என் மலர்
கார்

XEV 9e ஸ்பெஷல் எடிஷனை களமிறக்கிய மஹிந்திரா... என்னென்ன ஸ்பெஷல்..?
- சினிலூக்ஸ் எடிஷனின் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
- முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 656 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது.
மஹிந்திரா நிறுவனம் தனது XEV 9e எலெக்ட்ரிக் காரின் சினிலூக்ஸ் எடிஷன் (Cineluxe Edition) மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள XEV 9e சினிலூக்ஸ் எடிஷனின் இந்திய விலை ரூ. 29.35 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடல் பேக் த்ரீ செலக்ட் வேரியண்டிற்கு மேல் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த காரின் கேபின் பகுதியில் செஸ்ட்நட் பிரவுன் மற்றும் நாக்டர்ன் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் பிரவுன் ஸ்டிட்ச் மற்றும் மென்மையான இருக்கை மேற்கவர்களை கொண்டிருக்கிறது. வெளிப்புறத்தில் புதிய XEV 9e சினிலூக்ஸ் எடிஷன் சேட்டின் பிளாக் மற்றும் சேட்டின் வைட் நிறங்களில் கிடைக்கிறது.
புதிய XEV 9e சினிலூக்ஸ் எடிஷனின் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இந்த காரிலும் 79kWh BYD Blade LFP பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 282 ஹெச்.பி. பவர், 380 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 656 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை XEV 9e மாடலில் டிரை-கிளஸ்டர் டிஸ்ப்ளே, 16 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் கார்டன் ஆடியோ மற்றும் டால்பி அட்மோஸ், 65 வாட் டைப்-சி போர்ட்கள், ரியர் ஏ.சி. வென்ட்கள், வயர்லெஸ் கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிஷன் காருக்கான முன்பதிவு நாளை (மார்ச். 2) தொடங்குகிறது.






