search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "salt"

  • வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த மூன்று மாதங்களாக உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது .
  • 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உப்பு எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

  வேதாரண்யம்:

  நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு ஆகிய பகுதியில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. தூத்துக்குடிக்கு அடுத்து இங்கு தான் உப்பு அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

  இங்கு உற்பத்தியாகும் உப்பு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த மூன்று மாதங்களாக உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது .

  தற்போது வடக்கிழக்கு பருவமழை ஓய்ந்து நன்றாக வெயில் அடிப்பதால் இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி மீண்டும் தொடங்கி உள்ளது.

  இதற்காக உப்பளங்களில் பாத்திகள் சரி செய்யப்பட்டு மீண்டும் உப்பு உற்பத்தி முழு வீச்சில் தொடங்கப்பட்டது.

  5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உப்பு எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

  வழக்கம்போல் குறிப்பிட்ட காலத்தில் உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கி விட்டதால் இந்த ஆண்டு 7 லட்சம் டன் உப்பு உற்பத்தி இலக்கை அடைய முடியும் என உப்பு உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

  • திபெத்தியர்கள் உப்பைப் போட்டு தேநீர் அருந்துவது வழக்கம்.
  • மனிதர்களைப் போலவே விலங்குகளின் உடல் நலனுக்கும் உப்பு தேவை.

  `உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்னும் பழமொழியை சொல்லிச் சொல்லி, சாப்பிடும் எல்லாப் பண்டங்களிலும் உப்பை சேர்த்துவிடுகிறோம். ஆனால், `உப்பைத் தின்னவன் தண்ணிய குடிப்பான், தப்பை செஞ்சவன் தண்டனை பெறுவான்' என்றொரு பழமொழியும் இருக்கிறது. உடலில் உப்பின் அளவு கொஞ்சம் அதிகரித்தாலும் பிரச்சினைதான். நம் உடலில் உப்பின் அளவு கூடுவதாலும் குறைவதாலும் பல்வேறு விளைவுகள் ஏற்படுகின்றன.

  அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுப்பொருட்கள், காய்கறிகள், பழங்கள், கீரைகள் எல்லாவற்றிலுமே இயற்கையான உப்பு வகையில் ஒன்றான சோடியம் குளோரைடு (சமையல் உப்பு) கலந்திருக்கிறது. இது போதாதென்று ரெடிமேட் தோசை மாவு போன்றவற்றில் பேக்கிங் சோடாவைப் போடுகிறார்கள். பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளான பர்கர், பீட்ஸா போன்றவற்றிலும் அதிக உப்பைச் சேர்க்கிறார்கள். இது உடலுக்குத் தீங்கை விளைவிக்கும்.

  மோனோ சோடியம் குளூட்டமேட், சோடியம் நைட்ரேட், சோடியம் சாக்கரின், சோடியம் பைகார்பனேட், சோடியம் பென்சாயேட் போன்றவை உப்பின் பல வகைகள். இதில் ஏதாவது ஒன்று, நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களிலும் சாஸ்களிலும் நிரம்ப இருக்கிறது.

  அவ்வாறு சமையலில் அளவாக சேர்த்து கொள்ளப்படும் உப்பு பற்றிய சுவையான தகவல் தொகுப்பு இதோ உங்களுக்காக...

  * உப்பு நீரில் வளரும் ஒரே தன்மை கொண்ட தாவரம், மாங்குரோவ் எனப்படும் சதுப்பு நிலக் காடுகளே.

   * கடல் நீரில் 35 சதவிகிதம் உப்பு இருப்பதால்தான், அதை குடிக்க முடிவதில்லை.

  * திபெத்தியர்கள் உப்பைப் போட்டு தேநீர் அருந்துவது வழக்கம்.

   * போலந்தில் வெலிஷா நகரில் உள்ள உப்புச் சுரங்கம் மிகப்பெரியது. இங்கு உப்பால் செய்யப்பட்ட சிலைகள் உள்ளன.

   * காஸ்பியன் கடல்தான் உலகிலேயே மிகப்பெரிய உப்பு ஏரி என அழைக்கப்படுகிறது.

  * குளோரினும், சோடியமும் உப்பில் அதிகம் இருப்பதால், அதை அதிகம் பயன்படுத்தினால் ரத்த அழுத்தம் உண்டாகும்.

  * உப்பு நீரில் வினாடிக்கு 1560 மீட்டர் வேகத்தில் ஒலி ஊடுருவிச் செல்லும்.

  * மனிதர்களை போலவே விலங்குகளின் உடல் நலனுக்கும் உப்பு தேவை. ஆனால், இது தாவரங்களுக்கு நஞ்சு.

  * தினமும் 4 கிராம் உப்பு மட்டுமே உணவில் சேர்த்துக்கொள்வது உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உணவுக்கட்டுப்பாட்டு.

  * உலகில் அதிகளவில் உப்பு உற்பத்தி செய்யும் நாடு அமெரிக்கா. ஆண்டுக்கு 40.3 மில்லியன் டன் உற்பத்தி செய்கிறது. சீனா (32.9),

  ஜெர்மனி (17.7), இந்தியா (14.5), கனடா (12.3) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

  • சுமார் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
  • உப்பள தொழிலாளர்கள் இரவு, பகலாக முழுவீச்சில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  வேதாரண்யம்:

  நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு பகுதியில் சுமார் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டது.

  தற்போது, கடந்த ஒரு வாரமாக வேதாரண்யம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் சுமார் ஆயிரக்கணக்கான உப்பள தொழிலாளர்கள் இரவு, பகலாக முழுவீச்சில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பை சேமித்து தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக லாரிகள் மூலம் ஏற்றுமதி நடைபெற்று வருகிறது. மீதம் உள்ள உப்பை தார்ப்பாய் கொண்டு மூடி வைத்து பாதுகாத்து வருகின்றனர்.

  • விட்டு, விட்டு மழை பெய்ததால் உப்பு உற்பத்தி குறைந்துள்ளது.
  • தற்போது மூட்டை கட்டும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

  அதிராம்பட்டினம்:

  பட்டுக்கோட்டை அடுத்த அதிராம்பட்டினத்தில், இந்த ஆண்டு உப்பு உற்பத்தி காலதாமதமாக மார்ச் மாதத்தில் தொடங்கியது.

  இந்த முறையும் விட்டு, விட்டு மழை பெய்ததால் உப்பு உற்பத்தி குறைந்துள்ளது என தொழிலாளர்கள் கூறு கின்றனர்.

  மேலும் அவர்கள் கூறுகையில், முன்பெல்லாம் லாரி, லாரியாக உப்பு குவிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது மூட்டை கட்டும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

  பருவம் தவறி மழை பெய்வதால் உப்பு உற்பத்தி சரிவர நடைபெறாமல் பாதிக்கப்படுகிறது.

  இதனால் தொழிலாளர்களின் வாழ்வா தாரம் கேள்விக்குறியாகிறது என்றனர்.

  மேலும், அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

  • உப்பு உற்பத்தி பாத்திகள், நிறுவனங்களுக்கு சென்று உப்பு சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தனர்.
  • ஆய்வு குழுவினர்களுடன் சென்று தொழில்வாய்ப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

  வேதாரண்யம்:

  வேதாரண்யம் பகுதியில் நடைபெறும் உப்பு உற்பத்தியை அடிப்படையாக கொண்டு புதிதாக தொழில் தொடங்குவது தொ டர்பாக சென்னையில் செயல்படும் முன்னணி நிறுவனங்களின் தொழில்நுட்ப வல்லுநர்கள் பி.எஸ்.ஆர்.பாபு, ஜி.வி.விஸ்வநாதன் உள்ளிட்ட குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

  இந்த குழுவினர் தென்னடார், கடிநெல்வயல், அகஸ்தியம்ப ள்ளி ஆகிய இடங்களில் உள்ள உப்பு உற்பத்தி பாத்திகள், நிறுவனங்களுக்கு சென்று உப்பு சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தனர்.

  அப்போது, முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. ஆய்வு குழுவினர்களுடன் சென்று தொழில்வாய்ப்புகள் பற்றி விளக்கி, ஆய்வுகள் குறித்து கேட்டறிந்தார்.

  ஆய்வி ன்போது மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுப்பையன், வக்கீல் தங்க.கதிரவன், வருவாய்த்து றையினர் உடன் இருந்தனர்.

  • சர்தார் வேதரத்தினம் தலைமையில் ராஜாஜி உப்பு அள்ளினார்.
  • திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சர்தார் எனும் பட்டமளித்து மரியாதை.

  வேதாரண்யம்:

  இந்திய சுதந்திரப் போராட்டத்தில்உப்பு சத்தியா கிரக போராட்டம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. வடக்கில் தண்டியிலும், தெற்கில் வேதாரண்யத்திலும் உப்பு சத்தியாகிரகம் போராட்டம் நடைபெற்றது.

  வேதாரண்யத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு சர்தார் வேதரத்தினம் தலைமையில் ராஜாஜி உப்பு அள்ளினார்.

  சுதந்திரப் போராட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்திய உப்பு சத்தியாகிரக போ ராட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் அகஸ்தியன் பள்ளியில் நினைவு ஸ்தூபியும், ராஜாஜி சிறை வைக்கப்பட்ட இடமும் இன்றும் நினைவிடமாகவும் மேலும் வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகநினைவு கட்டிடமும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

  இவரின் அளப்பரிய பங்கை பாராட்டி, 1931-ஆம் ஆண்டில், திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சர்தார் எனும் பட்டமளித்து மரியாதை செய்யப்பட்டார்.

  இவரது தியாகத்தை உலகுக்கு உணர்த்தும் விதமாக இந்திய அரசு கடந்த 1998-ம் ஆண்டு இரண்டு ரூபாய் நினைவு அஞ்சல் தலை மற்றும் அஞ்சல் உறை வெளியிட்டு பெருமைப்படுத்தியது

  சுதந்திர போராட்டத்திற்காக அயராது பாடுபட்ட சர்தார் வேதரத்தினம் பிள்ளைக்கு வேதாரண்யத்தில் அரசு மணிமண்டபம் அமைத்து அவரது நினைவு நாள் மற்றும் பிறந்தநாள் விழாக்களை அரசே நடத்த வேண்டும் என அப்பகுதிமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

  • சேலத்தில் உப்பு விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
  • பொங்கல் தினத்தன்று உப்பு வாங்கி சாமிக்கு வைத்து பூஜை செய்து வழிப்பட்டால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம் என்பதால் உப்பு விற்பனை ஜோராக நடைபெற்றது.

  அன்னதானப்பட்டி,

   தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகையையொட்டி சமையல் உப்பு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்களை மளிகைக் கடையில் வாங்கி வந்து, அவற்றை கோவில்களில் சாமிக்கு வைத்து பூஜைகள் செய்து வழிபட வேண்டும்.

  தொடர்ந்து அவற்றை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வங்கள், பணம் பெருகும் என்பது மரபு வழி ஐதீகம் ஆகும். இதனால் நேற்று முன்தினம் சூரியப் பொங்கல் , நேற்று மாட்டுப்பொங்கல், இன்று கரி நாள் ஆகிய தினங்களில் சேலம் மாவட்டம் மற்றும் மாநகரில் உள்ள மளிகைக் கடைகளில் உப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

  மேலும் சாலையோரங்களிலும் தற்காலிக உப்பு கடைகள் அதிகளவில் முளைத்து இருந்தன. சேலம் கடைவீதி, செவ்வாய்ப்பேட்டை, குகை, தாதகாப்பட்டி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெரும்பாலான மளிகைக் கடைகளில் உப்பு வாங்க பெண்கள் கூட்டம், கூட்டமாக அதிகளவில் குவித்தனர்.

  • உப்பு வெகுநாட்களுக்கு கட்டியாகாமல் தூளாகவே இருப்பதற்காகவும், நீர்த்துப்போகாமல் இருப்பதற்காகவும் சோடியம் அலுமினோசிலிகேட் (அ) மக்னீசியம் கார்போனேட் சேர்க்கப்படுகிறது என்பது தெரியுமா?
  • இந்துப்பு எனப்படும் பாறைகளிலிருந்து எடுக்கப்படும் கல் உப்பு பல்வேறு கட்ட சுத்தப்படுத்துதலுக்கு உள்ளாக்கிய பின்னரே உண்பதற்கு தகுதியாகிறது.

  நாம் உபயோகிக்கும் தூள் உப்பு ஏறக்குறைய 97 முதல் 99 சதவீதம் சோடியம் குளோரைடு மட்டுமே என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை பக்குவப்படுத்தும்போது வெகுநாட்களுக்கு கட்டியாகாமல் தூளாகவே இருப்பதற்காகவும், நீர்த்துப்போகாமல் இருப்பதற்காகவும் சோடியம் அலுமினோசிலிகேட் அல்லது மக்னீசியம் கார்போனேட் சேர்க்கப்படுகிறது என்பது தெரியுமா? இந்த வேதிப்பொருட்கள் உப்பிற்கு நல்லதே தவிர உடலுக்கு நல்லதல்ல.

  "இந்துப்பு" எனப்படும் பாறைகளிலிருந்து எடுக்கப்படும் கல் உப்பு பல்வேறு கட்ட சுத்தப்படுத்துதலுக்கு உள்ளாக்கிய பின்னரே உண்பதற்கு தகுதியாகிறது. அதன்பிறகு இந்துப்புவும் 99.99% சோடியம் குளோரைடு தான்.

  சிக்கல் என்னவென்றால் வணிகமயமாக்குதலால் சரிவர பக்குவப்படுத்தப்படாத இந்துப்புவில் சற்றே அதிகமாக கால்சியம், மெக்னீசியம், இரும்பு, காப்பர் இருப்பதால், உணவிலுள்ள வைட்டமின் 'சி' யை அழித்துவிடுதல், உணவு விரைவில் நீர்த்துப்போதல் போன்ற வேலைகள் நடப்பதை யாரும் கூறுவதும் இல்லை, கண்டுகொள்வதும் இல்லை. அதில் செயற்கையாக நிறமும் ஏற்றப்படுகிறதென்பதும் அதிர்ச்சியான உண்மை. இந்துப்புவிலும் போலி அதிகம் இருக்கிறது என்பது 100/100 உண்மை.

  உடலுக்கு நல்லது... உடலுக்கு நல்லது என்று வியாபார ரீதியில் எந்த பொருளை விற்றாலும் வாங்கிக்கொண்டு இருக்கும் மக்கள் இருக்கும் வரை... உடலுக்கும், உணவுக்கும்... உலகுக்கும் கேடு விளைவிக்கும் பொருட்கள் பெருகிக்கொண்டுதான் இருக்கும்.

  "அப்போ எந்த உப்பைத்தான் நாங்கள் உபயோகிப்பது" என்று என்னை திட்டுவது நன்றாகவே கேட்கிறது.

  கடலில் இருந்து எடுக்கப்படும் கல்லுப்பும், அந்த கல்லுப்பை நீங்களே கொஞ்சம் கொஞ்சமாக அரைத்து வைத்துக்கொண்டு தூளுப்பு என்று கூறிக்கொண்டும் உபயோகப்படுத்துங்கள். அதையும் அளவோடு பயன்படுத்துங்கள்.

  - வண்டார்குழலி

  • செயற்கையாக நிறமும் ஏற்றப்படுகிறதென்பதும் அதிர்ச்சியான உண்மை.
  • இந்துப்புவிலும் போலி அதிகம் இருக்கிறது என்பது 100/100 உண்மை.

  நாம் உபயோகிக்கும் தூள் உப்பு ஏறக்குறைய 97 முதல் 99 சதவீதம் சோடியம் குளோரைடு மட்டுமே என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை பக்குவப்படுத்தும்போது வெகுநாட்களுக்கு கட்டியாகாமல் தூளாகவே இருப்பதற்காவும், நீர்த்துப்போகாமல் இருப்பதற்காவும் சோடியம் அலுமினோசிலிகேட் அல்லது மக்னீசியம் கார்போனேட் சேர்க்கப்படுகிறது என்பது தெரியுமா? இந்த வேதிப்பொருட்கள் உப்பிற்கு நல்லதே தவிர உடலுக்கு நல்லதல்ல.

  "இந்துப்பு" எனப்படும் பாறைகளிலிருந்து எடுக்கப்படும் கல் உப்பு பல்வேறு கட்ட சுத்தப்படுத்துதலுக்கு உள்ளாக்கிய பின்னரே உண்பதற்கு தகுதியாகிறது. அதன்பிறகு இந்துப்புவும் 99.99% சோடியம் குளோரைடு தான்.

  சிக்கல் என்னவென்றால் வணிகமயமாக்குதலால் சரிவர பக்குவப்படுத்தப்படாத இந்துப்புவில் சற்றே அதிகமாக கால்சியம், மெக்னீசியம், இரும்பு, காப்பர் இருப்பதால், உணவிலுள்ள வைட்டமின் 'சி' யை அழித்துவிடுதல், உணவு விரைவில் நீர்த்துப்போதல் போன்ற வேலைகள் நடப்பதை யாரும் கூறுவதும் இல்லை, கண்டுகொள்வதும் இல்லை. அதில் செயற்கையாக நிறமும் ஏற்றப்படுகிறதென்பதும் அதிர்ச்சியான உண்மை. இந்துப்புவிலும் போலி அதிகம் இருக்கிறது என்பது 100/100 உண்மை.

  உடலுக்கு நல்லது.. உடலுக்கு நல்லது என்று வியாபார ரீதியில் எந்த பொருளை விற்றாலும் வாங்கிக்கொண்டு இருக்கும் மக்கள் இருக்கும்வரை... உடலுக்கும், உணவுக்கும்... உலகுக்கும் கேடு விளைவிக்கும் பொருட்கள் பெருகிக்கொண்டுதான் இருக்கும்.

  "அப்போ எந்த உப்பைத்தான் நாங்கள் உபயோகிப்பது" என்று என்னை திட்டுவது நன்றாகவே கேட்கிறது.

  கடலில் இருந்து எடுக்கப்படும் கல்லுப்பும், அந்த கல்லுப்பை நீங்களே கொஞ்சம் கொஞ்சமாக அரைத்து வைத்துக்கொண்டு தூளுப்பு என்று கூறிக்கொண்டும் உபயோகப்படுத்துங்கள். அதையும் அளவோடு பயன்படுத்துங்கள்.

  - வண்டார்குழலி ராஜசேகர்

  • சமையல் அறையில் தவறாமல் இடம் பிடிக்கும் பொருளாக உப்பு உள்ளது.
  • சமையல் அறையில் தவறாமல் இடம் பிடிக்கும் பொருளாக உப்பு உள்ளது.

  ஒரு நாளைக்கு 1 கிராம் உப்பை குறைப்பது 2030-ம் ஆண்டளவில் 90 லட்சம் இதய நோய் பாதிப்புகளை குறைக்கும். 40 லட்சம் உயிர்களை காப்பாற்றும் என்கிறது, புதிய ஆய்வு. அதற்கேற்ப உப்பின் பயன்பாடு உலகளவில் பரவலாக இருக்கிறது.

  ஒவ்வொரு வீட்டின் சமையல் அறையிலும் தவறாமல் இடம் பிடிக்கும் பொருளாக உப்பு உள்ளது. சமையலில் உப்பை அதிகம் உபயோகிப்பது உயர் ரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம் போன்றவை ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கச் செய்துவிடும்.

  ஹார்வர்ட் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, நரம்புகளை தூண்டுவதற்கும், தசைகளை சுருக்குவதற்கும், தளர் வடைய செய்வதற்கும், தண்ணீர் மற்றும் தாதுக்களின் சம நிலையை பராமரிப்பதற்கும் மனித உடலுக்கு சிறிதளவு சோடியம் (உப்பு) தேவைப்படுகிறது.

  சீனாவில் நிகழும் கிட்டத்தட்ட 40 சதவீதம் இறப்புகளுக்கு இதய நோய்களே காரணம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அவர்களின் கூற்றுப்படி, சீனர்கள் தினமும் 11 கிராம் உப்பை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள்.

  இது உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்ததை விட இரண்டு மடங்கு அதிகமாகும். ஒரு நாளைக்கு ஒரு கிராம் உப்பை குறைப்பதன் மூலம் தமனிகளின் சீரற்ற செயல்பாடுகளால் இதய நோய் ஏற்படும் அபாயத்தை 4 சதவீதம் குறைக்க முடியும். பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 6 சதவீதம் குறைக்கலாம் என்று ஆய்வு முடிவுகள் தெளிவுபடுத்தி உள்ளது.