search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    அடிக்கடி பிரச்சினை ஏற்படுது - காரை தீ வைத்து எரித்த நபர் கைது
    X

    அடிக்கடி பிரச்சினை ஏற்படுது - காரை தீ வைத்து எரித்த நபர் கைது

    • கியா செல்டோஸ் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர் தனது காரில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாக குற்றம்சாட்டி வந்தார்.
    • பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காத விரக்தியில் கோபமுற்ற வாடிக்கையாளர் தனது காரை தீ வைத்து எரித்தார்.

    ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரை சேர்ந்த நபர் தனது கியா செல்டோஸ் காரை தீ வைத்து எரித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். கியா சர்வீஸ் தனக்கு திருப்திகரமாக இல்லை என்ற விரக்தியில் இருந்த நபர் கோபத்தில் இவ்வாறு செய்து இருக்கிறார். பின் கியா சர்வீஸ் செண்டர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் காரை எரித்த வாடிக்கையாளரை கைது செய்தனர்.

    கியா செல்டோஸ் காரை வாங்கி பயன்படுத்தி வந்த நபருக்கு கடந்த இரண்டு ஆண்டுகவாகவே காரின் என்ஜினில் குறைபாடு ஏற்பட்டு வந்ததாக அதன் வாடிக்கையாளர் குற்றம்சாட்டி வருகிறார். என்ஜின் குறைபாடை சரி செய்ய அந்த நபர் சர்வீஸ் செண்டர் சென்றுள்ளார். காரில் ஏற்படும் புகார்களை சர்வீஸ் செண்டர் மேலாளரிடம் தெரிவித்து இருக்கிறார். பின் சர்வீஸ் செய்யும் ஊழியர், மேலாளர் மற்றும் வாடிக்கையாளர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    வாக்குவாதம் முற்றியதில் கோபமுற்ற வாடிக்கையாளர் தான் எடுத்து வந்த பெட்ரோல் கேனை திறந்து, தனது கியா செல்டோஸ் முழுக்க ஊற்றினார். கார் சர்வீஸ் செண்டரின் உள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையிலேயே அவர் தனது காருக்கு தீ வைத்து எரித்தார். தீ வைத்ததும் கார் முழுக்க தீ மளமளவென பரவியது. இதைத் தொடர்ந்த கியா சர்வீஸ் செண்டர் ஊழியர் தீயணைப்பானை எடுத்து வந்து தீயை கட்டுப்படுத்தினார்.

    கியா சர்வீஸ் செண்டர் ஊழியர் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக கியா சர்வீஸ் செண்டர் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காரை தீ வைத்து எரித்த வாடிக்கையாளர் மற்றும் அவருடன் வந்த மற்றொரு நபரை காவல் துறையினர் கைது செய்தனர். பின் கைது செய்யப்பட்டவர்கள் பினையில் விடுதலை செய்யப்பட்டனர்.

    Next Story
    ×