என் மலர்
நீங்கள் தேடியது "Mercedes Benz"
- மெர்சிடிஸ் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- புது எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் மெர்சிடிஸ் அறிமுகம் செய்யும் மூன்றாவது மாடல் ஆகும்.
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது புதிய EQB மாடல் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. சர்வதேச சந்தையில் இந்த மாடல் EQC காரின் கீழ் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. இது இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது எலெக்ட்ரிக் மாடலாக அறிமுகமாக இருக்கிறது.
மெர்சிடிஸ் நிறுவனத்தின் GLB எஸ்.யு.வி.-யை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய EQB மாடலில் எலெக்ட்ரிக் வாகனத்திற்கு தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இந்த மாடலில் முற்றிலும் வித்தியாசமான வீல்கள் மற்றும் பின்புற டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் பின்புறம் ஃபுல்-விட்த் லைட் பார் உள்ளது.

இந்த கார் 250, 300 மற்றும் 350 என மூன்று வித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இவற்றில் 300 மற்றும் 350 மாடல்களில் ஆல் வீல் டிரைவ் வசதி மற்றும் ஒவ்வொரு ஆக்சில்களிலும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. இதன் EQB 250 மாடல் ஒற்றை மோட்டார் செட்டப், 188 ஹெச்.பி. பவர், 385 நியூட்டன் மீட்டர் டார்க் திறன் கொண்டுள்ளது.
300 மற்றும் 350 மாடல்களின் ஆல் வீல் டிரைவ் மாடல்களில் உள்ள மோட்டார் 225 ஹெச்.பி பவர், 390 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. மூன்று வேரியண்ட்களிலும் 66.5 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இவற்றில் எந்த வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
- மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் ஆயிரம் கிலோமீட்டர்கள் ரேன்ஜ் வழங்கி அசத்தி இருக்கிறது.
- முன்னதாக மற்றொரு மாடலும் இதே போன்று ஆயிரம் க.மீ. ரேன்ஜ் வழங்கி இருந்தது.
மெர்டசிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது விஷன் EQXX கார் மாடலை கொண்டு தனது முந்தையை சாதனையை முறியடித்து இருக்கிறது. முன்னதாக விஷன் EQXX மாடல் முழு சார்ஜில் 1000 கி.மீ. சென்ற நிலையில் தற்போது இதே கார் 1,202 கி.மீ. சென்று சாதனை படைத்து இருக்கிறது. இதற்கான சோதனை ஓட்டம் பிராக்லீயில் உள்ள எஃப்1 பந்தய களத்தில் நடைபெற்றது.

இதை அடுத்து சில்வர்ஸ்டோன் எப்1 பந்தய களத்திலும் இந்த கார் சோதனை நடைபெற்றது. அதில் இந்த கார் 1202 கி.மீ. சென்று அசத்தியது. முதற்கட்டமாக பிரான்ஸ் நாட்டின் ஸ்டட்கர்ட்டில் இருந்து கேசிஸ் பகுதிக்கும் அதன் பின் யூரோடனலில் இருந்து கலாய்ஸ் பகுதிக்கும் சென்றது. லண்டனில் இந்த கார் ஃபோல்க்ஸ்டோனில் துவங்கி பிராக்லி வரை கடக்கப்பட்டது.
2030 ஆண்டிற்குள் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் முழுமையான எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக மாற முடிவு செய்து உள்ளது. மெர்சிடிஸ் நிறுவனம் தனது பேட்டரி பேக்கில் இருந்து முடிந்த வரை ஒவ்வொரு வாட் திறனையும் உறிஞ்சுவதற்கான பணிகளில் மெர்சிடிஸ் பென்ஸ் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் கிராண்ட் டூரிங் அனுபவம் எலெக்ட்ரிக் யுகத்திலும் தொடரும் என்றே தெரிகிறது.
- மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் கார்களை ரிகால் செய்வதாக அறிவித்து உள்ளது.
- சர்வதேச சந்தையில் சுமார் பத்து லட்சம் கார்களை மெர்சிடிஸ் பென்ஸ் ரிகால் செய்வதாக அறிவித்தது.
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் 2 ஆயிரத்து 179 கார்களை இந்திய சந்தையில் இருந்து ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. ரிகால் செய்யப்படும் கார்கள் 2005 முதல் 2013 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் GL மற்றும் ML கிளாஸ் எஸ்.யு.வி. மற்றும் R கிளாஸ் எம்.பி.வி.க்கள் ஆகும்.

வாகனத்தின் பிரேக் பூஸ்டரில் துருப் பிடித்து இருக்கலாம் என்றும், இது பிரேக்கிங்கின் போது அசௌகரியம் அல்லது ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாகவே கார்கள் ரிகால் செய்யப்படுகின்றன. சில நாட்களுக்கு முன் உலகம் முழுக்க சுமார் பத்து லட்சம் கார்களை ரிகால் செய்வதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அறிவித்து இருந்தது. அப்போதும் இதே காரணத்தை மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
கார்களின் பிரேக்கிங் சிஸ்டத்தில் உள்ள கோளாறு காரணமாக இத்தனை யூனிட்கள் ரிகால் செய்யப்படுவதாக மெர்சிடிஸ் பென்ஸ் அறிவித்து இருக்கிறது. "பாதிக்கப்பட்ட கார்களின் சில யூனிட்களில், பிரேக் பூஸ்டர் ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கும் பகுதியில் துரு ஏற்பட்டு இருக்கலாம் என கண்டுபிடித்து இருக்கிறோம்," என்று மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
- மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் சர்வதேச அளவில் தனது வாகனங்களை ரிகால் செய்ய முடிவு செய்து இருக்கிறது.
- இதில் மூன்று கார் மாடல்கள் இடம்பெற்று உள்ளன.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 2004 முதல் 2015 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மூன்று கார் மாடல்களை உலகம் முழுக்க ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. இவற்றில் 2nd Gen மெர்சிடிஸ் பென்ஸ் ML கிளாஸ் W164, 1St Gen GL கிளாஸ் X164 மற்றும் R கிளாஸ் W251 போன்ற மாடல்களின் 9 லட்சத்து 93 ஆயிரத்து 407 யூனிட்கள் ரிகால் செய்யப்படுகின்றன.

கார்களின் பிரேக்கிங் சிஸ்டத்தில் உள்ள கோளாறு காரணமாக இத்தனை யூனிட்கள் ரிகால் செய்யப்படுவதாக மெர்சிடிஸ் பென்ஸ் அறிவித்து இருக்கிறது. "பாதிக்கப்பட்ட கார்களின் சில யூனிட்களில், பிரேக் பூஸ்டர் ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கும் பகுதியில் துரு ஏற்பட்டு இருக்கலாம் என கண்டுபிடித்து இருக்கிறோம்," என்று மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது.
தற்போது பாதிக்கப்பட்டு இருக்கும் கார் மாடல்கள் இந்திய சந்தையிலும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அவற்றையும் ரிகால் செய்ய மெர்சிடிஸ் பென்ஸ் முடிவு செய்யும் என்றே தெரிகிறது. எனினும், இதுபற்றி மெர்சிடிஸ் பென்ஸ் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.





