மரக்கன்று நடும் விழா

நகராட்சி தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு தொடங்குவதன் தொடக்கவிழா நடைபெற்றது.எடமணல் கிராமத்தில் உள்ள நகராட்சிக்கு உரிய திடலில் மரக்கன்றுகள் நடும் விழா.
நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன் மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.
நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன் மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.
Published on

சீர்காழி:

சீர்காழி நகராட்சி தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் தொடங்குவதின் தொடக்கவிழா நடைபெற்றது.

விழாவையொட்டி சீர்காழி அடுத்த எடமணல் கிராமத்தில் உள்ள நகராட்சிக்கு உரிய திடலில் மரக்கன்றுகள் நடும் விழா நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது.

பணிதள மேற்பார்வையாளர் விஜயேந்திரன், வருவாய் ஆய்வாளர் சார்லஸ், நகராட்சி எழுத்தர் ராஜகணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

தொடர்ந்து நகர்மன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், ராஜசேகரன், வேல்முருகன், ஜெயந்திபாபு, ரமாமணி, முபாரக், சாமிநாதன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com