பழைய துறைமுக பாலம் முழுவதுமாக இடத்து கப்பல் வருகை, சுற்றுலா பயணிகள் பார்வையிடும் வகையில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய துறைமுகத்துறை இத்திட்டத்துக்கு நிதி தர ஒப்புதல் அளித்துள்ளது என தெரிவித்தார்.

    • கப்பல் போக்குவரத்துக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதாக மந்திரி டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்
    • இது நடைமுறை படுத்தப்பட்டால் காரைக்காலில் இருந்து 3 மணி நேரத்தில் இலங்கை சென்றடையலாம்.

    புதுச்சேரி:

    காரைக்கால்- இலங்கை யாழ்ப்பாணம் இடையே கப்பல் போக்குவரத்தை தொடங்க புதுவை அரசு முடிவு செய்தது. கடந்த ஆண்டே இதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கின.

    யாழ்ப்பாணம்-காரைக்கால் இடையே பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதாக இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தாவும் தெரிவித்துள்ளார். இது நடைமுறை படுத்தப்பட்டால் காரைக்காலில் இருந்து 3 மணி நேரத்தில் இலங்கை சென்றடையலாம்.

    இந்நிலையில், புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காரைக்கால் - இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கும் என்றார். இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் காலதாமதம் ஏற்படுவதால் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

    நாகூர் கச்சா எண்ணெய் குழாய் உடைப்பால் காரைக்கால் கடலில் பாதிப்பா? என அதிகாரிகள் ஆய்வு செய்வதாகவும் அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறினார். 

    • பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மினிமம் இரண்டு கிலோமீட்டர் ஆட்டோவில் பயணம் செய்ய ரூ. 59 வசூலிக்கப்படுகிறது.
    • பொதுமக்கள் தங்களது மீட்டர் ஆட்டோ தொடர்புக்கு 63800 91343 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் புதிதாக ஆட்டோ ஓட்டுநர்கள் ஒன்றிணைந்து லட்சுமி நாராயணன் மீட்டர் ஆட்டோ என்று புதிதாக ஆரம்பித்து உள்ளனர்.

    இந்த மீட்டர் ஆட்டோ வாகனமானது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மினிமம் இரண்டு கிலோமீட்டர் ஆட்டோவில் பயணம் செய்ய ரூ. 59 வசூலிக்கப்படுகிறது .

    அதனை தொடர்ந்து அதிகரிக்கும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.18 வீதம் வசூலிக்கப்படுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    இந்த ஆட்டோ ஓட்டுநர்களை தஞ்சை மாவட்டத்தில் தமிழ்நாடு லட்சுமி நாராயணன் அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் சங்கம் மாநில பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வி என்பவர் வழிநடத்திச் செல்கின்றார்.

    குறிப்பாக பொதுமக்கள் தங்களது மீட்டர் ஆட்டோ தொடர்புக்கு 63800 91343 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த லட்சுமி நாராயணன் மீட்டர் ஆட்டோ குடும்பத்தில் இணைவதற்கு ஆட்டோ ஓட்டுநர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொண்டு தங்களது வாகனத்தின் அசல் சான்றுகளை சமர்ப்பித்து தங்களுடன் சேர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம் என லட்சுமி நாராயணன் மீட்டர் ஆட்டோ சார்பாக தமிழ்ச் செல்வி தெரிவித்துள்ளார்.

    மேலும் முற்றிலும் எந்த ஒரு வாகனம் நிறுத்தும் ஸ்டேன்ட் இடம் இல்லாத சூழ்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ ஓட்டுநர்களை கருத்தில் கொண்டு அவர்களை ஒன்றிணைத்து மீட்டர் ஆட்டோ என்று தொடங்கப்பட்டுள்ளதாக தமிழ்ச்செல்வி தெரிவித்தார்.

    குறைந்த கட்டணத்தில் இயக்கப்படுவதால் பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

    • நாட்டிலேயே சுகாதாரத் துறைக்கு பட்ஜெட் நிதியில் 9 சதவீதம் நிதி ஒதுக்கிய முதல் மாநிலம் என்ற சிறப்பு புதுவைக்கு உண்டு.
    • ஏழை எளிய மக்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் ஒரு சிறப்பம்சம் உள்ள பட்ஜெட்டை முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:

    நாட்டிலேயே சுகாதாரத் துறைக்கு பட்ஜெட் நிதியில் 9 சதவீதம் நிதி ஒதுக்கிய முதல் மாநிலம் என்ற சிறப்பு புதுவைக்கு உண்டு. மத்திய அரசிடம் இருந்து தேவையான நிதி புதுவைக்கு வரும்போது மாநிலம் மேலும் மேலும் வளர்ச்சி பெறும். முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு நிலுவையில் உள்ளது.

    அதற்கான தொகை உடனடியாக வழங்கப்படும். நடப்பு ஆண்டுக்கு கல்வித்துறைக்கு தேவையான கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் ஒரு சிறப்பம்சம் உள்ள பட்ஜெட்டை முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ளார்.

    அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும், காகிதம் இல்லா அரசு துறைகளை உருவாக்க பட்ஜெட்டில் அறிவித்துள்ளது சிறப்பு வாய்ந்தது. அனைத்து தரப்பு மக்களின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையிலும், கடந்த 5 ஆண்டு கஷ்டங்களை நிவர்த்தி செய்யும் வகையிலும் பட்ஜெட் உள்ளது.

    மக்களை நேரடியாக சென்றடையும் திட்டங்களை தீட்டுவதன் மூலம் மக்களின் நுகர்வோர் சக்தி அதிகரிக்கும். மத்திய அரசின் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் விமானநிலைய விரிவாக்க நிதி, புதிய சட்டசபைக்கான நிதி, இந்திராகாந்தி சிலை மேம்பாலம் கட்ட நிதி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நிதி ஆகியவை ஒதுக்கப்படும்.

    இவை பட்ஜெட்டில் சேர்க்காதது. மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக ஊக்குவிப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்வதாக எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளதால், பட்ஜெட் தொகையுடன் கூடுதலாக நிதி கிடைக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×