search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    டொயோட்டா கிளான்சா E-CNG இந்தியாவில் அறிமுகம் - விலை மற்றும் முழு விவரங்கள்
    X

    டொயோட்டா கிளான்சா E-CNG இந்தியாவில் அறிமுகம் - விலை மற்றும் முழு விவரங்கள்

    • டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட E-CNG கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • புதிய டொயோட்டா கிளான்சா E-CNG கார் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் E-CNG கிட் பொருத்தப்பட்ட கிளான்சா மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டொயோட்டா கிளான்சா E-CNG மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 43 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கிளான்சா மட்டுமின்றி அர்பன் குரூயிசர் ஹைரைடர் E-CNG வேரியண்டும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என டொயோட்டா அறிவித்து இருக்கிறது.

    புதிய டொயோட்டா கிளான்சா E-CNG மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த கார் லிட்டருக்கு 30.61 கிலோமீட்டர் வரை செல்லும் என ARAI சான்று பெற்று இருக்கிறது. டொயோட்டா கிளான்சா E-CNG மாடலில் உள்ள 1.2 லிட்டர் K சீரிஸ் என்ஜின் 76 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு உள்ளது.

    "நுகர்வோருக்கான நிறுவனம் என்ற வகையில், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் வாடிக்கையாளர் விருப்பதை முதலில் வைத்துக் கொள்வதில் நம்பிக்கை கொண்டுள்ளது. சந்தையின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதோடு, வாடிக்கையாளர்களின் கனவுகள் மீது தெளிவான கண்ணோட்டத்தில் சிறந்த பொருட்கள் மற்றும் சேவைகளை அவர்களுக்கு வழங்குவதே எங்களின் குறிக்கோள்."

    "இதே குறிக்கோளை மனதில் வைத்துக் கொண்டே CNG பிரிவில் களமிறங்குவதை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். அதன்படி டொயோட்டா கிளான்சா மற்றும் அர்பன் குரூயிசர் மாடல்களின் CNG வேரியண்டை அறிமுகம் செய்ய இருக்கிறோம். புது அறிமுகங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய அதிக ஆப்ஷன்களை வழங்கி இருக்கிறோம்."

    "டொயோட்டா வாகனத்தை பயன்படுத்தும் மகிழ்ச்சி மட்டுமின்றி அவர்களுக்கு குறைந்த செலவில், முழுமையான மன நிம்மதியை டொயோட்டா வாகனங்கள் வழங்கும். இதன் மூலம் அனைவரும் மகிழ்ச்சி அடைய முடியும்." என டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு துணை தலைவர் அடுல் சூட் தெரிவித்து இருக்கிறார்.

    Next Story
    ×