என் மலர்
கார்

CNG ஆப்ஷனில் அறிமுகமாகும் ஸ்கோடா எஸ்யூவி - வெளியான புது தகவல்
- ஸ்கோடா கைலாக்கின் தற்போதைய மாடல்கள் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினைப் பெறுகின்றன.
- இது முறையே 115 hp பவர் மற்றும் 178 Nm டார்க் வழங்கும் திறன் கொண்டது.
ஸ்கோடா நிறுவனம் கைலாக் எஸ்யூவியை நவம்பர் 2025 இல் அறிமுகப்படுத்தியது. மேலும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு புதிய பவர்டிரெய்ன் விருப்பத்தை வழங்க பிராண்ட் இப்போது திட்டமிட்டுள்ளது. ஸ்கோடா கார்களில் வழங்கப்படும் டர்போ எஞ்சின்களில் CNG இணக்கத்தன்மையை மதிப்பிடுவதில் ஸ்கோடா இந்தியா தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. தற்போது வரை, CNG மாடல்களை அறிமுகப்படுத்துவதற்கான காலக்கெடு எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இருப்பினும், ஸ்கோடா நிறுவனம் இது கடினமான ஒருங்கிணைப்பாக இருக்காது. ஏனெனில் இந்த பிராண்டில் ஏற்கனவே சர்வதேச அளவில் கிடைக்கும் ஆக்டேவியா, ஸ்கேலா மற்றும் சிட்டிகோ போன் மாடல்களில் CNG பவர்டிரெய்ன் கிடைக்கிறது. மேலும், டர்போ-பெட்ரோல் யூனிட்டுடன் CNG பவர்டிரெய்னை கொண்டு வரும் முதல் நிறுவனமும் ஸ்கோடா இல்லை. டாடா நெக்சான் ஏற்கனவே CNG யூனிட்டுடன் கூடிய 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சினை வழங்குகிறது.
விற்பனையில் உள்ள ஸ்கோடா கைலாக்கின் தற்போதைய மாடல்கள் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினைப் பெறுகின்றன. இது 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் (MT மற்றும் AT) இணைந்து செயல்படுகிறது. இது முறையே 115 hp பவர் மற்றும் 178 Nm டார்க் வழங்கும் திறன் கொண்டது.
இந்திய சந்தையில் கிளாசிக், சிக்னேச்சர், சிக்னேச்சர் பிளஸ் மற்றும் பிரெஸ்டீஜ் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கின்றன. இந்த பிராண்ட் கைலாக்கிற்கு - ஆலிவ் கோல்ட், லாவா ப்ளூ, டொர்னாடோ ரெட், கார்பன் ஸ்டீல், பிரில்லியன்ட் சில்வர், கேண்டி ஒயிட் மற்றும் டீப் பேர்ல் பிளாக் என ஏழு வண்ண விருப்பங்களையும் வழங்குகிறது. ஸ்கோடா கைலாக்கின் விலை ரூ.7.89 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. இது இந்தியாவில் பிராண்டால் வழங்கப்படும் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் SUV ஆகும்.






