என் மலர்
நீங்கள் தேடியது "4ஜி மொபைல் சேவை"
- சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஏர்டெல் மொபைல் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
- இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அவதியடைந்துள்ளனர்.
சென்னையில் ஏர்டெல் மொபைல் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக என்று வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னை, மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஏர்டெல் மொபைல் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல பகுதிகளில் ஏர்டெல் எங்களை தொடர்பு கொள்ள முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதியடைந்துள்ளனர்.
ஏர்டெல் மொபைல் சேவை பாதிப்பு தொடர்பாக ஏர்டெல் இணையதளத்தில் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
- நாடு முழுவதும் 24,680 கிராமங்களுக்கு 4ஜி மொபைல் சேவை வழங்கப்படுகிறது.
- புதுச்சேரியில் ஒரு கிராமத்தில் 4ஜி மொபைல் சேவை வழங்கப்பட உள்ளது.
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை 1.64 லட்சம் கோடி மதிப்பில் மறுசீரமைப்பு செய்யும் திட்டத்திற்கும், நாட்டில் 4ஜி மொபைல் சேவை இல்லாத கிராமங்களில் ரூ.26,316 கோடி மதிப்பில் அதனை முழுமையாக வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்திருந்தது.
இதன் மூலம் நாடு முழுவதும் 24,680 கிராமங்களுக்கு 4ஜி மொபைல் சேவை அளிக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் அரியலூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, ஈரோடு, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கரூர்,மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம் சிவகங்கை, தென்காசி, உள்பட மொத்தம் 31 மாவட்டங்களில் உள்ள 534 கிராமங்களிலும், புதுச்சேரியில் ஒரு கிராமத்திலும் பி.எஸ்.என்.எல்.4ஜி மொபைல் சேவை அளிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.






