search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    கியா செல்டோஸ் பேஸ்லிப்ட் டீசர் வெளியீடு
    X

    கியா செல்டோஸ் பேஸ்லிப்ட் டீசர் வெளியீடு

    • கியா நிறுவனத்தின் செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • முதற்கட்டமாக இந்த மாடல் அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு, அதன்பின் இந்தியா வருகிறது.

    இந்திய சந்தையில் கியா நிறுவனத்தின் செல்டோஸ் மாடல் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் செல்டோஸ் மாடல் மூலம் கியா குறிப்பிடத்தக்க பங்குகளை பெற்றது. 2019 வாக்கில் இந்தியாவில் களமிறங்கிய கியா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலாக கியா செல்டோஸ் இருக்கிறது. புதிய செல்டோஸ் பேஸ்லிப்ட் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    அமெரிக்காவில் ஸ்போர்டேஜ், சொரெண்டோ மற்றும் டெலுரைடு மாடல்களை போன்று செல்டோஸ் அதிக வரவேற்பு பெறவில்லை. புதிய மேம்பட்ட செல்டோஸ் மூலம் இந்த நிலையை மாற்ற கியா திட்டமிட்டுள்ளது. புதிய செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடலில் மேம்பட்ட முகப்பு பகுதி, பெரிய கிரில், இலுமினேட் செய்யப்பட்ட அக்செண்ட்கள் வழங்கப்படுகிறது. இதன் ஹெட்லைட்களும் மாற்றப்பட்டு அழகாக டிசைன் செய்யப்பட்டு உள்ளன.

    பின்புறம், டெயில் லைட்களும் புதிதாக வழங்கப்படுகின்றன. இவை ஸ்டிரெட்ச் செய்யப்பட்ட லைட் ஸ்ட்ரிப் மூலம் இண்டர்கனெக்ட் செய்யப்படுகின்றன. காரின் உள்புறத்தில் மேம்பட்ட 10.25 இன்ச் இன்போடெயின்மெண்ட் டிஸ்ப்ளே, 10.25 இன்ச் அளவில் மேம்பட்ட டிரைவர் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. காரின் ஏர் வெண்ட்கள் மாற்றப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இந்த மாடல் ஏற்கனவே தென் கொரிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது.

    அமெரிக்காவில் இந்த மாடல் அதன் தென் கொரிய வெர்ஷனில் வழங்கப்பட்டு இருந்த என்ஜின்களை பெறும் என கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய கியா செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 147 ஹெச்பி பவர், 180 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என தெரிகிறது. இத்துடன் 1.6 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜினும் வழங்கப்படலாம்.

    இந்த என்ஜின் 195 ஹெச்பி பவர், 265 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தலாம். இந்திய சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படும் செல்டோஸ் மாடலில் 1.4 லிட்டர் GDI டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் ஸ்மார்ட்ஸ்டிரீம் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடல் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

    Next Story
    ×