search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    புதிய EV9 மாடலுக்கான டீசரை வெளியிட்ட கியா!
    X

    புதிய EV9 மாடலுக்கான டீசரை வெளியிட்ட கியா!

    • கியா இந்தியா நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் எலெக்ட்ரிக் வாகனத்திற்கான டீசர் வெளியாகி இருக்கிறது.
    • புதிய ஃபிளாக்‌ஷிப் எலெக்ட்ரிக் வாகனத்திற்கான டீசர்கள் கியா இந்தியா நிறுவன சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    கியா இந்தியா நிறுவனம் தனது EV9 கான்செப்ட் மாடலின் டீசரை அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருக்கிறது. இந்த கான்செப்ட் மாடல் இந்தியாவில் 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய EV9 கான்செப்ட் மட்டுமின்றி கார்னிவல் மற்றும் செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களையும் கியா இந்தியா அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    2021 லாஸ் ஏஞ்சல்ஸ் மோட்டார் விழாவில் முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்ட கியா EV9 கான்செப்ட் அந்நிறுவனத்தின் E-GMP பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த காரின் ஸ்பை படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஸ்பை படங்கள் நர்பர்க்ரிங் அருகே நடத்தப்பட்ட சோதனையின் போது எடுக்கப்பட்டவை ஆகும்.

    கியா EV9 கான்செப்ட்-இல் கிலாம்ஷெல் பொனெட், டைகர்-நோஸ் கிரில், காண்டிராஸ்ட் நிற ஃபௌக்ஸ் ஸ்கிட் பிலேட்கள், பானரோமிக் சன்ரூஃப், காரை சுற்றி கிலாடிங், செங்குத்தாக பொருத்தப்பட்ட டெயில் லைட்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. உள்புற டேஷ்போர்டில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்டி கன்சோல் மற்றும் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற செயல்படும் பெரிய திரை உள்ளது.

    இத்துடன் ஹேப்டிக் பட்டன்கள், ஃபுளோடிங் செண்டர் கன்சோல், ஆர்ம்-ரெஸ்ட், ஆம்பியண்ட் லைட்டிங், ஏ பில்லர் மவுண்ட் செய்யப்பட்ட டுவீட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. கியா EV9 காரின் ப்ரோடக்‌ஷன் வெர்ஷனில் வழங்கப்படும் பேட்டரி 450 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என கியா நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

    Next Story
    ×