search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேதாரண்யத்தில் சர்தார் வேதரத்தினம் பிள்ளைக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்
    X

    சர்தார் வேதரத்தினம் பிள்ளை.

    வேதாரண்யத்தில் சர்தார் வேதரத்தினம் பிள்ளைக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்

    • சர்தார் வேதரத்தினம் தலைமையில் ராஜாஜி உப்பு அள்ளினார்.
    • திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சர்தார் எனும் பட்டமளித்து மரியாதை.

    வேதாரண்யம்:

    இந்திய சுதந்திரப் போராட்டத்தில்உப்பு சத்தியா கிரக போராட்டம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. வடக்கில் தண்டியிலும், தெற்கில் வேதாரண்யத்திலும் உப்பு சத்தியாகிரகம் போராட்டம் நடைபெற்றது.

    வேதாரண்யத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு சர்தார் வேதரத்தினம் தலைமையில் ராஜாஜி உப்பு அள்ளினார்.

    சுதந்திரப் போராட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்திய உப்பு சத்தியாகிரக போ ராட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் அகஸ்தியன் பள்ளியில் நினைவு ஸ்தூபியும், ராஜாஜி சிறை வைக்கப்பட்ட இடமும் இன்றும் நினைவிடமாகவும் மேலும் வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகநினைவு கட்டிடமும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    இவரின் அளப்பரிய பங்கை பாராட்டி, 1931-ஆம் ஆண்டில், திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சர்தார் எனும் பட்டமளித்து மரியாதை செய்யப்பட்டார்.

    இவரது தியாகத்தை உலகுக்கு உணர்த்தும் விதமாக இந்திய அரசு கடந்த 1998-ம் ஆண்டு இரண்டு ரூபாய் நினைவு அஞ்சல் தலை மற்றும் அஞ்சல் உறை வெளியிட்டு பெருமைப்படுத்தியது

    சுதந்திர போராட்டத்திற்காக அயராது பாடுபட்ட சர்தார் வேதரத்தினம் பிள்ளைக்கு வேதாரண்யத்தில் அரசு மணிமண்டபம் அமைத்து அவரது நினைவு நாள் மற்றும் பிறந்தநாள் விழாக்களை அரசே நடத்த வேண்டும் என அப்பகுதிமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×