என் மலர்
கார்

ஜிஎஸ்டி 2.0 செய்த மேஜிக்... சட்டென எகிறிய பென்ஸ் கார் விற்பனை
- வரி விதிப்பில் மாற்றம் செய்யப்பட்டதில் இருந்து வாகனங்கள் விற்பனை கணிசமான அளவு அதிகரித்து வருகிறது.
- இது கடந்த ஆண்டில் இதே காலகட்ட விற்பனையை காட்டிலும் 36 சதவீதம் அதிகமாகும்.
இந்தியாவில் கடந்த மாதம் 22ஆம் தேதி ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான வரிவிதிப்பு 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.
வரி விதிப்பில் மாற்றம் செய்யப்பட்டதில் இருந்து வாகனங்கள் விற்பனை கணிசமான அளவு அதிகரித்து வருகிறது. வரி விதிப்புக்கு ஏற்ப வாகனங்கள் விலையை உற்பத்தியாளர்கள் மாற்றியமைத்தது, வாகன விற்பனை விரைந்து அதிகரிக்க முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்ந நிலையில் ஜெர்மனியை சேர்ந்த பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பென்ஸ் தனது மெர்சிடிசஸ் வகை கார்கள் விற்பனை இந்தியாவில் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. வரி சீர்திருத்த நடவடிக்கைக்கு பின்னர் கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கி இதுவரை 5,119 கார்கள் விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டில் இதே காலகட்ட விற்பனையை காட்டிலும் 36 சதவீதம் அதிகமாகும்.






