என் மலர்
உள்ளூர் செய்திகள்

பதக்கம் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு.
துப்பாக்கி சுடுதல் போட்டி; பதக்கம் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு
- ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் இரண்டு பதக்கங்கள் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
- பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
கும்பகோணம்:
கும்பகோணம் அடுத்த கோவிலாச்சேரியில் உள்ள அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய மாணவர் படை மாணவி மற்றும் மூன்றாம் ஆண்டு பாதுகாப்பியல் மற்றும் போர் திறனியல் துறை சேர்ந்த சி.யு.ஓ சிந்துஜா இந்திய அளவில் நடைபெற்ற ஜிவி மௌலாங்கர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் இரண்டு பதக்கங்கள் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இதற்கான பாராட்டுவிழா நடைபெற்றது.
விழாவிற்கு அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மாணிக்கவாசுசி முன்னிலை வகித்தார்.
அன்னை கல்வி குழுமத்தின் தலைவர் அன்வர் கபீர் வாழ்த்துரை வழங்கினார். செயலாளர் ஹுமாயூன் கபீர், நிர்வாக அலுவலர் ரவி மற்றும் தலைமை செயல் அலுவலர் ராஜ்குமார் ஆகியோர் மாணவியை பாராட்டினர்.
துணை முதல்வர்கள் பேராசிரியர் இளஞ்செழியன் மற்றும் பேராசிரியர் ராஜா ஆகியோர் மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதில் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.