திருப்பதி கோவிலில் கோடை விடுமுறையில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து

வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருப்பதி கோவிலில் கோடை விடுமுறையில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து
Published on

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் குவிந்து வருவது வழக்கம். நேற்று முன்தினம் மாலை முதல் திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நேற்று காலை தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. ஆந்திராவில் தற்போது கடும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

கோடைகால விடுமுறையில் மேலும் அதிக அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை ரத்து செய்ய உள்ளதாக தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.

திருப்பதியில் நேற்று 75,414 பேர் தரிசனம் செய்தனர். 30,073 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.68 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com