என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Celebration"

    திருப்பத்தூர் பகுதிகளில் பெரும்பிடுகு முத்தரையரின் சதயவிழா கொண்டாட்டப்பட்டது.
    திருப்பத்தூர்

    பேரரசர்  பெரும்பிடுகு முத்தரையரின் பிறந்தநாள் விழா 2002-ம் ஆண்டில் இருந்து சதய விழாவாக கொண்டாடப்படுகிறது.

    முத்தரையர் சங்கத்தினர், அரசியல் கட்சியினர், சமுதாய அமைப்பினர் பல்வேறு இடங்களில் இருந்து ஊர்வலமாக வந்து திருச்சியில் உள்ள முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.

    திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பிடுகு முத்தரையரின் 1347-வது சதய விழா முத்தரையர் கூட்டமைப்பின் தலைவர் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது. 

    இதில் திருக்கோஷ்டியூர், திருப்பத்தூர், காரையூர், ரணசிங்கபுரம், அய்யாபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெரும்பிடுகு முத்தரையர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 

    அதனைத்தொடர்ந்து கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் சதய விழாவை கொண்டாடினர். 

    இதில் முத்தரையர் கூட்டமைப்பின் இளைஞர்கள், மகளிர் அணி தலைவி அய்யாபட்டி லதா, ஆத்திக்காடு மாரிமுத்து, காரையூர் தவசு, திருக்கோஷ்டியூர் வட்டார தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் மேலயான்பட்டி சக்தி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    குமாரபாளையத்தில் உலக சைக்கிள் தினம் கொண்டாடப்பட்டது.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் பொதுநல அமைப்பின் சார்பில் உலக சைக்கிள் தினம் கொண்டாடப்பட்டது. போலீஸ் ஸ்டேஷன் முன்பிருந்து அமைப்பின் நிர்வாகி சீனிவாசன் தலைமயில் 17 பேர் சைக்கிளில் சென்றனர்.

     காவேரி நகர், பெரந்தார் காடு, அரசு மேல்நிலைப்பள்ளி சாலை, சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை, தாலுக்கா அலுவலக சாலை, தம்மண்ணன் சாலை, நகராட்சி அலுவலக காந்தி சிலை முன்பு நிறைவு பெற்றது. 

    ஒவ்வொரு முக்கிய இடங்களில் நின்று, சைக்கிளில் சென்றால் என்னென்ன நன்மைகள் என்பது பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதில் செயலர் பிரபு, பொருளர் வரதராஜ், செந்தில்குமார், மோகன்ராஜ், பாலாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    • பிம்ஸ் மருத்துவமனையில் தீபாவளி நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டது.
    • கல்லூரி முதல்வர் டாக்டர் அனில் பூர்த்தி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பீட்டர் மனோகரன் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    பிம்ஸ் மருத்துவமனையில் தீபாவளி நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் டாக்டர் அனில் பூர்த்தி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பீட்டர் மனோகரன் முன்னிலை வகித்தனர்.

    பிம்ஸ் நிர்வாக குழு முதன்மை ஆலோசகர் பாபு டேனியல் தலைமை தாங்கி பேசினார். பிம்ஸ் மருத்துவமனை ஊழியர்களை உற்சாகப்படுத்தும் விதமாக குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலிகளை தேர்வு செய்து பல்வேறு பரிசுகள் வழங்கும் நிகழ்வு முதல் முறையாக நடக்கிறது.

    முதல் பரிசாக 4 கிராம் தங்க நாணயம் 2-ம் பரிசாக மொபைல் போன் 3-ம் பரிசு மைக்ரோ ஓவன் நான்காம் பரிசாக டிராவல் பேக் 5-ம் பரிசாக 50-பேருக்கு ஹாட் பாக்ஸ். உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.முதல் பரிசு நான்கு கிராம் தங்க நாணயத்தினை அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரியும் செவிலியர் ஷர்மிளாவுக்கு கிடைத்தது.

    நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மருத்துவ மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • தீபாவளி பண்டிகையை அதன் சுற்றுபகுதியில் நரிக்குறவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உடன் கொண்டாடி வருகிறார்.
    • மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த அண்டர்காடுசுந்தரரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியா ற்றுபவர் வசந்தா . வேதாரண்யம் பகுதிகளில் நிறைய சமூக சேவைகளை ஆற்றுபவர்.

    பற்றி மாணவர்களுக்கு மழை காலங்களில் பற்றி வருவது தடைபட கூடாது என கருதி இதுவரை ஜந்து ஆயிரம் குடைகளை பற்றி மாணவர்களுக்கு வழங்கி உள்ளார் அது போல் இதுவரை பொது மக்களுக்கு 5 லட்சம் முககவசம் வழங்கி உள்ளார்

    பல்வேறுசமூகப் சேவை பணிகளுக்காக ஜம்பதுக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றிருக்கிறார்.இவர் வருடம் தோறும் தீபாவளி பண்டிகையை வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நரிகுறவர்கள் ( நாடோடிகள்) மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உடன் கொண்டாடி வருகிறார்.

    அதேபோல் இந்த ஆண்டும்வேதாரண்யத்தை அடுத்த அண்டர் காடு, ஆயக்காரன்புலம், வாய்மேடு ,தாணிக்கோட்டகம் மற்றும் இடும்பாவனம் பகுதிகளில் சாலை ஓரங்களில் தற்காலிக குடிசைகளில் நிரந்தரமாக வசித்து வரும்40 நாடோடி குடும்பங்களைச் சேர்ந்த 125 க்கு மேற்பட்டவர்களுடனும் வீதிகளிலும் சாலைகளில் சுற்றித் திரியும் மனநலம் பாதித்த 50 நபர்களுடனும்தீபாவளியை கொண்டாடினார்.

    இதில் கலந்துகொண்ட நாடோடிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்குஅன்பளிப்பு , புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள், மற்றும் காலை உணவு வழங்கினார்

    நிகழ்ச்சியில்சமூக ஆர்வலர் சித்திரவேல், மற்றும்ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள்கலந்து கொண்டனர். படவிளக்கம் வேதாரண்யம் அடுத்த அண்டர்காட்டில் நரிகுறவர்களுக்கு புத்தாடைகளை ஆசிரியை வசந்தா வழங்கினார்

    • அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழா ராமநாதபுரம், கீழக்கரை, திருப்புல்லாணியில் கொண்டாடப்பட்டது.
    • தொடர்ந்து 51 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் அ. தி. மு. க. பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கி ணங்க, மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் எம்.ஏ. முனியசாமி தலைமையில், நகர் செயலாளர் பால்பாண்டியன் ஏற்பாட்டில் அரண்மனை அருகே அ.தி.மு.க.51-வது ஆண்டு தொடக்க விழா நடந்தது. முன்னதாக அ.தி.மு.க.கட்சி கொடியினை மாவட்ட செயலாளர் ஏற்றி வைத்தார். தொடர்ந்து 51 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர்.

    இதைத் தொடர்ந்து ராமநாதபுரம் அரண்ம னையில் இருந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று பொதுமக்களிடம் வாழ்த்து பெற்றனர். விழாவில் மாவட்ட அவைத்தலைவர் சாமிநா தன்,எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ரத்தினம், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் சேது பாலசிங்கம், ஸ்டாலின் ஜெயச்சந்திரன், செந்தில்குமார், சரவ ணகுமார், திலகர், ராதாகிருஷ்ணன், ஜெயல லிதா பேரவை செயலாளர் சேது பாலசிங்கம், ராமநா தபுரம் நகர் துணைச் செயலாளர் ஆரிப் ராஜா, முன்னாள் நகர் மன்ற தலைவர் ராமமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கீழக்கரை இந்து பஜாரில் அ.தி.மு,க, 51 ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அவைத் தலைவர் சரவண பாலாஜி தலைமையில் நகர செயலாளர் ஜகுபர் உசேன் முன்னிலையில் கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

    இதில் துணைச்செய லாளர் குமரன், பொரு ளாளர் ஹரி நாராயணன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் வேலன், முன்னாள் நகர செயலாளர் இம்பாலா உசேன், கருப்பையா, முனியசாமி, பாருக், விஜி காசிநாதன், அங்குசாமி, சிவா, சிவராமலிங்கம், பிரதீபன், முகைதீன் அப்துல் காதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் 51-ம் ஆண்டுதொடக்க விழாவை யொட்டி ஒன்றிய செய லாளர் கருப்பையா தலைமையில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. அதேபோல் திருப்புல்லாணி ஒன்றியம் மாயாகுளத்தில் ஒன்றிய துணைச் செயலாளர் பாக்கியநாதன் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி பாக்கியநாதன் அ. தி.மு,க.கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் ஏராள மான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் இரண்டு பதக்கங்கள் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
    • பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அடுத்த கோவிலாச்சேரியில் உள்ள அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய மாணவர் படை மாணவி மற்றும் மூன்றாம் ஆண்டு பாதுகாப்பியல் மற்றும் போர் திறனியல் துறை சேர்ந்த சி.யு.ஓ சிந்துஜா இந்திய அளவில் நடைபெற்ற ஜிவி மௌலாங்கர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் இரண்டு பதக்கங்கள் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

    இதற்கான பாராட்டுவிழா நடைபெற்றது.

    விழாவிற்கு அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மாணிக்கவாசுசி முன்னிலை வகித்தார்.

    அன்னை கல்வி குழுமத்தின் தலைவர் அன்வர் கபீர் வாழ்த்துரை வழங்கினார். செயலாளர் ஹுமாயூன் கபீர், நிர்வாக அலுவலர் ரவி மற்றும் தலைமை செயல் அலுவலர் ராஜ்குமார் ஆகியோர் மாணவியை பாராட்டினர்.

    துணை முதல்வர்கள் பேராசிரியர் இளஞ்செழியன் மற்றும் பேராசிரியர் ராஜா ஆகியோர் மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    இதில் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் உலக கண் பார்வை தின விழா நடந்தது.
    • கண் பார்வையினை பாதுகாக்க ஆலோசனை வழங்கினார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ராஜபாளையம்-தென்காசி ரோட்டில் இளந்தோப்பில் உள்ள பி.ஏ.சி.ஆர் அரசு மருத்துவமனை, கண் மருத்துவப்பிரிவு. இணைந்து உலக கண் பார்வை தின விழாவை நடத்தியது.

    செவிலியர் கண்காணிப்பாளர் விஜயலட்சுமி வரவேற்றார். தலைமை பொறுப்பு மருத்துவர் உமா ஜெயபாஸ்கர் தலைமை தாங்கினார். டாக்டர்கள் சுரேஷ், சீனிவாசன், மேகலா, அருண், கலைச்செல்வி முன்னிலை வகித்தனர்.மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க மேலாளர், தலைமை கண் மருத்துவர் பொன்னுசாமி, கண்களை பாதுகாப்பது, கண்ணில் ஏற்படும் கண்நோய்கள், அதனால் ஏற்படும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோயினால் ஏற்படும் பார்வை இழப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    கண் மருத்துவர் நதியா குழந்தை பிறந்தவுடன் கண்ணில் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிய, கண் புரை அறுவை சிகிச்சைக்குப்பின் கண் பார்வையினை பாதுகாக்க ஆலோசனை வழங்கினார். இதில் பொதுமக்கள் மற்றும் வெளிநோயாளிகள் மற்றும் கண் அறுவை சிகிச்சை செய்த நோயாளிகள் கலந்துகொண்டனர். முதுநிலை கண் மருத்துவ உதவியாளர் பால்ராஜ், கண் மருத்துவ உதவியாளர் பிரேமா ஆகியோர் நன்றி கூறினர்.

    • ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் முதியோர் காப்பகத்தில் உலக முதியோர் தின விழா நடந்தது.
    • சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் நடத்தப்பட்டது.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் முதியோர் காப்பகத்தில் உலக முதியோர் தின விழா நடந்தது. கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கி முதியோர்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ந் தேதி முதியோர் தின விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதன் நோக்கம் ஒவ்வொரு முதியோர் இல்லத்திலும் வயதான பெரியவர்கள் தங்கி வரும் வேளையில், அவர்கள் பல்வேறு நிலைகளில் இருந்ததை எண்ணி மனக்கவலையுடன் இருப்பார்கள். அதை மாற்றி சந்தோசமாக அவர்கள் இருக்க வேண்டும் என்பதை எண்ணி அரசே ஓவ்வொரு ஆண்டும் முதியோர் தின விழாவை நடத்தி அவர்களது கோரிக்கைகளை கேட்டு நிறைவேற்றி தருவதுடன் பல்வேறு திட்டங்களையும் அரசு வழங்கி வருகிறது.

    முதியோர் இல்லங்களில் தங்கியுள்ள முதியவர்கள் கடந்த கால நிலையை எண்ணி கவலை படக் கூடாது. முதியவர்களும் குழந்தைகளும் ஒன்றே.காரணம் குழந்தைகள் எதிர்காலம் பற்றி நினைக்காமல் சந்தோசமாக இருப்பார்கள். அதேபோல வயது முதிர்வில் உள்ள நீங்கள் கடந்த காலங்களை எண்ணி கவலைப்படாமல், இருக்கும் இடத்தில் சந்தோசமாக இருக்க வேண்டும்.

    இதுபோன்ற காப்பகங்களில் பல்வேறு இடங்களில் இரு0ந்து அறிமுக இல்லாத நபர்கள் உங்களுடன் சேர்ந்து தங்கி இருக்கும் நிலை ஏற்படும்.அப்போது அவர்களுடன் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி நட்பை உருவாக்கி சந்தோசமாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.அதனை தொடர்ந்து கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் 11 பேருக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணைகளையும், கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கினார்.

    இதில் கோட்டாட்சியர் மரகதநாதன், மாவட்ட சமூகநல அலுவலர் சாந்தி, முதியோர் இல்ல ஒருங்கிணைப்பாளர் ஜான் பிரிட்டோ, பார்த்திபனூர் ஊராட்சி மன்றத் தலைவர் சுகன்யா சதீஸ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • காந்தி ெஜயந்தி கொண்டாட்டத்தில் சிலைக்கு அமைச்சர்-கலெக்டர் மரியாதை செலுத்தினர்.
    • மதுரை கோட்டத்தில் பல்வேறு ெரயில் நிலையங்களில் நடந்து வரும் தூய்மை பிரசார பணிகள் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது.

    மதுரை

    மகாத்மா காந்தி பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. மதுரை காந்தி அருங்காட்சி யகத்திலும் காந்தி ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவில் கலெக்டர் அனீஷ்சேகர் கலந்து கொண்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதைத் தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகள், பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் ஆகியோர் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர். மேலும் காந்தி மியூசியத்தில் உள்ள அஸ்தி பீடத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    மதுரைக்கு வருகை தந்த காந்தி மேல மாசி வீதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கினார். அப்போதுதான் அவருக்கு அரை ஆடை அணிவது பற்றிய ஞானோ தயம் ஏற்பட்டது. அதனை நினைவு கூறும் வகையில் மதுரை மேலமாசி வீதியில் காந்தி தங்கி இருந்த வீடு, நினைவுச் சின்னமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

    அமைச்சர் மூர்த்தி

    காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு அமைச்சர் மூர்த்தி இன்று காலை மேல மாசி வீதியில் உள்ள நினைவிடத்தில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கதர் ஆடை விற்பனையை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி மேயர் இந்தி ராணி, மதுரை மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித்சிங் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை கிழக்கு ஒன்றியம் ராஜாக்கூர் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டார்.

    மகாத்மா காந்தி கடந்த 1921-ம் ஆண்டு மதுரைக்கு ரெயில் மூலம் வந்தார். அதனை நினைவு கூறும் வகையில் ெரயில் நிலையத்தில் ஒரு நினைவுச் சின்னம் (காந்தி கார்னர்) அமைக்கப்பட்டுள்ளது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அங்குள்ள படத்திற்கு கோட்ட ெரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் உட்பட அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    மேலும் காந்தி வாழ்க்கை வரலாறு சம்பந்தப்பட்ட 100 புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சியும் திறந்து வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு கண்காட்சி நடந்தது. இதனை கோட்ட ெரயில்வே மேலாளர் தொடங்கி வைத்தார்.

    அப்போது பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மூங்கில், மரக்குச்சிகள், பேப்பர், சில்வர் டப்பா க்கள் போன்றவற்றை பயன்படுத்த வலியுறுத்தும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து மதுரை கோட்டத்தில் பல்வேறு ெரயில் நிலையங்களில் நடந்து வரும் தூய்மை பிரசார பணிகள் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது.

    மதுரை ெரயில் நிலைய முதல் நடைமேடை சுற்றுச்சுவரில் காந்தி மார்பளவு உருவம் மற்றும் தூய்மை பிரச்சாரம் பற்றிய நவீன ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.

    நிகழ்ச்சியில் கூடுதல் கோட்ட ெரயில்வே மேலா ளர் தண்ணீரு ரமேஷ்பாபு, முதுநிலை பொறியாளர் நாராயணன், முதுநிலை எந்திரவியல் பொறியாளர் சதீஷ் சரவணன், சுற்றுச்சூழல் மேலாளர் மகேஷ் கட்கரி, கோட்ட வர்த்தக மேலாளர் பிரபு பிரேம்குமார், ஊழியர் நல அதிகாரி சங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மதுரை நேருயுவகேந்திரா சார்பில் மகாத்மா காந்தி பிறந்தநாள், சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள் ஆகியவற்றை முன்னிட்டு விழிப்புணர்வு ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதனை டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்க நுழைவு வாயில் முன்பு கலெக்டர் அனீஷ்சேகர் மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித்சிங் ஆகியோர் ெதாடங்கி வைத்தனர்.

    இதையொட்டி தினந்தோறும் குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்ய வேண்டும். அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் நேருயுவகேந்திரா மதுரை மண்டல இயக்குநர் செந்தில், மதுரை மாவட்ட நீச்சல் கழக செயலாளர் கண்ணன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பயிற்றுநர்கள், நேருயுவகேந்திரா தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    • நகராட்சி தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு தொடங்குவதன் தொடக்கவிழா நடைபெற்றது.
    • எடமணல் கிராமத்தில் உள்ள நகராட்சிக்கு உரிய திடலில் மரக்கன்றுகள் நடும் விழா.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் தொடங்குவதின் தொடக்கவிழா நடைபெற்றது.

    விழாவையொட்டி சீர்காழி அடுத்த எடமணல் கிராமத்தில் உள்ள நகராட்சிக்கு உரிய திடலில் மரக்கன்றுகள் நடும் விழா நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது.

    பணிதள மேற்பார்வையாளர் விஜயேந்திரன், வருவாய் ஆய்வாளர் சார்லஸ், நகராட்சி எழுத்தர் ராஜகணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    தொடர்ந்து நகர்மன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், ராஜசேகரன், வேல்முருகன், ஜெயந்திபாபு, ரமாமணி, முபாரக், சாமிநாதன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

    • காமராஜ் நகர் பகுதி அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
    • நற்பணி மன்ற நிர்வாகிகள் மாயாண்டி பாரதி, பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தின் சார்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87-வது பிறந்த நாளை முன்னிட்டு பாவூர்சத்திரம் காமராஜ் நகர் பகுதியில் இயங்கிவந்த அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு கேக் வெட்டி இனிப்புகள்,பழங்கள் வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    இவ்விழாவில் மன்றத்தின் நிர்வாகிகளான மாயாண்டி பாரதி, பரமசிவம், ஈஸ்வர பாண்டியன், பால் கண்ணன் உறுப்பினர்கள் சேர்ம ராஜா, முத்துக்குமார், சக்திவேல் என்ற ஜெகன், சண்முகராஜ், சுபாஷ் மற்றும் சிவந்தி ஆதித்தனார் கால்பந்தாட்ட அணி வீரர்களான மணி கிருஷ்ணா, அஜித்குமார், வின்ஸ்டன், ராகவா, ராம் குட்டி, சதீஷ், சிவந்தி ஆதித்தனார் கபாடி அணி வீரர்கள் காமராஜ், முத்து, பிரபு, வெண்ணிக் குமார் செல்வகுமார், அங்கன்வாடி குழந்தைகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு மாவட்ட டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் நாடார் சங்க அலுவலகத்தில் சிவந்தி ஆதித்தனாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • மாவட்ட தலைவர் ஞானபால் பா.சிவந்தி ஆதித்தனார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    ஈரோடு:

    டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனாரின் 87-வது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு மாவட்ட டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் திருநகர் காலனியில் உள்ள நாடார் சங்க அலுவலகத்தில் சிவந்தி ஆதித்தனாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனாரின் நற்பணி மன்ற ஈரோடு மாவட்ட தலைவர் ஞானபால் பா.சிவந்தி ஆதித்தனார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் உப தலைவரும், ஈரோடு நாடார் சங்க தலைவருமான உதயம் செல்வம், மாநகர தலைவர் சண்முகம், செயற்குழு உறுப்பினர் ராதா, நாடார் சங்க உப தலைவர் முருகையா, செல்லசாமி, மோகன்ராஜ், பேங்க் பாண்டி, ஜோசப், வேல்பாண்டி, வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×