என் மலர்tooltip icon

    கார்

    கேரன்ஸ் கிளாவிஸில் புது வேரியண்ட்கள்... சத்தமின்றி சம்பவம் செய்த கியா இந்தியா..!
    X

    கேரன்ஸ் கிளாவிஸில் புது வேரியண்ட்கள்... சத்தமின்றி சம்பவம் செய்த கியா இந்தியா..!

    • புதிய மாற்றம் காரணமாக இந்த காரின் விலை ரூ. 16.28 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகின்றன.
    • இந்த புது வேரியண்ட் 1.5 லிட்டர் டர்போ என்ஜின் மற்றும் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது.

    கியா இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது கேரன்ஸ் கிளாவிஸ் மாடலை வேரியண்ட்கள் அடிப்படையில் மாற்றங்கள் செய்திருக்கிறது. அதன்படி கியா கேரன்ஸ் கிளாவிஸ் மாடல் தற்போது புதிய HTX(O) வேரியண்ட் உள்பட தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியண்ட்களில் ஆறு இருக்கைகள் கொண்ட மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

    புதிய மாற்றம் காரணமாக இந்த காரின் விலை ரூ. 16.28 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகின்றன. HTX வேரியண்ட்டின் மேல் நிலைநிறுத்தப்பட்டுள்ள புதிய HTX(O) வேரியண்ட் கியா கிளாவிஸில் எட்டு ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், டிரைவ் மோட்கள் (சுற்றுச்சூழல், நார்மல் மற்றும் ஸ்போர்ட்), ஸ்மார்ட் கீ ரிமோட் என்ஜின் ஸ்டார்ட் மற்றும் ஆட்டோ ஹோல்டுடன் கூடிய EPB ஆகியவை இடம்பெற்றுள்ளன.

    குறிப்பிடத்தக்க வகையில், இந்த புது வேரியண்ட் 1.5 லிட்டர் டர்போ என்ஜின் மற்றும் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப கியா கேரன்ஸ் கிளாவிஸ் HTK+ வேரியண்ட் (1.5 டர்போ யூனிட் மற்றும் DCT, 1.5 டீசல் AT) மற்றும் HTK+(O) (1.5 டர்போ DCT) வேரியண்ட்களில் ஆறு இருக்கைகள் கொண்ட மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.

    கியா கேரன்ஸ் கிளாவிஸ் புது வேரியண்ட் விவரங்கள்:

    6 இருக்கைகள் கொண்ட HTK+ ஸ்மார்ட்-ஸ்ட்ரீம் 1.5 TGDi ரூ.16.28 லட்சம்

    HTK+ 1.5 CRDi VGT என்ஜின் மற்றும் 6 இருக்கைகள் கொண்ட வேரியண்ட் ரூ.17.34 லட்சம்

    HTK+ (O) ஸ்மார்ட்-ஸ்ட்ரீம் G1.5 TGDi (6 இருக்கைகள்) ரூ.17.05 லட்சம்

    HTX (O) ஸ்மார்ட்-ஸ்ட்ரீம் G1.5 TGDi (6- மற்றும் 7-இருக்கைகள் இரண்டும்) ரூ.19 லட்சம்

    Next Story
    ×