search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    இந்தியாவில் 700 கிமீ ரேன்ஜ் வழங்கும் கியா எலெக்ட்ரிக் கார்
    X

    இந்தியாவில் 700 கிமீ ரேன்ஜ் வழங்கும் கியா எலெக்ட்ரிக் கார்

    • கியா நிறுவனம் இந்திய சந்தையில் EV6 ஃபிளாக்‌ஷிப் எலெக்ட்ரிக் கார் மாடலை விற்பனை செய்து வருகிறது.
    • சர்வதேச சந்தையில் கியா EV6 மாடல் ஏராளமான விருதுகளை வாங்கி குவித்த நிலையில், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    கியா இந்தியா நிறுவனம் தனது EV6 எலெக்ட்ரிக் கிராஸ்ஓவர் மாடலை இந்த ஆண்டு மத்தியில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. சர்வதேச சந்தையில் ஹூண்டாய் ஐயோனிக் 5, ஃபோர்டு மஸ்டங் மேக்-இ, ஸ்கோடா என்யாக் iV, ரெனால்ட் மெகன் இ டெக் மற்றும் பியுஜியோட் 308 போன்ற மாடல்களை பின்னுக்குத் தள்ளி சர்வதேச விருதுகளை வாங்கி குவித்து இருக்கிறது.

    புதிய கியா EV6 மாடல் WLTP சைக்கிள் சோதனையில் முழு சார்ஜ் செய்தால் 528 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. எனினும், ARAI சோதனையில் கியா EV6 மாடல் அதிக ரேன்ஜ் வழங்குவது அம்பலமாகி இருக்கிறது. இந்த காரின் GT லைன் வேரியண்ட் டூயல் எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் கொண்டிருக்கிறது. இந்த கார் 321 ஹெச்பி பவர், 605 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

    இதன் ஆல்-வீல் டிரைவ் வேரியண்ட் 77.4 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி பேக் கொண்டிருக்கிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 708 கிலோமீட்டர் வரை செல்லும் என ARAI சான்று பெற்று இருக்கஇறது. தற்போது கியா EV6 மாடல் இந்தியாவுக்கு CBU முறையில் இறக்குமதி செய்யப்படுகிறது. கியா EV6 RWD வேரியண்ட் விலை ரூ. 60 லட்சம் என துவங்குகிறது. இதன் AWD வேரியண்ட் விலை ரூ. 64 லட்சத்து 95 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

    இந்திய சந்தையில் கியா EV6 எலெக்ட்ரிக் கார் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதுவரை கியா நிறுவனம் 200 EV6 யூனிட்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. மேலும் 150 யூனிட்களை வினியோகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த காரை 350 கிலோவாட் DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யும் போது 18 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்திட முடியும்.

    Next Story
    ×