என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Armed Force"

    • நள்ளிரவில் அரவிந்த் கௌதம் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
    • உயிரிழந்த வீரர் மற்றும் கொலையாளி ஆகிய இருவருமே உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த சக வீரரை, ஆயுதப்படை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சத்தீஸ்கர் மாநிலம் கைராகர் மாவட்டத்தில் உள்ள காக்ரா அடிப்படை முகாமில் சத்தீஸ்கர் ஆயுதப்படையின் (CAF) 17-வது பட்டாலியன் பிரிவு நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

    இந்த முகாமில் காவலராகப் பணியாற்றி வந்த அரவிந்த் கௌதம் என்பவருக்கும், மெஸ் கமாண்டராக இருந்த சோன்பீர் ஜாட் என்பவருக்கும் இடையே நேற்று இரவு திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    தனிப்பட்ட விவகாரம் தொடர்பாகத் தொடங்கிய இந்த மோதல், இருவருக்கும் இடையே முற்றிய நிலையில் கடும் மோதலாக மாறியது.

    இதனைத் தொடர்ந்து, நள்ளிரவில் அரவிந்த் கௌதம் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில், முகாமின் பாரக் பகுதியில் தூங்கிக்கொண்டிருந்த சோன்பீர் ஜாட்டை, அரவிந்த் கௌதம் தனது துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சோன்பீர் ஜாட் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

    துப்பாக்கிச் சத்தம் கேட்டு ஓடி வந்த மற்ற வீரர்கள், சோன்பீர் ஜாட் உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்துத் தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த வீரரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    குற்றம் சாட்டப்பட்ட அரவிந்த் கௌதமை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த வீரர் மற்றும் கொலையாளி ஆகிய இருவருமே உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   

    • ஆயுதப்படை காவலர்களுக்கு கலவர தடுப்பு பயிற்சி நடைபெற்றது.
    • கலவர தடுப்பு பயிற்சியில் காவலர்களுக்கு ஆயுதங்களை கையாளும் முறைகள் குறித்தும்,கலவரத்தை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் விளக்கி ஒத்திகை நடைபெற்றது

    தென்காசி:

    தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தலைமையில் நேற்று சட்ட ஒழுங்கு பிரச்சனை மற்றும் கலவரங்கள் ஏற்படும் போதும் அதை கட்டுக்குள் கொண்டுவர ஆயுதப்படை காவலர்களுக்கு கலவர தடுப்பு பயிற்சி நடைபெற்றது.

    இந்த கலவர தடுப்பு பயிற்சியில் காவலர்களுக்கு ஆயுதங்களை கையாளும் முறைகள் குறித்தும்,கலவரத்தை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் விளக்கி ஒத்திகை நடைபெற்றது. இந்த பயிற்சியில் துணை காவல் கண்காணிப்பாளர் சுப்பையா, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மார்ட்டின் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆயுதப்படை மைதானத்தில் நடந்த தேர்வில் 200-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெறுபவர்களுக்குரூ.560 ஊதியத்தில் மாதத்தில் 5 நாட்கள் பணி வழங்கப்படும்.

    நெல்லை:

    நெல்லை மாநகர ஊர்க்காவல்படைக்கு ஆட்கள் தேர்வுக்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டது. இதற்கான தேர்வு பாளை ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்றது.

    மாநகர போலீஸ் கமிஷனர் அபினாஷ் குமார் உத்தரவின் பேரில் துணை கமிஷனர்கள் சீனிவாசன், அனிதா மேற்பார்வையில் நடைபெற்ற தேர்வில் 200-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.

    மாநகர பகுதியில் காலியாக உள்ள 39 ஆண்கள் மற்றும் 7 பெண்களுக்கான பணிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வில் மாநகர பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது.

    இன்று கலந்து கொண்டவர்கள் சான்றிதழ், ஆவணங்களை உதவி கமிஷனர் சரவணன், மாநகர ஊர்க்காவல் படையின் வட்டார தளபதி சின்னராஜா, ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் டேனியல் கிருபாகரன், ஊர்க்காவல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பவுல் ஞானபிரகாசம் ஆகியோர் அடங்கிய குழுவினர் சரிபார்த்தனர்.தொடர்ந்து அவர்களுக்கு தேர்வு நடத்தபடும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு 45 நாட்கள் அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்டு தினமும் ரூ.560 ஊதியத்தில் மாதத்தில் 5 நாட்கள் பணி வழங்கப்படும். இதைத் தொடர்ந்து ஊர்க்காவல் படையில் தேர்வு செய்யப்படு பவர்கள் என்ன செய்ய வேண்டும். அவர்களுக்கான விதிமுறைகள், தகவல்கள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது. 

    முப்படை வீரர்களின் துணிச்சலை போற்றும் வகையில் கீர்த்தி சக்ரா, ஷவுர்யா சக்ரா உள்ளிட்ட விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கி கவுரவித்தார். #RamnathKovind #GallantryAwards #ArmedForces
    புதுடெல்லி:

    இந்தியாவின் முப்படைகளை சேர்ந்தவர்களுக்கு துணிச்சல், தியாகத்தை வெளிப்படுத்தியதை கவுரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்படுகின்றன. சுதந்திர தினத்தன்றும், குடியரசு தினத்தன்றும் அறிவிக்கப்பட்டு ஆண்டுக்கு இரு முறை இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கீர்த்தி சக்ரா உள்ளிட்ட விருதுகளை ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கி கவுரவித்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.

    ராணுவத்தில் மிக உயரிய நிலையில், தனிச்சிறப்பான சேவை ஆற்றியதற்காக ராணுவ தளபதி பிபின் ராவத்துக்கு பரம் விசிஷ்ட் சேவா பதக்கம் வழங்கப்பட்டது.

    2018-ம் ஆண்டு மே மாதத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகில் 20 மீட்டர் தொலைவில் இருந்து 3 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்திய மேஜர் துசார் கவுபாவுக்கு கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டது. மேலும், ராணுவ வீரர் ரஹ்மா பால் சிங், சிஆர்பிஎஃப் வீரர் ராஜேந்திர நைன் ஆகியோருக்கு இறப்புக்குப் பின் கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது.

    ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் பிரிவைச் சேர்ந்த 12 பேருக்கு ஷவுர்யா சக்ரா விருதுகள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மற்றும் எல் கே அத்வானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #RamnathKovind #GallantryAwards #ArmedForces
    ×