சேவூா் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் சாவு

பலத்த காயமடைந்த சுரேஷ்கிருஷ்ணா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

அவினாசி :

ஈரோடு மாவட்டம், புன்செய்புளிய ம்பட்டி சுல்தான் வீதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் சுரேஷ்கிருஷ்ணா (24). இவா், அன்னூா் அருகே பொங்கலூரில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் புன்செய்பு ளியம்பட்டி யிலிருந்து அன்னூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். சேவூா், பெத்தநாயக்கன்பாளையம் அருகே வரும்போது, அன்னூரிலிருந்து, அந்தியூா் நோக்கி சென்ற லாரியும், இவரது இருசக்கர வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த சுரேஷ்கிருஷ்ணா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து சேவூா் போலீஸாா் லாரியை ஓட்டி வந்த அந்தியூா், சின்னத்தம்பிபாளையம் புதுமேட்டூரைச் சோ்ந்த அருள் (26) மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com