சேலத்தில் டிப்பர் லாரி மோதி தறி மெக்கானிக் பலி

சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள நாழிக்கல் பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பனங்காடு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த டிப்பர் லாரி, எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் சம்பவ இடத்திலேயே அஜித்குமார் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலத்தில் டிப்பர் லாரி மோதி தறி மெக்கானிக் பலி
Published on

சேலம்:

சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள நாழிக்கல் பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் அஜித்குமார் (வயது 27). இவர் விசைத்தறி மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் இன்று காலை சிவதாபுரம் அருகே உள்ள பனங்காடு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த டிப்பர் லாரி, எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அஜித்குமார் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று அஜித்குமாரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com