என் மலர்
உலகம்

எலான் மஸ்க் நிறுவனத்துக்கு ரூ.1,250 கோடி அபராதம்- காரணம் என்ன தெரியுமா?
- ஐரோப்பிய ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.
- தேவையான தரவுகளை தர மறுப்பது உள்ளிட்ட காரணங்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.
ஐரோப்பிய ஒழுங்கு முறை ஆணையம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட தகவல் தொடர்பு நிறுவனங்களுக்கு புதிய சட்டவிதிமுறைகளை அறிமுகம் செய்தது. அதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு சட்டவிதிகளை பின்பற்ற உத்தரவிடப்பட்டு இருந்தது.
அப்போதிருந்தே உலகின் முன்னணி தொழில் அதிபரான எலான் மஸ்கின், எக்ஸ் வலைத்தளம் அந்த புதிய விதிகளுக்கு இணங்கவில்லை என்று தெரிகிறது. இது தொடர்பாக ஐரோப்பிய ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.
இந்த நிலையில் விதிகளுக்கு இணங்க மறுத்த எக்ஸ் வலைத்தளம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அந்த நிறுவனத்துக்கு 120 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.1,259 கோடி) அபராதம் விதிக்கப்படுகிறது என்றும் ஐரோப்பிய ஆணையம் அறிவித்து உள்ளது. சில இடங்களில் பாதுகாப்பு குறைபாடான ஏமாற்றும் வடிவமைப்புகள் இருப்பதாகவும், ஆய்வாளர்களுக்குத் தேவையான தரவுகளை தர மறுப்பது உள்ளிட்ட காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.






