என் மலர்
கார்

மலிவு விலை எலெக்ட்ரிக் எஸ்யூவி... கான்செப்ட் மாடலை அறிமுகப்படுத்திய ஸ்கோடா
- ஐரோப்பாவில் ஸ்கோடாவின் மின்சார மாடல்களுக்கு மிகவும் அணுகக்கூடிய என்ட்ரி லெவல் ஆப்ஷனை வழங்குகிறது.
- புதிய எபிக் மாடல் கிளாஸ் பிளாக் அம்சங்கள் கொண்ட மேட் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது.
ஸ்கோடா நிறுவனம் தனது புதிய கான்செப்ட் மாடல் "எபிக்" காரை அறிமுகம் செய்துள்ளது. எபிக் காரின் உற்பத்தி மாடல் 2026ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டு வாக்கில் உலகளவில் அறிமுகமாக உள்ளது. மேலும் இது நிறுவனத்தின் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் எலெக்ட்ரிக் காராக இருக்கும்.
ஸ்கோடாவின் அதிநவீன வடிவமைப்பு மொழியை முழுமையாக ஏற்றுக்கொண்ட முதல் மாடல் எபிக் ஆகும். இது மினிமலிஸ்ட் ஸ்டைலிங் மற்றும் காம்பேக்ட் தோற்றம் கொண்டிருக்கிறது. 4.1 மீட்டர் நீளத்தில், இந்த காம்பாக்ட் எஸ்யூவி ஐந்து பயணிகளை அமர வைக்க முடியும் மற்றும் விசாலமான 475 லிட்டர் பூட் இடவசதியை வழங்குகிறது. ஸ்கோடா நிறுவனம் புதிய எபிக் எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் WLTP-தரத்தில் 425 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்குவதாக கூறப்படுகிறது.
விலையை பொறுத்தவரை, புதிய எபிக் அதன் ICE வெர்ஷனான காமிக் அருகில் நிலைநிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஐரோப்பாவில் ஸ்கோடாவின் மின்சார மாடல்களுக்கு மிகவும் அணுகக்கூடிய என்ட்ரி லெவல் ஆப்ஷனை வழங்குகிறது.
வெளிப்புறத்தில், புதிய எபிக் மாடல் கிளாஸ் பிளாக் அம்சங்கள் கொண்ட மேட் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் மெல்லிய T-வடிவ LED DRLகள் மற்றும் லோ-செட் ஹெட்லேம்ப்கள் மற்றும் கிரே நிற ஸ்பாய்லருடன் ஒரு வலுவான பம்பர் வழங்கப்பட்டுள்ளன.
உள்புற கேபினில் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங், பல்வேறு ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் ஹாப்டிக் ஸ்க்ரோல் வீல்களுடன் கூடிய பொத்தான்கள் உள்ளன. ஸ்கோடா எபிக் மாடல் ஃபோக்ஸ்வாகனின் நவர்ரா ஆலையில், குழுவின் எலெக்ட்ரிக் அர்பன் கார் ஃபேமிலி திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டமைக்கப்படும். ஸ்கோடாவின் உலகளாவிய மின்சார வாகன வரிசையில் எபிக் மாடல் எல்ராக் மற்றும் என்யக் எலெக்ட்ரிக் மாடல்களுடன் இணைந்து, நிறுவனத்தின் உத்தியில் முக்கிய பங்கு வகிக்கும்.






