search icon
என் மலர்tooltip icon

    கார்

    கரென்ஸ் மாடல் விலையை திடீரென மாற்றிய கியா இந்தியா
    X

    கரென்ஸ் மாடல் விலையை திடீரென மாற்றிய கியா இந்தியா

    • கியா இந்தியா நிறுவனத்தின் கரென்ஸ் எம்பிவி மாடல் இந்திய விற்பனையில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
    • புதிய கரென்ஸ் எம்பிவி விலை இந்தியாவில் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.

    கியா இந்தியா நிறுவனம் தனது கரென்ஸ் எம்பிவி மாடல் விலையை இந்திய சந்தையில் இரண்டாவது முறையாக அதிகரித்து இருக்கிறது. முன்னதாக ஏப்ரல் மாத வாக்கில் கியா கரென்ஸ் விலை முதல் முறையாக உயர்த்தப்பட்டது. அப்போது கியா கரென்ஸ் அறிமுக விலை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு புதிய விலை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக கரென்ஸ் மாடல் விலை ரூ. 70 ஆயிரம் உயர்த்தப்பட்டது.

    இந்த நிலையில், கியா கரென்ஸ் விலை இந்தியாவில் மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. கியா கரென்ஸ் புதிய விலை நவம்பர் 1 ஆம் தேதி அமலுக்கு வந்தது. அதன்படி கரென்ஸ் மாடல் விலை தற்போது ரூ. 50 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. கியா கரென்ஸ் 1.5 லிட்டர் NA பெட்ரோல் பிரெஸ்டிஜ் வேரியண்ட் விலை ரூ. 50 ஆயிரம் அதிகரித்துள்ளது.

    கரென்ஸ் 1.5 லிட்டர் NA பெட்ரோல் பிரீமியம் வேரியண்ட் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் லக்சரி வேரியண்ட் விலை முறையே ரூ. 40 ஆயிரம் மற்றும் ரூ. 15 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. 1.5 லிட்டர் லக்சரி வேரியண்ட் விலை ரூ. 35 ஆயிரமும், மற்ற டீசல் வேரியண்ட் விலை ரூ. 30 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது.

    கியா கரென்ஸ் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்ட பிரெஸ்டிஜ் பிளஸ் டிசிடி, லக்சரி+ 6எஸ், லக்சரி+ 7எஸ், லக்சரி+ 6எஸ் டிசிடி மற்றும் லக்சரி+ 7எஸ் டிசிடி விலை ரூ. 20 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதே போன்று பிரீமியம், பிரெஸ்டிஜ் மற்றும் பிரெஸ்டிஜ் பிளஸ் வேரியண்ட்களின் விலை ரூ. 10 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது.

    புதிய விலை உயர்வை அடுத்து கியா கரென்ஸ் மாடலின் துவக்க விலை தற்போது ரூ. 10 லட்சம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17 லட்சத்து 70 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    Next Story
    ×