search icon
என் மலர்tooltip icon

    கார்

    உற்பத்தியில் புது மைல்கல் எட்டிய டாடா மோட்டார்ஸ் EV
    X

    உற்பத்தியில் புது மைல்கல் எட்டிய டாடா மோட்டார்ஸ் EV

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் மூன்று கார்களை விற்பனை செய்து வருகிறது.
    • எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் டாடா மோட்டார்ஸ் புது மைல்கல்லை எட்டி அசத்தி உள்ளது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பூனேவில் உள்ள உற்பத்தி ஆலையில் இருந்து 50 ஆயிரமாவது எலெக்ட்ரிக் வாகனத்தை வெளியிட்டு உள்ளது. 50 ஆயிரமாவது யூனிட்டாக டாடா நெக்சான் EV வெளியிடப்பட்டது. இந்த கார் கிளேசியர் வைட் நிறம் கொண்டிருக்கிறது.

    இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் EV, டிகோர் EV மற்றும் டியாகோ EV என மூன்று எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. இது மட்டுமின்றி அடுத்த ஐந்து ஆண்டுகளில் பத்து எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. பத்து புது எலெக்ட்ரிக் வாகனங்களில் கர்வ் EV, அவினியா மற்றும் அல்ட்ரோஸ் EV உள்ளிட்டவை ப்ரோடக்‌ஷன் நிலையை எட்டும் என தெரிகிறது.

    "இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் நிலையில், வாடிக்கையாளர்களிடம் எலெக்ட்ரிக் வாகனங்களை கொண்டு சேர்க்கும் பொறுப்பு எங்களிடம் இருந்தது. கச்சிதமான வாகனம், நுகர்வோர் எதிர்பார்க்கும் அம்சங்கள் மீது கவனம் செலுத்தினோம்."

    "வாடிக்கையாளர்களுக்கு எளிய, குறைந்த விலை தீர்வுகளை வழங்க டாடா குழும நிறுவனங்களுடன் இணைந்து எலெக்ட்ரிக் வாகன துறையை உருவாக்கி இருக்கிறோம். இந்தியாவில் 50 ஆயிரமாவது எலெக்ட்ரிக் வாகனத்தை கொண்டாடுவது, மக்கள் எங்களின் தயாரிப்புகளை எந்த அளவுக்கு ஏற்று கொண்டுள்ளனர் என்பதற்கு சான்றாக விளங்குகிறது. தொடர்ந்து அதிகரிக்கும் எரிபொருள் விலை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவற்றை தவிர்க்க சரியான மாற்று எலெக்ட்ரிக் வாகனங்கள் ஆகும்."

    "தற்போது வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை ஏற்க தயாராகி விட்டனர். முன்கூட்டியே எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க செய்ததோடு, இந்திய வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய முதன்மை பிராண்டாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்." என டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனம் மற்றும் டாடா பயணிகள் எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவு நிர்வாக இயக்குனர் சைலேஷ் சந்திரா தெரிவித்து இருக்கிறார்.

    Next Story
    ×