என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kia India"
- கரென்ஸ் EV மாடல் அதன் ஐசி எஞ்சின் வெர்ஷனை விட வித்தியாசமாக இருக்கும்.
- கியா நிறுவனம் தனது EV9 பிளாக்ஷிப் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.
கியா நிறுவனம் தனது அதிகம் விற்பனையாகும் கரென்ஸ் எம்பிவி மாடலை அடுத்த ஆண்டு அப்டேட் செய்ய இருக்கிறது. காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்ட புதிய கரென்ஸ் மாடலுடன், கியா இந்தியா நிறுவனம் கரென்ஸ் EV மாடலையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே கியா கரென்ஸ் EV மாடல் டெஸ்டிங் செய்யப்படும் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இதில் கரென்ஸ் EV மாடல் அதன் ஐசி எஞ்சின் வெர்ஷனை விட வித்தியாசமாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.
கரென்ஸ் EV மாடலின் பிளாட்பார்ம், பாடி மற்றும் பெரும்பாலான இன்டீரியர் அதன் ஸ்டான்டர்டு மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்படும். எனினும், ஸ்டைலிங் அடிப்படையில் காரின் முன்புறம் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த மாடல் வெளியீட்டுக்கு முன் கியா நிறுவனம் தனது EV9 பிளாக்ஷிப் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.
வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி கியா நிறுவனம் தனது EV9 ஃபிளாக்ஷிப் மாடலை அறிமுகம் செய்கிறது. புதிய கரென்ஸ் EV மாடலின் பவர்டிரெயின் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் கிரெட்டா EV மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்படும் என்று தெரிகிறது.
- கார்னிவல் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 2 லட்சம் ஆகும்.
- இந்த கார் ஒற்றை வேரியண்டில் மட்டுமே விற்பனைக்கு வருகிறது.
கியா இந்தியா நிறுவனத்தின் முற்றிலும் புதிய கார்னிவல் மாடல் கார் அடுத்த மாதம் முதல் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், புதிய கார்னிவல் மாடலுக்கான முன்பதிவு பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய கியா கார்னிவல் மாடலுக்கான முன்பதிவுகள் வருகிற 16 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இதைத் தொடர்ந்து விற்பனை அக்டோபர் 3 ஆம் தேதி துவங்குகிறது.
ஏற்கனவே புதிய கியா கார்னிவல் மாடலுக்கான முன்பதிவுகள் விற்பனை மையங்கள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது கியா இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வ முன்பதிவுகள் செப்டம்பர் 16 ஆம் தேதி துவங்கவுள்ளன. புதிய கார்னிவல் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 2 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய கியா கார்னிவல் மாடல் இரண்டடுக்கு சன்ரூஃப், இருக்கைகளை எலெக்ட்ரிக் முறையில் அட்ஜஸ்ட் செய்யும் வசதி, வென்டிலேஷன் மற்றும் கால் வைக்கும் பகுதி, பவர் ஸ்லைடிங் கதவுகள், 12 ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் சவுண்ட் சிஸ்டம், இரட்டை கர்வ்டு டிஸ்ப்ளேக்கள் மற்றும் ADAS சூட் வழங்கப்படுகிறது.
இந்த கார் ஒற்றை வேரியண்டில் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. முதற்கட்டமாக இந்த கார் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட உள்ளது. அதன்பிறகு, இந்த காரின் பாகங்கள் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு, இங்குள்ள ஆலையில் அசெம்பில் செய்யப்படுகிறது.
புதிய கியா கார்னிவல் மாடலில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் வழங்கப்படும் என்று தெரிகிறது. சர்வதேச சந்தையில் இந்த கார் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் ஹைப்ரிட் மற்றும் 3.5 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சினுடன் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் புதிய கியா கார்னிவல் மாடலின் விலை ரூ. 50 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. கியா கார்னிவல் மாடலை தொடர்ந்து கியா EV9 மாடலின் விலையும் அறிவிக்கப்பட உள்ளது.
- புதிய செல்டோஸ் மாடல் இருவித எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
- புதிய செல்டோஸ் மாடல் 3 நிறங்களில் கிடைக்கிறது.
கியா இந்தியா நிறுவனம் தனது செல்டோஸ், சொனெட் மற்றும் கரென்ஸ் மாடல்களின் கிராவிட்டி வேரியண்ட்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. செல்டோஸ் எஸ்யுவி மாடலில் இந்த வேரியண்ட் HTX வெர்ஷனின் மேல் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. இதன் விலை ரூ. 16 லட்சத்து 63 ஆயிரம் என துவங்குகிறது.
புதிய செல்டோஸ் கிராவிட்டி மாடலில் டேஷ் கேமரா, 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வென்டிலேட்டெட் இருக்கைகள், போஸ் மியூசிக் சிஸ்டம், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ஆட்டோ ஹோல்டு, 17 இன்ச் அலாய் வீல்கள், ரியர் ஸ்பாயிலர், கிராவிட்டி பேட்ஜ் வழங்கப்படுகிறது.
இந்த வேரியண்ட் கிளேசியர் வைட் பியல், அரோரா பிளாக் பியல் மற்றும் டார்க் கன் மெட்டல் ஆகிய நிறங்களில் மேட் ஃபினிஷ் உடன் கிடைக்கிறது. செல்டோஸ் கிராவிட்டி வேரியண்டில் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. டிரான்ஸ்மிஷனுக்கு 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் iMT யூனிட் வழங்கப்படுகிறது.
- இரு கார்களும் பெட்ரோல், டீசல் பவர்டிரெயினில் கிடைக்கின்றன.
- இரு கார்களிலும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
கியா இந்தியா நிறுவனம் தனது செல்டோஸ் மற்றும் சொனெட் மாடல்களின் புது வேரியண்டை அறிமுகம் செய்தது. புது மிட்-ரேஞ்ச் வேரியண்ட் GTX செல்டோஸ் மற்றும் சொனெட் மாடல்களில் கிடைக்கிறது. இந்த வேரியண்ட் புதிய நிறத்தில் கிடைக்கிறது.
செல்டோஸ் GTX மாடல் HTX+ GTX+ (S) வேரியண்ட்களின் மத்தியில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. சொனெட் GTX வேரியண்ட் HTX மற்றும் GTX+ வேரியண்ட்களின் மத்தியில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. இரண்டு வேரியண்ட்களும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது.
புதிய சொனெட் காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் அல்லது 1.5 லிட்டர் டீசல் பவர்டிரெயின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. புதிய செல்டோஸ் GTX மாடலில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. கியா செல்டோஸ் மற்றும் சொனெட் X லைன் வேரியண்டில் அரோரா பிளாக் பியல் நிறம் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறது.
விலை விவரங்கள்:
கியா சொனெட் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் DCT ரூ. 13 லட்சத்து 71 ஆயிரம்
கியா சொனெட் 1.5 லிட்டர் டீசல் AT ரூ. 14 லட்சத்து 56 ஆயிரம்
கியா செல்டோஸ் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் DCT ரூ. 19 லட்சம்
கியா செல்டோஸ் டீசல் AT ரூ. 19 லட்சம்
அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- இந்த காரில் அகலமான ஏர் இன்லெட்கள் வழங்கப்படுகிறது.
- இரட்டை 12.3 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
கியா நிறுவனத்தின் என்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. கியா EV3 மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய கியா EV3 மாடல்- ஸ்டான்டர்டு மற்றும் GT லைன் என இரண்டு வேரியண்ட்களிலும், ஒன்பது விதமான நிறங்களிலும் கிடைக்கிறது.
தோற்றத்தில் கியா EV3 மாடல் EV9 போன்றே காட்சியளிக்கிறது. அந்த வகையில், இந்த காரில் போதுமான இடவசதி இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். கியா EV3 வெளிப்புறத்தில் பிளான்க்டு-ஆஃப் கிரில், L வடிவம் கொண்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள், எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், அகலமான ஏர் இன்லெட்கள் வழங்கப்படுகிறது.
பின்புறத்தில் L வடிவம் கொண்ட எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், அளவில் பெரிய பம்ப்பர், பிளாக் கிளாடிங், ரூஃப் ஸ்பாயிலர், ஷார்க் ஃபின் ஆன்டெனா, ரிவர்ஸ் பார்கிங் கேமரா சென்சார்கள், பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது. உள்புறத்தில் 3 ஸ்போக் ஸ்டீரிங் வீல், ஆஃப் செட் கியா லோகோ, இரட்டை 12.3 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
இந்த காரில் 360 டிகிரி சரவுண்ட் கேமரா, டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், ஆம்பியன்ட் லைட்டிங், வயர்லெஸ் சார்ஜர், ஆட்டோ டிம்மிங் IRVM, ADAS சூட் வழங்கப்படுகிறது. இந்த காரில் 460 லிட்டர் பூட் ஸ்பேஸ் உள்ளது. இந்த கார் 58.3 கிலோவாட் ஹவர் மற்றும் 81.4 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இவை முழுமையாக சார்ஜ் செய்தால் 600 கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 283 டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 7.5 நொடிகளில் எட்டிவிடும்.
- அதிகபட்சம் 60 மாதங்கள் வரை கார் லீஸ் எடுக்கலாம்.
- தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் புதிய திட்டம் அறிமுகம்.
கியா இந்தியா நிறுவனம் புதிதாக கார் லீஸ் எடுக்கும் திட்டத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய லீஸ் திட்டத்தின் கீழ் பயனர்கள் ஏராளமான பலன்களை பெற முடியும். இந்த திட்டத்தில் இணையும் பயனர்கள் புதிய கார் வாங்கும் போது மேற்கொள்ள வேண்டிய பதிவு முறை, பராமரிப்பு மற்றும் இன்சூரன்ஸ் உள்ளிட்டவைகளில் தலையிட வேண்டிய அவசியம் இருக்காது.
மாறாக, இவை அனைத்தையும் கியா பார்த்துக் கொள்ளும். பயனர்கள் மிகப் பெரிய தொகையை முன்பணமாக செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. லீஸ் எடுக்கும் போது அனைத்து கட்டணங்களும் சேர்க்கப்பட்டு விடும். லீஸ் எடுக்கும் திட்டத்தில் பயனர்கள் குறைந்தபட்சம் 24 மாதங்களில் துவங்கி அதிகபட்சம் 60 மாதங்கள் வரை கார் லீஸ் எடுக்கலாம்.
பயனர்கள் லீஸ் எடுக்கும் காலம் நிறைவுபெற்றதும் கியா கார்களில் வேறொரு மாடலை வாங்கிக் கொள்ள முடியும். இதனால் கார் வாங்கும் போது ஏற்படும் மறுவிற்பனை மதிப்பு இழப்பு பற்றி கவலை கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.
லீஸ் திட்டத்தின் கீழ் கியா நிறுவனத்தின் சொனெட், செல்டோஸ் எஸ்.யு.வி. மாடல்களையும் கரென்ஸ் எம்.பி.வி. மாடலையும் வழங்குகிறது. லீஸ் திட்டத்தில் கார்களின் வாடகை மாதம் ரூ. 21 ஆயிரத்து 900 என துவங்கி அதிகபட்சம் ரூ. 28 ஆயிரத்து 800 வரை வசூலிக்கப்படுகிறது.
முதற்கட்டமாக கார்களை லீஸ் எடுக்கும் திட்டம் சென்னை, பெங்களூரு, ஐதராபாத், பூனே, மும்பை மற்றும் டெல்லி என்.சி.ஆர். போன்ற நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
- இந்த கார் EV9 மாடலை தழுவி உருவாக்கப்படுகிறது.
- வாகனத்தை சாவியின்றி ஸ்டார்ட் செய்ய அனுமதிக்கும்.
கியா நிறுவனத்தின் முற்றிலும் புதிய EV6 மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. முற்றிலும் புதிய EV6 மாடலில் மெல்லிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள் வழங்கப்படுகின்றன. இந்த கார் EV9 மாடலை தழுவி உருவாக்கப்படுகிறது.
இந்த காரின் முன்புற கிரில் மாற்றப்பட்டு, புதிய பம்ப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது காருக்கு புதிய தோற்றம் வழங்குகிறது. இந்த காரில் புதிய டிசைன் கொண்ட பிளாக் & சில்வர் நிற அலாய் வீல்கள் எல்.இ.டி. லைட் பார் காருக்கு பிரத்யேக தோற்றத்தை வழங்குகிறது.
உள்புறத்தில் வளைந்த பானரோமிக் ஸ்கிரீன் ரிடிசைன் செய்யப்பட்டுள்ளது. இதில் 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 12.3 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இந்த காரில் புதிய 2-ஸ்போக் ஸ்டீரிங் வீல், கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் வாகனத்தை சாவியின்றி ஸ்டார்ட் செய்ய அனுமதி செய்யும்.
இத்துடன் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, மேம்பட்ட HUD, டிஜிட்டல் ரியர்வியூ மிரர், OTA அப்டேட் கண்ட்ரோல் வழங்கப்படுகிறது. 2025 கியா EV6 மாடல் 77.4 கிலோவாட் ஹவர் மற்றும் 84 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படுகிறது.
- புரொடக்ஷன் வெர்ஷன் எப்படி காட்சியளிக்கும் என்று தெரியவந்துள்ளது.
- பிஸ்போக் எலெக்ட்ரிக் E-GMP பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது.
கியா நிறுவனத்தின் என்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் கார் மாடல் மே 23 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கியா EV3 பெயரில் அறிமுகமாக இருக்கும் புதிய எலெக்ட்ரிக் கார் டீசர் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த கார் கான்செப்ட் வடிவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இதன் புரொடக்ஷன் வெர்ஷன் எப்படி காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது.
இந்த எலெக்ட்ரிக் கார் சதுரங்க வடிவிலான தோற்றம் கொண்டிருக்கிறது. புகைப்படங்களின் படி இந்த கார் அதன் கான்செப்ட் வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது. கியா EV3 மாடல் ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் பிஸ்போக் எலெக்ட்ரிக் E-GMP பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது.
இந்த பிளாட்ஃபார்மில் 400 வோல்ட் எலெக்ட்ரிக் ஆர்கிடெக்ச்சர் பயன்படுத்தப்படுகிறது. இதனால், இந்த கார் அதிவேக சார்ஜிங் வசதியை பெறாது. எனினும், இந்த காரின் விலை சற்று குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
கியா நிறுவனம் இந்திய சந்தையில் EV9 மூன்றடுக்கு இருக்கை கொண்ட எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. எனினும், கியா EV3 மாடலின் இந்திய வெளியீடு தொடர்பாக இதுவரை எந்த தகவலும் இல்லை.
- கியா கரென்ஸ் மாடல் மீண்டும் டெஸ்டிங்கில் ஈடுபடுத்தப்பட்டது.
- பொலிரோ நியோ, ஹோண்டா அமேஸ் மாடல்களும் பங்கேற்றன.
கியா நிறுவனத்தின் கரென்ஸ் எம்.பி.வி. மாடல் சமீபத்தில் குளோபல் என்கேப் (GNCAP) டெஸ்டிங்கில் பங்கேற்றது. இதற்கான முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த டெஸ்டிங்கில் கரென்ஸ் மட்டுமின்றி மஹிந்திரா பொலிரோ நியோ மற்றும் ஹோண்டா அமேஸ் போன்ற மாடல்களும் பங்கேற்றன.
கடந்த 2022 ஆம் ஆண்டு இதே போன்ற டெஸ்டிங்கில் பங்கேற்ற போது கியா கரென்ஸ் மாடல் மூன்று நட்சத்திர குறியீடுகளை பெற்றது. தற்போது மேம்பட்ட விதிமுறைகளின் கீழ் கியா கரென்ஸ் மாடல் மீண்டும் டெஸ்டிங்கில் ஈடுபடுத்தப்பட்டது.
இரண்டு முறை டெஸ்டிங் செய்யப்பட்ட கியா கரென்ஸ் மாடல் முதல் முறை ஒரு நட்சத்திர குறியீட்டை கூட பெறவில்லை. இந்த காரில் பயணிப்போருக்கு கழுத்து பகுதியில் அதிக காயங்கள் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு மீண்டும் கரென்ஸ் மாடல் டெஸ்டிங் செய்யப்பட்டது. அப்போது இந்த கார் பாதுகாப்பிற்காக மூன்று நட்சத்திர குறியீடுகளை பெற்றது.
இறுதி முடிவுகளின் படி கியா கரென்ஸ் மாடல் பெரியவர்கள் பாதுகாப்பில் 34-க்கு 22.07 புள்ளிகளையும், சிறியவர்கள் பாதுகாப்பிற்கு 49-க்கு 41 புள்ளிகளையும் பெற்றது. இந்த காரில் ஆறு ஏர்பேக், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., சீட் பெல்ட் பிரீ-டென்ஷனர்கள், லோட் லிமிட்டர்கள், சீட் பெல்ட் ரிமைன்டர் சிஸ்டம், இ.எஸ்.சி. மற்றும் ISOFIX உள்ளிட்டவை ஸ்டான்டர்டு அம்சங்களாக வழங்கப்படுகின்றன.
- அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.
- வாகனங்களை உருவாக்க இருப்பதாக தெரிவித்தது.
கியா நிறுவனம் சமீபத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கலந்து கொண்ட நிகழ்வில், அந்நிறுவன எதிர்கால திட்டங்களை அறிவித்தது. அப்போது இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதாகவும், இந்தியாவுக்கு ஏற்ற வாகனங்களை உருவாக்க இருப்பதாகவும் தெரிவித்தது.
அந்த வகையில், கியா நிறுவனம் 2024-25 ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையில் எம்.பி.வி. மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த வரிசையில் கியா EV9 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முழு சார்ஜ் செய்தால் 541 கிலோமீட்டர்கள் ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்றுள்ள கியா EV9 இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம்.
கியா EV9 மாடல் தவிர புதிய தலைமுறை கியா கார்னிவல் மாடலும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாடல் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிகிறது. இந்த கார் ஏழு மற்றும் ஒன்பது பேர் பயணம் செய்யக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கும்.
இரு மாடல்களுடன் கியா எலெக்ட்ரிக் RV மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த கார் பற்றிய விவரங்கள் ரகசியமாகவே உள்ளது. எனினும், இந்த கார் கரென்ஸ் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனாக இருக்கும்.
- கியா EV9 மாடல் விரைவில் இந்தியா வரவிருக்கிறது.
- 6 எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்கிறது.
கியா நிறுவனம் தனது சர்வதேச யுத்தியின் அங்கமாக இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. மேலும் இந்திய சந்தையில் இரண்டு எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரண்டு புதிய வாகனங்களில் ஒன்று கியா கரென்ஸ் EV மற்றொன்று முற்றிலும் புது எலெக்ட்ரிக் கார் ஆகும். கியா முதலீட்டாளர்கள் தினம் 2024 நிகழ்வில் இது தொடர்பான தகவல்களை அந்நிறுவன தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான ஹோ சுங் சாங் உறுதிப்படுத்தினார்.
இவைதவிர கியா EV9 மாடல் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
"எலெக்ட்ரிக் வாகன சந்தையின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், கியா நிறுவனம் 2026 ஆண்டிற்குள் ஆறு எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யும். 2024 ஆண்டிலேயே EV3, இதைத் தொடர்ந்து EV2, EV4 மற்றும் EV5 போன்ற மாடல்கள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது."
"வளர்ந்து வரும் சந்தைகளில் இரண்டு மாடல்கள் அப்பகுதிக்கு ஏற்ற வகையிலான எலெக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் இந்த வரிசையில் கியா கரென்ஸ் EV மாடல் அறிமுகம் செய்யப்படும்," என்று ஹோ சுங் சாங் தெரிவித்தார்.
- 40 சதவீதம் வாடிக்கையாளர்கள் டாப் என்ட் மாடல்களை தேர்வு செய்துள்ளனர்.
- 80 சதவீதம் பேர் பானரோமிக் சன்ரூஃப் கொண்ட வேரியன்ட்களை தேர்வு செய்தனர்.
கியா இந்தியா நிறுவனத்தின் செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சமீபத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகத்தை தொடர்ந்து இந்த காருக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்றது. இந்த நிலையில், புதிய கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் முன்பதிவில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 13 ஆயிரத்து 500 யூனிட்கள் வரை முன்பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள முன்பதிவுகளில் 80 சதவீதம் வாடிக்கையாளர்கள் டாப் என்ட் மாடல்களையே தேர்வு செய்துள்ளனர்.
கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் ADAS சூட் கொண்ட வேரியன்ட்களை தேர்வு செய்துள்ளனர். 80 சதவீதம் பேர் பானரோமிக் சன்ரூஃப் கொண்ட வேரியன்ட்களை தேர்வு செய்துள்ளனர். இந்த கார் அறிமுகம் செய்யப்பட்ட முதல் நாளில் மட்டுமே 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதனை வாங்க முன்பதிவு செய்துள்ளனர்.
பிறகு, ஆகஸ்ட் மாதத்தில் இந்த காரை வாங்க 31 ஆயிரம் பேர் முன்பதிவு செய்தனர். இந்திய சந்தையில் கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை ரூ. 10 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்