search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புரதம்"

    • புரதச்சத்து என்பது 20-க்கும் மேற்பட்ட அமினோ அமிலங்களின் கூட்டுச்சேர்க்கை.
    • ஹீமோகுளோபின் போன்றவை உற்பத்தியாகவும் புரதம் அவசியம்.

    புரதச்சத்து என்பது 20-க்கும் மேற்பட்ட அமினோ அமிலங்களின் கூட்டுச்சேர்க்கை. இது தசைகளுக்கு வலுசேர்க்கிறது. செல்களை புதுப்பிக்கவும், காயம், புண் போன்றவை ஆறுவதற்கும் உதவுகிறது. என்சைம், ஹார்மோன், வைட்டமின், பித்தநீர், ஹீமோகுளோபின் போன்றவை உற்பத்தியாகவும் புரதம் அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியை தருகிற இமுனோ குளோபுலின்களைத் தயாரிக்கவும் இது தேவை. நமக்கு தினமும் சராசரியாக 50 கிராம் புரதம் அவசியம். இதை நாம் சாப்பிடும் உணவில் இருந்தே பெறலாம். சைவம் சாப்பிடுபவர்கள் பால், தயிர், பருப்பு, பயறு, காளான், எண்ணெய் வித்துக்கள் வழியாகவும், அசைவம் சாப்பிடுபவர்கள் மீன், முட்டை, இறைச்சியை உட்கொள்வதன் வழியாகவும் புரதச்சத்தை பெறலாம்.

    இயற்கை உணவைச் சாப்பிடும்போது, புரதச்சத்துடன் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, வைட்டமின், தாது போன்ற மற்ற சத்துக்களும் கிடைத்துவிடும். இது உடல் ஆரோக்கியத்துக்கு இன்னும் வலுசேர்க்கும். செயற்கை பானங்களில் இருக்கிற புரதத்தை உடல் செரிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சிலர் உடல் எடையைக் குறைக்கிறேன் என்று புரதச்சத்து சம்பந்தப்பட்ட பவுடரை மட்டும் உட்கொண்டு, உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கின்றனர். இதுவும் தவறு.

    உடற்பயிற்சி கூடத்துக்கு செல்பவர்கள் தினமும் இரண்டு முட்டைகளின் வெள்ளைக்கரு, பருப்பு குழம்பு அல்லது கூட்டு, அரை லிட்டர் பால், 200 கிராம் பயறு, 300 கிராம் கோழி இறைச்சி, நவதானியங்கள் கலந்த சத்துமாவு 200 கிராம் சாப்பிட்டுவந்தால், அவர்களுக்குத் தேவையான அளவு புரதம் கிடைத்துவிடும்.

    • புளியோதரை போன்ற பிரசாதங்களும் அரிசியால் மட்டுமே செய்யப்படுகின்றன.
    • புரதங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உட்கொள்வதை அதிகரிக்க வேண்டும்.

    பெரும்பாலான மக்கள் காலை முதல் இரவு உணவு வரை இட்லி, தோசை, ரொட்டி, பூரி, உப்மா, பொங்கல், சப்பாத்தி, சாதம், பிரியாணி போன்ற கார்போஹைட்ரேட்கள் நிறைந்த உணவையே எடுத்துக்கொள்கிறார்கள். நாம் திருவிழா நேரங்களில் செய்யும் தின்பண்டங்கள், கோவிலில் வழங்கப்படும் புளியோதரை போன்ற பிரசாதங்களும் அரிசியால் மட்டுமே செய்யப்படுகின்றன.

    சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமனுக்கு முக்கிய காரணம் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுப்பொருட்களை சாப்பிடுவதால் தான்  என மருத்துவர்கள் கூறுகின்றனர். கார்போஹைட்ரேட் அளவைக் குறைத்து, புரதங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உட்கொள்வதை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர். எனவே வித்தியாசமாக வரகு அரிசியை கொண்டு புளியோதரை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    வரகரிசி- ஒரு கப்

    மல்லி (தனியா)- ஒரு டீஸ்பூன்

    எள் - ஒரு டீஸ்பூன்

    வெந்தயம் - கால் ஸ்பூன்

    காய்ந்த மிளகாய் - 10

    புளி - பெரிய எலுமிச்சை அளவு

    வேர்க்கடலை - 5 தேக்கரண்டி

    கடலைப்பருப்பு- ஒரு ஸ்பூன்

    உளுந்தம்பருப்பு, கடுகு- ஒரு ஸ்பூன்

    கறிவேப்பிலை- தாளிக்க

    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

    எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி

    உப்பு - தேவைக்கேற்ப

    செய்முறை:

    வரகு அரிசியை சுத்தம் செய்து 10 நிமிடம் ஊறவைத்து, தண்ணீர் அளவு ஒருகப் அரிக்கு இரண்டு கப் தண்ணீர் விட்டு வேகவிடவும். புளியை ஊற வைக்கவும். ஒரு வாணலியில் மல்லி (தனியா), எள், வெந்தயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனித்தனியே வறுத்து ஆறவிட்டு, மிக்சியில் போட்டு பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயத்தூள், கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை தாளிக்க வேண்டும். பின்னர் புளியைக் கரைத்து ஊற்றி மஞ்சள்தூள் உப்பு சேர்த்து கொதிக்கவிட வேண்டும்.

    அதன்பிறகு, அரைத்து வைத்திருக்கும் பொடியை சேர்த்துக் கிளறி, எண்ணெய் நன்கு பிரிந்துவரும் போது இறக்கினால். புளிக்காய்ச்சல் தயார். தேவையான அளவு புளிக்காய்ச்சலை எடுத்து வரகு அரிசி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.

    • கொழுப்பு, புரதம், சர்க்கரை, சாம்பல் சத்து ஆகியவை உள்ளன.
    • புரதம், சாம்பல் சத்து, சர்க்கரை ஆகியவை கொழுப்பற்ற திடப்பொருட்கள் ஆகும்.

    பாலுக்கு விலை என்பது பாலில் அடங்கியுள்ள சத்துக்களின் அளவை கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. பாலில் கொழுப்பு மற்றும் இதர சத்துக்களை உயர்த்த சரியான தீவன மேலாண்மையை கையாள வேண்டும்.

    பாலில் தண்ணீர், கொழுப்பு, புரதம், சர்க்கரை, சாம்பல் சத்து ஆகியவை உள்ளன. இதில் புரதம், சாம்பல் சத்து, சர்க்கரை ஆகியவை கொழுப்பற்ற திடப்பொருட்கள் ஆகும். இவற்றை தவிர கொழுப்பின் அளவை கொண்டு பாலுக்கான விலை நிர்ணயிக்கப்படுகிறது. பொதுவாக, பசும்பாலில் 3.5 சதவீதம் கொழுப்பும், 8.5 சதவீதம் கொழுப்பற்ற திடப்பொருட்களும் இருக்க வேண்டும். பாலில் கொழுப்பு மற்றும் இதர சத்துக்களை தீவனம் உள்பட சில வழிகளில் அதிகரிக்கலாம். மாடுகளில் 1 லிட்டர் பால் உற்பத்திக்கு 400 கிராம் கலப்புத் தீவனம் கொடுக்கலாம்.

    மேலும், கலப்புத் தீவனத்தில் மாவுச்சத்துக்களின் அளவு அதிகரித்தால், பாலில் கொழுப்பற்ற திடப்பொருட்களின் அளவு அதிகரிக்கும். மாடுகளின் பாலில் இதர சத்துப் பொருட்கள் அதிக அளவில் இருக்க 12 மணி நேரத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக பால் கறக்க வேண்டும். மடியில் பாலை சேர விடக்கூடாது. சினை மாடுகளுக்கு 8 மாத சினைக்காலம் முதல் 2 கிலோ அடர்தீவனம் கொடுத்தால் பாலின் உற்பத்தியும், பாலில் கொழுப்பற்ற திடப்பொருட்களின் அளவு அதிகரிக்கும்.

    பாலில் கொழுப்பின் அளவை அந்த மாடுகளின் மரபு கூறுகள் தீர்மானிக்கின்றன. சில மாடுகளின் பாலில் குறைந்த அளவு கொழுப்பு சத்து இருப்பது அதன் மரபு பண்பாக இருந்தால் அதை நாம் மாற்ற முடியாது. எரிசக்திக்கான தீவனம் மற்றும் நார்ச்சத்து தீவனங்களை அளிப்பதால் கொழுப்புச் சத்தை அதிகரிக்கலாம்.

    பொதுவாக, கன்று ஈன்றவுடன் பசுவின் உடலில் உள்ள கொழுப்பு சத்து பால் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டு விடுவதால் மாடுகளின் உடலில் கொழுப்பு சத்து குறைந்து மாடுகள் மிகவும் மெலிந்து இருக்கும்.

    பாலில் கொழுப்பும் குறைவாக இருக்கும். இது போன்ற பாதிப்பு வராமல் தடுக்க, மாடுகள் கன்று ஈனுவதற்கு 2 முதல் 3 வாரங்களுக்கு முன்பிருந்து மாடுகளுக்கு பருத்தி கொட்டை, சோயா, சூரியகாந்தி போன்ற எரிசக்தி மிகுந்த தீவனங்களை அளிக்க வேண்டும்.

    மாடுகள் கறவையில் உள்ள போது கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற எரிசக்தி மிகுந்த தானியங்களை தரவேண்டும். கலப்பு தீவனத்தில் 33 சதவீதம் பிண்ணாக்கு, 30 சதவீதம் தவிடு கலந்து ஒவ்வொரு 3 லிட்டர் கறவைக்கு 1 கிலோ கலப்பு தீவனம் என்ற அளவில் தர வேண்டும். இதன் மூலம் கறவை மாடுகளின் பாலில் கொழுப்பின் அளவை சீராக தக்க வைக்கலாம்.

    மாடுகளின் தீவனத்தில் நார்ச்சத்து குறைவாக இருந்தால் பாலில் கொழுப்பின் அளவும் குறையும். எனவே ஒரு மாட்டிற்கு அன்றாடம் 15 கிலோ பசுந்தீவனம், 4 முதல் 5 கிலோ காய்ந்த தீவனம் அளிக்க வேண்டும்.

    இது தவிர கலப்பு தீவனத்தில் மக்காச்சோளம், கம்பு போன்ற தீவனங்கள் பெரிய அளவு துகள்களாக இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.

    ஒரு மாட்டிற்கு 30 சதவீதம் என்ற அளவில் தாது உப்பு கலவையை தீவனத்துடன் கலந்து அளித்தால் சத்து குறைபாடுகள் நீக்கப்படும். இத்துடன், ஒரு மாட்டிற்கு 15 முதல் 20 கிராம் அளவில் சோடா உப்பை தீவனத்தில் கலந்து கொடுக்கும் போது வயிற்றில் அமிலத் தன்மையால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

    இதனால் பாலில் கொழுப்பு அதிகமாகும். இது போன்ற பராமரிப்புகளை கால்நடை விவசாயிகள் கடைப்பிடித்தால் பாலில் கொழுப்பும், இதர சத்துக்களும் சரியான அளவில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம்.

    ×