என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பிம்ஸ் மருத்துவமனையில் தீபாவளி கொண்டாட்டம்
    X

    பிம்ஸ் மருத்துவமனையில் தீபாவளி கொண்டாட்டத்தில் ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கிய காட்சி.

    பிம்ஸ் மருத்துவமனையில் தீபாவளி கொண்டாட்டம்

    • பிம்ஸ் மருத்துவமனையில் தீபாவளி நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டது.
    • கல்லூரி முதல்வர் டாக்டர் அனில் பூர்த்தி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பீட்டர் மனோகரன் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    பிம்ஸ் மருத்துவமனையில் தீபாவளி நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் டாக்டர் அனில் பூர்த்தி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பீட்டர் மனோகரன் முன்னிலை வகித்தனர்.

    பிம்ஸ் நிர்வாக குழு முதன்மை ஆலோசகர் பாபு டேனியல் தலைமை தாங்கி பேசினார். பிம்ஸ் மருத்துவமனை ஊழியர்களை உற்சாகப்படுத்தும் விதமாக குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலிகளை தேர்வு செய்து பல்வேறு பரிசுகள் வழங்கும் நிகழ்வு முதல் முறையாக நடக்கிறது.

    முதல் பரிசாக 4 கிராம் தங்க நாணயம் 2-ம் பரிசாக மொபைல் போன் 3-ம் பரிசு மைக்ரோ ஓவன் நான்காம் பரிசாக டிராவல் பேக் 5-ம் பரிசாக 50-பேருக்கு ஹாட் பாக்ஸ். உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.முதல் பரிசு நான்கு கிராம் தங்க நாணயத்தினை அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரியும் செவிலியர் ஷர்மிளாவுக்கு கிடைத்தது.

    நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மருத்துவ மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×