என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெர்சிடிஸ் பென்ஸ்"

    • வரி விதிப்பில் மாற்றம் செய்யப்பட்டதில் இருந்து வாகனங்கள் விற்பனை கணிசமான அளவு அதிகரித்து வருகிறது.
    • இது கடந்த ஆண்டில் இதே காலகட்ட விற்பனையை காட்டிலும் 36 சதவீதம் அதிகமாகும்.

    இந்தியாவில் கடந்த மாதம் 22ஆம் தேதி ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான வரிவிதிப்பு 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.

    வரி விதிப்பில் மாற்றம் செய்யப்பட்டதில் இருந்து வாகனங்கள் விற்பனை கணிசமான அளவு அதிகரித்து வருகிறது. வரி விதிப்புக்கு ஏற்ப வாகனங்கள் விலையை உற்பத்தியாளர்கள் மாற்றியமைத்தது, வாகன விற்பனை விரைந்து அதிகரிக்க முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

    இந்ந நிலையில் ஜெர்மனியை சேர்ந்த பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பென்ஸ் தனது மெர்சிடிசஸ் வகை கார்கள் விற்பனை இந்தியாவில் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. வரி சீர்திருத்த நடவடிக்கைக்கு பின்னர் கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கி இதுவரை 5,119 கார்கள் விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டில் இதே காலகட்ட விற்பனையை காட்டிலும் 36 சதவீதம் அதிகமாகும்.

    • மெர்சிடிஸ் பென்ஸ்-இன் எலெக்ட்ரிக் GLC-இன் உள்புறம் புதிய MBUX ஹைப்பர்ஸ்கிரீன் உள்ளது.
    • இது மேட்ரிக்ஸ் பேக்லைட் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.

    புதிய மின்சார மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி, 2026ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் உலகளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த மாடல் 2027ஆம் ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம். முதற்கட்டமாக, இந்த மாடல் முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட CBU வடிவில் இந்திய சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வெறும் மின்மயமாக்கப்பட்ட மாடல்களுடன் ஒப்பிடுகையில், எலெக்ட்ரிக் GLC பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட எலெக்ட்ரிக்-ஃபர்ஸ்ட் தளத்தின் அடிப்படையில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது மெர்சிடிஸ் நிறுவனத்தின் புதிய பேட்டரி தொழில்நுட்பத்துடன் டூயல்-மோட்டார் டிரைவ் டிரெய்ன் கொண்டிருக்கிறது.

    மிகவும் விலையுயர்ந்த மாடலாக GLC 400 4MATIC இருக்கும். இதில் உள்ள இரண்டு மோட்டார்கள் 360kW டார்க் உற்பத்தி செய்கிறது. பின்புற மோட்டார் 2-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் முன்புற ஆக்சிலில் டிஸ்கனெக்ட் யூனிட் கொண்டுள்ளது. இது நிலைமைகள் அனுமதிக்கும் போதெல்லாம் துண்டிக்க முடியும், இதன் மூலம் செயல்திறன் அதிகரிக்கும்.

    இந்த யூனிட் மணிக்கு 0-100 கிலோமீட்டர்கள் வேகத்தை 4.3 வினாடிகளில் எட்டிவிடும். மேலும் இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 210 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்த காரில் புதிய 94kWh லித்தியம்-அயன் பேட்டரி யூனிட் உள்ளது. புதிய 800-வோல்ட் மின் கட்டமைப்போடு இணைந்து, இந்த பேட்டரி 571 முதல் 713 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் வழங்கும் என்று WLTP சோதனைகளில் தெரியவந்துள்ளது. இத்துடன் 330kW வரை அதிவேக சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது.



    மெர்சிடிஸ் பென்ஸ்-இன் எலெக்ட்ரிக் GLC-இன் உள்புறம் புதிய MBUX ஹைப்பர்ஸ்கிரீன் உள்ளது. இது ஒரு ஆப்ஷனாக கிடைக்கிறது. இதில் 39.1 இன்ச் அளவில் டேஷ்போர்டு முழுக்க நீள்கிறது. இது மெர்சிடிஸ் பென்ஸில் இதுவரை நிறுவப்பட்ட மிகப்பெரிய ஸ்கிரீனாக அமைகிறது. இது மேட்ரிக்ஸ் பேக்லைட் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.

    பவர்டிரெய்ன் மற்றும் டிஜிட்டல் இன்டீரியர் இரண்டிற்கும் அடித்தளமாக இருப்பது, GLC-இன் இந்த தலைமுறைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய எலெக்ட்ரிக்-ஃபர்ஸ்ட் பிளாட்ஃபார்ம் ஆகும். இந்த கார் அளவீடுகளில் 4,845 மில்லிமீட்டர் நீளம் மற்றும் 2,972 மில்லிமீட்டர் வீல்பேஸ் கொண்டுள்ளது. இந்த காரில் முன் மற்றும் பின் இருக்கை பயணிகளுக்கு கால் வைக்க அதிக இடவசதி உள்ளது. மேலும் அதிக ஹெட்ரூம் உள்ளது.

    புதிய எலெக்ட்ரிக் GLC-இன் உற்பத்தி ஜெர்மனியில் உள்ள மெர்சிடிஸ் பிரெமன் ஆலையில், வழக்கமான முறையில் இயங்கும் வேரியண்ட்களுடன், நிகர கார்பன்-நடுநிலை அடிப்படையில் நடைபெறும்.

    • இது தோராயமாக 24 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் சார்ஜ் செய்ய உதவுகிறது.
    • வெளிப்புறத்தில் 942 லைட்-அப் பிக்சல்கள் கொண்ட ஒரு பெரிய ஒளிரும் கிரில் உள்ளது.

    மியூனிக் IAA மொபிலிட்டி 2025 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட அடுத்த தலைமுறை GLC மின்சார SUVயை மெரிசிடிஸ் பென்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. EQC-யின் வாரிசாக நிலைநிறுத்தப்பட்ட இந்த மாடல், நிறுவனத்தின் முழு-மின்சார MB.EA தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது வடிவமைப்பு மற்றும் பொறியியல் கவனத்தில் மாற்றத்தைக் குறிக்கிறது.

    இது இரண்டு பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வழங்கப்படும். இவை 369bhp பவர் மற்றும் 504Nm டூயல் மோட்டார், ரியர் டிரைவ் GLC300+, மற்றும் 483bhp மற்றும் 808Nm வழங்கும் இரட்டை மோட்டார் GLC400 4MATIC என அழைக்கப்படுகின்றன. இரண்டும் 94kWh பேட்டரியைப் பயன்படுத்துகின்றன மற்றும் 800-வோல்ட் மின் அமைப்பில் இயங்குகின்றன. இது தோராயமாக 24 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் சார்ஜ் செய்ய உதவுகிறது.

    அதன் மின்சார இயல்பு இருந்தபோதிலும், புதிய GLC அதன் வம்சாவளிக்கு உண்மையாகவே உள்ளது மற்றும் ICE மாடலை விட சுமார் ஐந்து அங்குல நீளம் கொண்டது. இந்த மின்சார கார் முழு சார்ஜ் செய்தால் 713 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என்று WLTP-மதிப்பிட்டுள்ளது.

    வெளிப்புறத்தில் 942 லைட்-அப் பிக்சல்கள் கொண்ட ஒரு பெரிய ஒளிரும் கிரில் உள்ளது. உள்புறத்தில் MBUX ஹைப்பர்ஸ்கிரீன் கொண்டுள்ளது. 39.1-இன்ச் டிஸ்ப்ளே A-பில்லர் முதல் A-பில்லர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், இன்ஃபோடெயின்மென்ட், ஏர் கண்டிஷனிங் கட்டுப்பாடுகள் மற்றும் பயணிகள் இடைமுகத்தை ஒரு யூனிட்டாக ஒருங்கிணைக்கிறது.

    • கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது விற்பனையில் 18 சதவீதம் அதிகரித்துள்ளது.
    • சந்தையில் ஏற்படும் எந்த மாற்றங்களையும் கையாள மெர்சிடிஸ் பென்ஸ் தயாராக உள்ளது.

    EQ தொழில்நுட்பத்துடன் கூடிய மெர்சிடிஸ் பென்ஸ் G 580 பிரபலமான G-Class SUV-யின் எலெக்ட்ரிக் பதிப்பாகும். இந்த மாடல் பாரம்பரிய ஆஃப்-ரோடு திறன்களை நவீன எலெக்ட்ரிக் அம்சங்களுடன் இணைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், இது சந்தையில் இருந்து கலவையான வரவேற்பைப் பெற்றுள்ளது.

    மெர்சிடிஸ் பென்ஸ் G 580:

    புதிய G 580 மேம்பட்ட எலெக்ட்ரிக் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இது மாற்றியமைக்கப்பட்ட லேடர் ஃபிரேமில் கட்டமைக்கப்பட்டுள்ளது மற்றும் நான்கு எலெக்ட்ரிக் மோட்டார்களைக் கொண்டுள்ளது. இவை சக்கரத்திலும் ஒன்றென மொத்தம் 579Hp பவர் மற்றும் 1164 Nm டார்க் உருவாக்குகிறது. இந்த SUV சுமார் 4.6 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது. மேலும் சாலை நிலைமைகளைப் பொறுத்து முழு சார்ஜ் செய்தால் 473 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது. இதன் தனித்துவமான அம்சங்களில் ஒன்று "G-டர்ன்" ஆகும். இது SUV-ஐ இடத்தில் திரும்ப அனுமதிக்கிறது. இது ஒரு கனரக எலெக்ட்ரிக் வாகனமாக இருந்தாலும் அதன் ஆஃப்-ரோடு திறன்களைக் காட்டுகிறது.

    சந்தை சவால்களுக்கான காரணம்:

    இந்த பலங்கள் இருந்தபோதிலும், எலெக்ட்ரிக் G-கிளாஸ் பல சவால்களை எதிர்கொண்டது. இது மெர்சிடிஸ் ICE வகையுடன் ஒப்பிடும்போது குறைந்த விற்பனைக்கு வழிவகுத்தது.

    விற்பனை செயல்திறன்: முதல் ஆண்டில், 1,450 யூனிட்டுகள் மட்டுமே விற்கப்பட்டன. பாரம்பரிய எரிப்பு இயந்திரம் கொண்ட ஜி-கிளாஸ் சுமார் 9,700 ஆக இருந்தது.

    விலை நிர்ணயம்: G 580 அதன் பெட்ரோல் மாடலை விட ஒப்பீட்டளவில் விலை அதிகம்.

    வரம்பு கவலைகள்: EPA-சான்றளிக்கப்பட்ட ரேஞ்ச் சுமார் 473 கிலோமீட்டர் உடன், சாத்தியமான வாங்குபவர்கள் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக மற்ற போட்டியாளர்கள் நீண்ட ரேஞ்ச் வழங்கும்போது.

    சந்தை கருத்து: மெர்சிடிஸ் நிறுவனத்தின் ஒரு உள் நிர்வாகி (தனது அடையாளத்தை பெயர் குறிப்பிடாமல் வைத்திருந்தவர்) குறைந்த விற்பனை மற்றும் வாடிக்கையாளர்களிடம் இருந்து குறைந்த ஆர்வத்தைக் காரணம் காட்டி, வாகனத்தை "முழுமையான தோல்வி" என்று அழைத்ததாகக் கூறப்படுகிறது.

    நடைமுறை சிக்கல்கள்: மின்சார வாகனம் கனமானது மற்றும் குறைந்த சுமை திறன் கொண்டது, மேலும் அதற்கு டவ்பார் ஆப்ஷன் இல்லை. இந்த சிக்கல்கள் ICE மாதிரியுடன் ஒப்பிடும்போது அதன் நடைமுறைத்தன்மை குறித்து சந்தேகங்களை எழுப்பியுள்ளன.

    G-கிளாஸ் வாங்குபவர்களிடையே மிகவும் பிடித்தமானதாகத் தொடர்கிறது என்று நிறுவனம் கூறுகிறது. இது 2024 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் அதன் அதிகபட்ச விற்பனையைப் பதிவு செய்தது மற்றும் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டது. கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது விற்பனையில் 18 சதவீதம் அதிகரித்துள்ளது.

    சந்தையில் ஏற்படும் எந்த மாற்றங்களையும் கையாள மெர்சிடிஸ் பென்ஸ் தயாராக உள்ளது. 2030களை எதிர்நோக்கி, வாடிக்கையாளர்கள் விரும்புவதைப் பொறுத்து, பிராண்ட் முழு எலெக்ட்ரிக மாடல்கள் மற்றும் மேம்பட்ட எரிபொருள்-இயங்கும் விருப்பங்களை வழங்கும்.

    • விலை உயர்வு இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • விலை உயர்வானது, ரூ.90,000 முதல் ரூ.12.2 லட்சம் வரை இருக்கும்.

    மெர்சிடிஸ் பென்ஸ் கார் அனைவரையும் ஈர்க்கும் டிசைன் கொண்டது. இந்த நிறுவனத்தின் மாடலை பயன்படுத்த பெரும்பாலானோர் ஆர்வம் கொள்வர்.

    இந்த நிலையில், மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் சில மாடல்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்தள்ளது. இந்த விலை உயர்வு இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1-ந்தேதி முதல் கட்டமாகவும், செப்டம்பர் 1-ந்தேதி இரண்டாவது கட்டமாகவும் விலை உயர்வானது அமல்படுத்தப்பட உள்ளது.

    ஜூன் 1-ந்தேதி முதல் சி-கிளாஸ், இ-கிளாஸ், ஜிஎல்சி, ஜிஎல்இ, ஜிஎல்எஸ், ஈக்யூஎஸ் மற்றும் மேபேக் எஸ்-கிளாஸ் போன்ற கார் மாடல்களின் விலை உயர்த்தப்பட்டுகிறது. அதன்படி விலை உயர்வானது, ரூ.90,000 முதல் ரூ.12.2 லட்சம் வரை இருக்கும். இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் இரண்டாம் கட்ட விலை உயர்வானது முதல் ஜெர்மன் வாகன உற்பத்தியாளரின் முழு மாடல் வரிசையையும் உள்ளடக்கும். வாகனங்களின் விலையில் 1.5 சதவீதம் வரை மாற்றங்களைக் கொண்டுவரும் என்பது குறிப்பிடத்தக்கது.



    இந்த இரண்டு கட்டங்களான விலை உயர்வானது வாடிக்கையாளர்களின் திட்டமிடலுக்கு அதிக நேரத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது.

    விலை உயர்வு குறித்து மெர்சிடிஸ் நிறுவனம் கூறுகையில், சமீபத்திய விலை உயர்வுக்குக் கடந்த நான்கு மாதங்களில் யூரோவிற்கு எதிராக இந்திய ரூபாயின் அந்நியச் செலாவணி மதிப்பு கிட்டத்தட்ட 10 சதவீதம் சரிந்ததே காரணம் என கூறியுள்ளது.

    மெர்சிடிஸ் பென்ஸைத் தவிர, ஆடி இந்தியாவும் அதன் வாகனங்களின் விலைகளை 2 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வானது வருகிற 15-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த இருக்கிறது.
    • இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இரு எலெக்ட்ரிக் கார் விவரங்களை மெர்சிடிஸ் பென்ஸ் அறிவித்துள்ளது.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் முற்றிலும் புதிய GLB மற்றும் EQB மாடல்களை டிசம்பர் 2 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. மேலும் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கான முன்பதிவுகளும் துவங்கி நடைபெற்று வருகிறது. இவற்றுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்பதிவு மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா வலைதளம் மற்றும் விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.

    MFA2 பிளாட்பார்மில் உருவாகி இருக்கும் புதிய GLB மாடல் அளவில் 4634mm நீளம், 1834mm அகலம், 1658mm உயரம், 2829mm வீல்பேஸ் கொண்டுள்ளது. புதிய பென்ஸ் EQB மாடல் அளவில் 4748mm நீளம், 1667mm உயரம் கொண்டிருக்கிறது. இதன் வீல்பேஸ் மற்றும் அகலம் அதன் ICE மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய பென்ஸ் GLB மற்றும் EQB மாடல்களில் ஏராளமான புது அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இதில் எல்இடி ஹெட்லைட்கள், ரியர் லைட்கள், பானரோமிக் சன்ரூப், 10.25 இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே, 10.25 இன்ச் இன்போடெயின்மெண்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் சார்ஜிங் பேட், 360 டிகிரி கேமரா, மல்டி-ஜோன் டெம்ப்பரேச்சர் கண்ட்ரோல் உள்ளிட்டவை அடங்கும். இந்த இரு எலெக்ட்ரிக் கார் மாடல்களும் சில மேற்கத்திய சந்தைகளில் ஐந்து மற்றும் ஏழு இருக்கை அமைப்புகளில் கிடைக்கின்றன.

    சர்வதேச சந்தையில் பென்ஸ் GLB மாடல் ஏராளமான வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் 1.3 லிட்டர், 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றின் செயல்திறன் நிச்சயம் வேறுபடும். எனினும், இவற்றின் சில வேரியண்ட்களில் ஆல்-வீல் டிரைவ் வசதி வழங்கப்படுகிறது.

    • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட GLB மாடல் இந்தியாவில் அறிமுகமானது.
    • புதிய பென்ஸ் GLB மாடல் இந்திய சந்தையில் மொத்தம் மூன்று வித வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய GLB 3-ரோ எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்தது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் GLB மாடல் விலை ரூ. 63 லட்சத்து 8 ஆயிரம் என துவங்குகிறது. இந்த மாடல் 200, 220d மற்றும் 220d 4மேடிக் என மூன்று வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய பென்ஸ் GLB பேஸ் வேரியண்ட் விலை ரூ. 63 லட்சத்து 8 ஆயிரம் என துவங்குகிறது.

    புதிய மெர்சிடிஸ் பென்ஸ் GLB 220d மற்றும் GLB 220d 4 மேடிக் வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 66 லட்சத்து 8 ஆயிரம் மற்றும் ரூ. 69 லட்சத்து 8 ஆயிரம் என துவங்குகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் GLB மாடலில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றுடன் 7 ஸ்பீடு மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளன. இதன் பெட்ரோல் என்ஜின் 161 ஹெச்பி பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டீசல் என்ஜின் 188 ஹெச்பி பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    அம்சங்களை பொருத்தவரை பென்ஸ் GLB மாடலில் சதுரங்க வடிவம் கொண்ட எல்இடி ஹெட்லேம்ப்கள், 2-பீஸ் எல்இடி டெயில் லைட்கள், பானரோமிக் சன்ரூஃப், வெண்டிலேஷன் வசதி கொண்ட பவர்டு முன்புற இருக்கைகள், 7 ஏர்பேக், இரண்டு 10.25 இன்ச் ஸ்கிரீன்கள் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மற்றும் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்று செயல்படுகின்றன.

    • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • புதிய பென்ஸ் எலெக்ட்ரிக் கார் ஒற்றை, fully loaded வேரியண்டில் இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது நான்காவது எலெக்ட்ரிக் கார்- பென்ஸ் EQB மாடலை அறிமுகம் செய்தது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQB மாடல் விலை ரூ. 74 லட்சதத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக பென்ஸ் GLB மாடல் விலையையும் மெர்சிடிஸ் பென்ஸ் அறிவித்தது. இந்த மாடலின் விலை ரூ. 63 லட்சத்து 8 ஆயிரம் என துவங்குகிறது.

    முழுமையான எலெக்ட்ரிக் மாடலான மெர்சிடிஸ் பென்ஸ் EQB ஸ்வெப்ட்பேக் எல்இடி ஹெட்லேம்ப்கள், பிளான்க்டு-ஆஃப் கிரில், ஸ்ப்லிட் ரக எல்இடி டெயில் லைட்கள், 18 இன்ச் அலாய் வீல்கள், பவர்டு டெயில்கேட், வயர்லெஸ் சார்ஜிங், யுஎஸ்பி டைப் சி போர்ட்கள், பானரோமிக் சன்ரூஃப், ஆம்பியண்ட் லைட்டிங், 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQB மாடலில் 66.4 கிலோவட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வழங்கப்பட்டு இருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார் 225 ஹெச்பி பவர், 390 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த காருடன் AC மற்றும் DC சார்ஜிங் வசதி உள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 423 கிலோமீட்டர் வரை செல்லும் என WLTP சான்று பெற்று இருக்கிறது.

    • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் மாடல் இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டது.
    • புது பென்ஸ் கான்செப்ட் காரின் எல்இடி ஹெட்லைட்கள் மெர்சிடிஸ் பென்ஸ் EQS மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் சார்பில் மூன்றாவது சாலை பாதுகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சாலை பாதுகாப்பு நிகழ்ச்சியை ஒட்டி மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது விஷன் EQXX கான்செப்ட் காரை இந்திய சந்தையில் காட்சிப்படுத்தி இருக்கிறது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் விஷன் EQXX மாடல் முழு சார்ஜ் செய்தால் ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை செல்லும் என அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

    டிசைனை பொருத்தவரை புதிய மெர்சிடிஸ் பென்ஸ் விஷன் EQXX கான்செப்ட் கார் தோற்றத்தில் அசத்தலாக காட்சியளிக்கிறது. இந்த காரில் ஸ்லோபிங் ரூஃப்லைன், பின்புறம் நீண்டு மெல்லியதாக காட்சியளிக்கிறது. இவைதவிர மெர்சிடிஸ் பென்ஸ் விஷன் EQXX மாடலின் எல்இடி ஹெட்லைட், மெர்சிடிஸ் பென்ஸ் EQS மாடலில் உள்ளதை போன்றே தெரிகிறது. இத்துடன் ஃபிளஷ் டோர் ஹேண்டில்கள், ஃபுல் விட்த் எல்இடி டெயில் லேம்ப்கள் உள்ளன.

    மெர்சிடிஸ் பென்ஸ் விஷன் EQXX கான்செப்ட் கார் தோற்றத்தில் ஃபார்முலா 1 கார் போன்று இல்லை என்ற போதிலும், சில தொழில்நுட்பங்கள் ஃபார்முலா 1 காரில் இருப்பதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. இவை மெர்சிடிஸ் பென்ஸ் காரை பெரிய பேட்டரி பேக்- குறைக்கப்பட்ட எடை மற்றும் கச்சிதமான அளவீடுகளை பெற உதவி இருக்கிறது. அந்த வகையில் இந்த எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.

    இந்த கான்செப்ட் காரில் 241.65 ஹெச்பி திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது. இத்துடன் இந்த காரின் மேற்கூரையில் உள்ள சூரிய தகடுகள் காரின் ரேன்ஜ்-ஐ 25 கிலோமீட்டர்கள் வரை அதிகப்படுத்தும் என மெகர்சிடிஸ் பென்ஸ் அறிவித்து இருக்கிறது.

    • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இரு கார் மாடல்களுக்கான காத்திருப்பு காலம் அதிகபட்சம் பத்து மாதங்கள் வரை குறைகிறது.
    • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மேபேக் GLS மற்றும் AMG G63 மாடல்களுக்கு அதிக மாதங்கள் காத்திருப்பு காலம் இருந்து வந்தது.

    மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது இரு டாப் எண்ட் மாடல்களின் முன்பதிவு துவங்குவதாக அறிவித்து இருக்கிறது. இரு கார்களின் உற்பத்தி கூடுதலாக அதிகரிக்கப்பட்டு இருப்பதை அடுத்து, முன்பதிவு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதல் வாரத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் வாடிக்கையாளர்கள் மட்டும் பிரத்யேகமாக கார்களை முன்பதிவு செய்ய முடியும். அதன் பின் மற்ற வாடிக்கையாளர்கள் புதிய பென்ஸ் கார்களை வாங்க முன்பதிவு செய்யலாம்.

    தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் CBU மாடல்களான மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் GLS 600 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் AMG G63 உள்ளிட்டவைகளுக்கு அதிக யூனிட்கள் ஒதுக்கீடு மற்றும் வினியோகத்தில் முன்னுரிமை வழங்கப்பட இருக்கிறது.

     

    மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவில் டாப் எண்ட் மாடல்களாக AMG E53 கேப்ரியோலெட், மெர்சிடிஸ் பென்ஸ் AMG G63, மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் GLS, மெர்சிடிஸ் பென்ஸ் S கிளாஸ், மெர்சிடிஸ் பென்ஸ் S கிளாஸ் மேபேக் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் EQS EV உள்ளிட்டவைகளை விற்பனை செய்து வருகிறது.

    கடந்த ஆண்டு மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் இந்த பிரிவில் 69 சதவீதம் வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்தது. கடந்த ஆண்டு அதிக வளர்ச்சியை பதிவு செய்த இந்த பிரிவில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த ஆண்டும் அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு முழுக்க மெர்சிடிஸ் பென்ஸ் அறிமுகம் செய்யும் கார்களில் பாதிக்கும் மேற்பட்டவை இந்த பிரிவை சேர்ந்தவைகளாக இருக்கும்.

    ஒவ்வொரு மாடலுக்கு ஏற்ப இந்த வாகனங்களுக்கான காத்திருப்பு காலம் ஆறில் இருந்து அதிகபட்சம் பத்து மாதங்கள் வரை குறையும் என மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் எதிர்பார்க்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் AMG G63 மாடலுக்கான காத்திருப்பு காலம் 24 முதல் 36 மாதங்களில் இருந்து 12 முதல் 16 மாதங்களாக குறைந்து இருக்கிறது. இதே போன்று மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் GLS 600 காரின் ஒற்றை நிற வேரியணட்டுக்கான காத்திருப்பு காலம் எட்டு மாதங்களாகவும், டூயல் டோன் வேரியண்டிற்கு எட்டு முதல் பத்து மாதங்களாகவும் குறைந்து இருக்கிறது.

    "பல மாதங்களாக இந்த வாகனங்களுக்காக காத்திருக்கும் எங்களின் வாடிக்கையாளர்களுக்காக முன்பதிவை மீண்டும் பிரத்யேகமாக துவங்குகிறது. இது போன்ற டாப் எண்ட் மாடல்களை வாங்க வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் செலுத்துவதை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் மெர்சிடிஸ் பென்ஸ் குளோபல் தொகுப்பில் இருந்து புதிய மாடல்களை இந்த பிரிவில் தொடர்ந்து அறிமுகம் செய்வோம்." என மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஒ சந்தோஷ் ஐயர் தெரிவித்தார்.

    • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் எஸ்யுவி விலையை மாற்றியது.
    • சமீபத்தில் இந்த மாடலுக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் AMG G63 விலையை திடீரென உயர்த்தி இருக்கிறது. தற்போதைய விலை உயர்வில் மெர்சிடிஸ் AMG G63 விலை தற்போது ரூ. 75 லட்சம் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மெர்சிடிஸ் AMG G63 விலை ரூ. 2 கோடியே 55 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், தற்போது இதன் விலை ரூ. 3 கோடியே 30 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த மாதத்திலேயே மெர்சிடிஸ் நிறுவனம் தனது AMG G63 மற்றும் GLS மேபேக் 600 மாடல்களுக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது. முன்பதிவுகள் முதற்கட்டமாக மெர்சிடிஸ் பென்ஸ் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே நடைபெற்றது.

    மெர்சிடிஸ் AMG G63 மாடலில் 4.0 லிட்டர், டுவின் டர்போ வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 577 ஹெச்பி பவர், 850 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. மெர்சிடிஸ் G கிளாஸ் மாடல் G350d வெர்ஷனிலும் வழங்கப்படுகிறது.

    • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்கள் விலையை மாற்றுகிறது.
    • கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் மெர்சிடிஸ் தனது கார்களின் விலையை 5 சதவீதம் வரை உயர்த்தியது.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை 5 சதவீதம் வரை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. புதிய விலை உயர்வு ஏப்ரல் 1, 2023 முதல் அமலுக்கு வர இருக்கிறது. முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் கார்களின் விலையை 5 சதவீதம் வரை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

    யூரோக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது மற்றும் உற்பத்தி செலவீனங்கள் மற்றும் போக்குவரத்து செலவீனங்கள் அதிகரிப்பதை விலை உயர்வுக்கு காரணமாக மெர்சிடிஸ் பென்ஸ் அறிவித்து இருக்கிறது. முந்தைய விலை உயர்வு உற்பத்தி செலவீனங்கள் அதிகரிப்பதால் அறிவிக்கப்பட்டது என மெர்சிடிஸ் பென்ஸ் அறிவித்து இருந்தது.

     

    புதிய விலை உயர்வின் படி மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் லிமோசின் மற்றும் GLA மாடல்கள் விலை ரூ. 2 லட்சம் வரை அதிகரிக்க இருக்கிறது. சி கிளாஸ், இ கிளாஸ் மற்றும் எஸ் கிளாஸ் மாடல்கள் விலை முறையே ரூ. 2.5 லட்சம், ரூ. 3.5 லட்சம் மற்றும் ரூ. 6 லட்சம் வரை உயர்த்தப்படுகிறது. GLE 300d 4மேடிக், GLE 400d 4மேசிக் மாடல்களின் விலை முறையே ரூ. 2 லட்சம் மற்றும் ரூ. 3 லட்சம் உயர்கிறது. GLS விலை ரூ. 10 லட்சம் வரை உயர்கிறது.

    டாப் எண்ட் மாடல்களான மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் எஸ்580 விலை ரூ. 12 லட்சமும், EQS 580 விலை ரூ. 4 லட்சம் வரை உயர்கிறது. முன்னதாக மெர்சிடிஸ் AMG E 53 4மேடிக் பிளஸ் கேப்ரியோலெட் மாடல் வெளியீட்டின் போது இந்திய சந்தையில் 2023 முதல் பாதியில் மட்டும் பத்து புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அறிவித்தது.

    ×