என் மலர்
நீங்கள் தேடியது "ராய்பூர்"
- இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
- ராய்பூரில் உள்ள மேக்னெட்டோ மாலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.
இயேசு கிறிஸ்து பிறந்த தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்பூரில் உள்ள மேக்னெட்டோ மாலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், மாலுக்குள் புகுந்த கும்பல் ஒன்று கிறிஸ்துமஸ் அலங்காரங்களை சேதப்படுத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மாலில் வேலைபார்க்கும் ஊழியர்களையும் அந்த கும்பல் மிரட்டியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு ஒடிசாவில் தெருவோரத்தில் கிறிஸ்தவப் பொருட்களை விற்பனை செய்து வந்த மக்களை மிரட்டிய மதவாத கும்பல், உடனடியாக அவர்களை காலி செய்ய சொன்ன வீடியோ இணையத்தில் வைரலானது.இந்த வீடியோவில், :இது இந்து ராஷ்டிரம்.. இங்க கிறிஸ்தவப் பொருட்களை விற்கக் கூடாது.." என்று அந்த கும்பல் மிரட்டியது குறிப்பிடத்தக்கது.
- ராய்பூரில் நடைபெற்ற தூய்மை இயக்கத்தில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் கலந்துகொண்டார்.
- பிரதமர் மோடியின் ஆட்சியில் தான், மணிப்பூர் உட்பட வடகிழக்கு இந்தியா வளர்ந்துள்ளதாக அமைச்சர் கஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், ராய்பூரில் உள்ள ராமர் கோவிலில் தூய்மை இயக்கத்தில் இன்று பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 55 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் வடகிழக்கு இந்தியா புறக்கணிக்கப்பட்டதாகவும், வடகிழக்கு இந்தியாவை பிரதான நிலப்பரப்பில் இருந்து பிரிக்கும் சதிகள் நடைபெற்றதாகவும் கூறினார். பிரதமர் மோடியின் ஆட்சியில் தான், மணிப்பூர் உட்பட வடகிழக்கு இந்தியா வளர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்,
ராய்பூரில் தூய்மை இயக்கத்தில் பங்கேற்ற பின்னர், மகாசமுந்த் மாவட்டத்தில் உள்ள பிவிடிஜி கிராமத்திற்கு செல்ல இருக்கிறார். அங்கு மாவட்ட பஞ்சாயத்து வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'பிரதான் மந்திரி ஜன்மம்' நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நயா ராய்பூரில் உள்ள விருந்தினர் மாளிகையில் அவரது தலைமையில் நடைபெறும் ஜல் ஜீவன் மிஷன் பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். அதன் பின்னர் மாலை 5 மணிக்கு ராய்ப்பூரில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.






