search icon
என் மலர்tooltip icon

    கார்

    டொயோட்டா கிளான்சா CNG முன்பதிவு விவரம்
    X

    டொயோட்டா கிளான்சா CNG முன்பதிவு விவரம்

    • டொயோட்டா நிறுவனம் விரைவில் கிளான்சா CNG வேரியண்டை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புது CNG காருக்கான முன்பதிவுகள் துவங்கி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    டொயோட்டா நிறுவனம் தனது கிளான்சா CNG மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. முன்னதாக மாருதி சுசுகி நிறுவனம் தனது பலேனோ S-CNG வெர்ஷன் விலையை இந்தியாவில் அறிவித்து இருந்தது. புதிய பலேனோ S-CNG மாடல் விலை இந்தியாவில் ரூ. 8 லட்சத்து 28 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

    மாருதி சுசுகியை தொடர்ந்து டொயோட்டா நிறுவன விற்பனையாளர்கள் புதிய கிளான்சா CNG மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய கிளான்சா CNG மாடல் கிளான்சா e-CNG பெயரில் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. இந்த முன்பதிவுகள் விற்பனையாளர்கள் தரப்பில் மேற்கொள்ளப்படுவதாக தெரிகிறது.

    இந்த நிலையில், புதிய டொயோட்டா கிளான்சா CNG மாடலின் விலை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்திய சந்தையில் டொயோட்டா கிளான்சா CNG மாடல் S, G மற்றும் V என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.

    புதிய டொயோட்டா கிளான்சா e-CNG மாடலில் 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் மற்றும் CNG கிட் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த கார் பெட்ரோல் மோடில் 89 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. CNG மோடில் இந்த கார் 76 ஹெச்பி பவர், 98.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×