என் மலர்
உள்ளூர் செய்திகள்

பயிற்சியில் ஈடுபட்ட காவலர்கள்.
தென்காசி மாவட்ட ஆயுதப்படை காவலர்களின் கலவர தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
- ஆயுதப்படை காவலர்களுக்கு கலவர தடுப்பு பயிற்சி நடைபெற்றது.
- கலவர தடுப்பு பயிற்சியில் காவலர்களுக்கு ஆயுதங்களை கையாளும் முறைகள் குறித்தும்,கலவரத்தை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் விளக்கி ஒத்திகை நடைபெற்றது
தென்காசி:
தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தலைமையில் நேற்று சட்ட ஒழுங்கு பிரச்சனை மற்றும் கலவரங்கள் ஏற்படும் போதும் அதை கட்டுக்குள் கொண்டுவர ஆயுதப்படை காவலர்களுக்கு கலவர தடுப்பு பயிற்சி நடைபெற்றது.
இந்த கலவர தடுப்பு பயிற்சியில் காவலர்களுக்கு ஆயுதங்களை கையாளும் முறைகள் குறித்தும்,கலவரத்தை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் விளக்கி ஒத்திகை நடைபெற்றது. இந்த பயிற்சியில் துணை காவல் கண்காணிப்பாளர் சுப்பையா, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மார்ட்டின் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






