search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Signal"

    • கடலூரில் உள்ள சாலையோரம் தள்ளுவண்டி கடை களை வைத்து துணி வியாபாரம் செய்ய தொடங்கி உள்ளனர்.
    • மஞ்சக் குப்பம் நேதாஜி சாலை களில் மாலை வேளை யில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

    கடலூர்:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 12-ந் தேதி( ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடலூர் நகரில் உள்ள ஜவுளிக்கடை களில் துணிகளை வாங்க மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும் பலர் தீபாவளியையொட்டி கடலூரில் உள்ள சாலை யோரம் தள்ளுவண்டி கடை களை வைத்து துணி வியா பாரம் செய்ய தொடங்கி உள்ளனர். இதனால் கடலூர் லாரன்ஸ் சாலை, இம்பீரியல் சாலை, மஞ்சக் குப்பம் நேதாஜி சாலை களில் மாலை வேளை யில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. மேலும் வியா பாரிகள் பட்டாசு கடைகள் வைக்கும் பணியிலும் மும் முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக் பாக்கெட், திருட்டு போன்ற குற்ற சம்பவங்கள் நடை பெறுவதை தடுக்கும் பொருட்டு, கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜா ராம் உத்தரவின் பேரில் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மேற்பார்வையில் கடலூர் நகரில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க காவல்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி மாநகரில் கடலூர் மஞ்சக் குப்பம், திருப்பாதிரிப்புலியூர் சிக்னல், நாகம்மன் கோவில் உள்ளிட்ட 4 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் போலீசார் தீவிர கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • 65 சிக்னல்களிலும் பரபரப்பான நேரங்களில் 10 நிமிடங்கள் வரையில் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பது தெரியவந்துள்ளது.
    • போக்குவரத்து சிக்னல் இல்லாமல் வாகனங்கள் செல்வதற்கு வழி ஏற்படுத்துவது குறித்தும் போலீசார் ஆலோசனை நடத்தினர்.

    சென்னை:

    சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை தீர்ப்பதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் போக்குவரத்து சிக்னலில் நீண்ட நேரமாக காத்திருப்பதும் நெரிசலுக்கு ஒரு காரணம் என்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் சென்னை மாநகர் முழுவதும் போக்குவரத்து சந்திப்புகளில் அதிரடி ஆய்வு நடத்தினர்.

    இதில் சென்னை மாநகர் முழுவதும் 65 சிக்னல்களில் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அது போன்ற சிக்னல்களில் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியது என்பது பற்றியும் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் இந்த 65 சிக்னல்களிலும் பரபரப்பான நேரங்களில் 10 நிமிடங்கள் வரையில் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து போக்குவரத்து சிக்னல் இல்லாமல் வாகனங்கள் செல்வதற்கு வழி ஏற்படுத்துவது குறித்தும் போலீசார் ஆலோசனை நடத்தினர். இதில் சிக்னலை கடந்து நேராக செல்லும் வாகனங்கள் எத்தனை? வளைவில் திரும்பி செல்லும் வாகனங்கள் எத்தனை? என்றும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் நேராக செல்லும் வாகனங்கள் அதிக அளவிலும் வளைவில் செல்லும் வாகனங்கள் குறைந்த அளவிலும் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சிக்னல்களை மூடிவிட்டு யூ வளைவில் திரும்புவதை தடுத்து அந்த வாகனங்கள் சில அடி தூரம் சென்று மீண்டும் திரும்பி வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஏற்பாடுகளை ஸ்பென்சர் சந்திப்பு மற்றும் தி.நகர் சிக்னல் ஆகிய இடங்களில் போலீசார் அமல்படுத்தி இருக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் கூறும்போது, 'கோவை மாநகரில் இதுபோன்று சிக்னல்களில் போக்குவரத்து மாற்றங்களை மேற்கொண்டதில் நல்ல பலன் கிடைத்திருப்பதாகவும் அந்த முறையை சென்னையில் தற்போது அமல்படுத்த முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறும்போது, சென்னை மாநகர் முழுவதும் இது போன்று மேலும் பல சிக்னல்களை அணைத்து விட்டு வாகனங்களை இயக்க முடியுமா? என்பது பற்றி தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறோம் என்று தெரிவித்தனர்.

    இந்த போக்குவரத்து மாற்றம் வாகனங்களுக்கு சில அசவுகரியங்களை ஏற்படுத்தினாலும் சிக்னல்களில் நேராகச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு வசதியாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    இதன் மூலம் சென்னை மாநகரில் விரைவில் பல்வேறு சாலைகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்கள் அணைத்து வைக்கப்பட்டு வாகனங்கள் இயக்கப்படும் என்று தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் ஆய்வு நடத்தி முடிவுகளை மேற்கொள்ள உள்ளனர்.

    • மக்கள் குடியேறி வருவதால் விழுப்புரம் நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
    • இதற்கு வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்

    விழுப்புரம்:

    விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள விரிவாக்கப் பகுதிகளில் மக்கள் குடியேறி வருவதால் விழுப்புரம் நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக விழுப்புரம் - புதுவை சிக்னலில் இருந்து கம்பன் நகர் வரை போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்பட்டு வந்தது. இந்த சாலையின் நடுவில் வைக்கப்பட்ட ரிப்லெக்ஸ் தடுப்பு கட்டை சேதமடைந்ததால், போக்குவரத்து நெரிசல் அதிகமானது. இதையடுத்து விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த் மற்றும் போலீசார், புதிய இரும்பினால் ஆன தடுப்புகளை அமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளனர். இதற்கு வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    • மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    • 8 விரைவு ரெயில்கள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக காலதாமதமாக சென்னை நோக்கி சென்றது.

    திண்டிவனம்:

    சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு திண்டிவனம், விழுப்புரம் வழியாக ரெயில்கள் சென்று வருகின்றன.

    இரவு திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை பெய்து வந்தது. இதையடுத்து திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் பகுதியில் காரைக்காலில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரெயில் மீதும், தண்டவாளத்திலும் அருகே இருந்த மரம் விழுந்தது.

    இதனால் என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்திவிட்டார். மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மரம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. மரம் விழுந்ததால் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. பின்னர் சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்டது. இதனால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த ரெயில்களும், வட மாவட்டத்தில் இருந்து வந்த கம்பன் ,பாண்டியன் முத்துநகர், கன்னியாகுமரி , போன்ற 8 விரைவு ரெயில்களும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக காலதாமதமாக சென்னை நோக்கி சென்றது. இதனால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
    • சாலை பாதுகாப்பு நிதி ரூ.8 லட்சம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் விபத்துகளை தடுப்பதற்காக நிதி ரூ.68 லட்சத்து 11ஆயிரத்து 486 மற்றும் மாநில குற்ற ஆவணக் காப்பகத்தால் வழங்கப்படும் சாலை பாதுகாப்பு நிதி ரூ.8 லட்சம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிதியிலிருந்து போக்குவரத்து சிக்னல்கள்- 10, சோலார் ஒளிரும் பிளிங்கர்ஸ்- 20, போக்குவரத்து ஓளிரும் கூம்புகள் - 100, ஒளிரும் தடியடி விளக்குகள் 100, ஒளிரும் சிறிய தடியடி விளக்குகள் 100, போக்குவரத்து பிரதிபலிப்பு முக்கோணங்கள் - 100, மரம் பிரதிபலிப்பான்கள் 1000, போக்குவரத்து தடுப்பாண்கள் - 48, சோலார் போக்குவரத்து தடுப்பாண்கள் - 18 உள்பட போக்குவரத்து உபகரணங்கள் வாங்கப்பட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இதில் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தைமேடு அருகில் 4 சாலைகள் சந்திக்கும் சந்திப்பு பகுதியில் புதியதாக போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தலைமை தாங்கி சிக்னல்களை தொடங்கி வைத்தார்.

    இதேபோல் மாவட்டம் முழுவதிலும் 9 இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக தொடங்கி வைக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேசுவரய்யா, இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

    • சிக்னல்களில் போடப்பட்டுள்ள தடை கோட்டை தாண்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
    • சிக்னலில் பொம்மைகளுடன் கலை நிகழ்ச்சி நடத்தி போக்குவரத்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.

    சென்னை:

    போக்குவரத்து காவல்துறை சார்பில் சென்னை முழுவதும் இன்று தடை கோட்டை தாண்டி செல்லக் கூடாது என்று வாகன ஓட்டிகளிடம் போலீசார் விழிப்புணர்வு செய்தனர்.

    போக்குவரத்து சிக்னல்களில் தடை கோட்டை தாண்டும் வாகன ஓட்டிகளை செல்போனில் படம் பிடித்து அபராதம் விதிக்கும் முறை தீவிரமாக சென்னை முழுவதும் நடந்து வருகிறது. அவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வாகன ஒட்டிகளின் செல்போனுக்கே சில நிமிடங்களில் அபராதம் சென்று விடும்.

    இதுகுறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று முதல் 3 நாட்களுக்கு நடக்கிறது. அனைத்து போக்குவரத்து சந்திப்புகளிலும் தடை கோட்டை தாண்டும் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீசார் சாலை விதிகளை மீறக்கூடாது. சிக்னல்களில் போடப்பட்டுள்ள தடை கோட்டை தாண்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். தேவையில்லாமல் அபராதத்தை செலுத்தாதீர்கள். ரூ.500 இருந்தால் ஒரு குடும்பத்தின் ஒரு நாள் சராசரி செலவை சமாளிக்கலாம். தேவையில்லாமல் உங்களுக்கு அபராதம் விதிக்க எங்களுக்கு ஆசையில்லை. எனவே போக்குவரத்து விதிமுறைகளை மதித்து செல்லுங்கள் என விழிப்புணர்வு செய்தனர்.

    வேப்பேரியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு தலைமையில் சிக்னலில் பொம்மைகளுடன் கலை நிகழ்ச்சி நடத்தி போக்குவரத்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.

    • ரெயில்வே மூத்த பொறியாளர் ஏ.கே.ஸ்பாட் மற்றும் மற்றொரு அதிகாரி மஹிந்தா ஆகியோர் ஒரு சிக்னல் பிழையே விபத்துக்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.
    • மற்ற அதிகாரிகள் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் லூப் லைனில் நுழைந்தது விபத்துக்கு காரணம் தெரிவித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த 2-ந்தேதி இரவு நடைபெற்ற கோர ரெயில் விபத்தில் 288 பேர் பலியானார்கள். நூற்றுக் கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இந்த விபத்துக்கு நாச வேலை காரணமாக இருக்கும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது.

    இதற்கிடையே ரெயில்வே துறை சார்பில் 5 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு இரண்டு பக்க விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இதில் ரெயில்வே மூத்த பொறியாளர் ஏ.கே.ஸ்பாட் மற்றும் மற்றொரு அதிகாரி மஹிந்தா ஆகியோர் ஒரு சிக்னல் பிழையே விபத்துக்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.

    மற்ற அதிகாரிகள் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் லூப் லைனில் நுழைந்தது விபத்துக்கு காரணம் தெரிவித்துள்ளனர். ஆனால் மகிந்தா இதை மறுத்துள்ளார். லெவல் கிராசிங் கேட் எண் 94-க்கு முன்னால் ரெயில் தடம் புரண்டதாகவும், இதனால் லூப் லைனுக்கு மாறுவதற்கு முன்பு விபத்து நடந்ததாகவும் வாதிட்டுள்ளார். மேலும் ரெயில்வே மூத்த அதிகாரி ஒருவர் மெயின் லைன் வழியாக சிக்னல் மற்றும் பாயிண்ட் அமைக்கப்படும்போது லூப் லைனில் ரெயில் நுழைவதற்கான சாத்திய கூறு இல்லை என்று நிராகரித்துள்ளார்.

    விபத்துக்கு சிக்னல் செயல் இழந்ததே காரணம் என்று ஆய்வு அறிக்கை கூறினாலும் அந்த சிக்னல் பச்சை நிறத்தில் இருந்ததாக கூறியிருப்பதால் டேட்டா லாக்கர் அறிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த டேட்டா லாக்கர் என்பது மைக்ரோ செயலி அடிப்படையிலான சிஸ்டமாகும்.

    இது ரெயில்வே சிக்னலின் அமைப்பை கண்காணிக்கிறது. இதன் தரவை ஸ்கேன் செய்து பார்த்தால் உண்மை புலப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ரெயில்வே அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, பூர்வாங்க விசாரணையின் கட்டத்தில் வெவ்வேறு துறைகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பது மிகவும் இயல்பானது.

    ஒவ்வொருவரும் வெவ்வெறு கண்ணோட்டத்தை கொண்டு இருக்கலாம். ரெயில்வே பாதுகாப்பு ஆணையரின் விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இதற்கிடையே டிவிஷன் ரெயில்வே மேலாளர் ரின் கேஸ் ராய் கூறும் போது, பாதை உள்ளதா, அனைத்தும் சரியாக உள்ளதா போன்ற அனைத்து முன்நிபந்தனைகளையும் பூர்த்தி செய்த பின்னரே கிரீன் சிக்னல் கிடைக்கும். சின்ன சின்ன பிரச்சனை வந்தாலும் தொழில்நுட்ப ரீதியாக எந்த சூழலிலும் கிரீன் சிக்னல் இருக்க முடியாது.

    யாரோ ஒருவர் அதை சீர்குலைக்கும் வரை உடல் ரீதியாக அதை கட்டுப்படுத்தும் வரை அது பசுமையாக இருக்க முடியாது. சிக்னல் பச்சை நிறத்தில் இருந்ததாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் லோகோ பைலட் மற்றும் உதவி பைலட் ஆகியோர் கூறியுள்ளனர்.

    ஒவ்வொரு நிகழ்வையும் பதிவு செய்யும் டேட்டா லாக்கர் கூட சிக்னல் பச்சை நிறத்தில் இருந்ததை காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு விசாரணை குழுவின் கருத்து வேறுபாட்டினால் விபத்துக்கான காரணம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

    • 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிக்னல் அமைத்துள்ளனர்.
    • ரிமோட் மூலம் இயக்கக்கூடிய அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் சிக்னல் கம்பங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    அவிநாசி ூ

    அவிநாசியில் போக்குவரத்து போலீசார் பெரும் முயற்சி எடுத்து தனியார் பங்களிப்பு மூலம் ஏறத்தாழ, 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிக்னல் அமைத்துள்ளனர். அவை தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

    இது குறித்து போக்குவரத்து ஆய்வாளர் சக்திவேல் கூறியதாவது:- சென்னைக்கு அடுத்ததாக எல்.இ.டி., சிக்னல்கள் மற்றும் ரிமோட் மூலம் இயக்கக்கூடிய அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் அவினாசியில் சிக்னல் கம்பங்கள் பொருத்தப்பட்டுள்ளது. திருப்பூர் ரோடு, புதிய பஸ் நிலையம் , மங்கலம் ரோடு, சேவூர் ரோடு ஜங்ஷன் ஆகிய பகுதிகளில் 'டைமருடன்' சிக்னல், சுதந்திரநல்லூர் கணினி ஜங்ஷன், மங்கலம் ரோடு ரவுண்டானா, மேட்டுப்பாளையம் பிரிவு, சூளை பிரிவு, கால்நடை மருத்துவமனை, சீனிவாசபுரம், டி.எஸ்.பி., ஆபீஸ், மேற்கு ரத வீதி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில், நெடுஞ்சாலை மற்றும் சுற்றுலா பயணியர் மாளிகை அருகில்.

    புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் சாலையை கடப்பதற்கான சிக்னல், கைகாட்டி பிரிவு, திருப்பூர் ரோட்டில் பைபாஸ் பாலம் உள்ளிட்ட பகுதிகளிலும் சிக்னல் கம்பங்கள் பொருத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக நான்கு இடங்களில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.இன்னும் 20 நாட்களுக்குள் அனைத்து பகுதிகளிலும் சிக்னல் பொருத்தப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அதன்பின் எஸ்.பி., பங்கேற்று பயன்பாட்டிற்கு அளிக்க உள்ளார்.

    • திருச்சி மாநகரில் விபத்துகள் அதிகம் நடைபெறும் 21 பகுதிகளில் பிரத்யேக சிக்னல் அமைக்கப்பட உள்ளது
    • போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

    திருச்சி,

    திருச்சி மாநகர காவல்துறையில் பணியாற்றும் காவலர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தங்கள் கண்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் குளிர் கண் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையம் முன்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநகர போலீஸ் கமிஷனர் சத்யபிரியா பங்கேற்று 200-க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கண் கண்ணாடிகளை வழங்கினார்.

    அதனை தொடர்ந்து நிருபர்களிடம் கூறுகையில், திருச்சி மாநகரில் சட்டவிரோதமாக செயல்படும் மதுபான கூடங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகர் பகுதியில் அதிக விபத்துகள் நடக்கும் பகுதியில் ஒன்றாக உள்ளதால், அங்கு சிக்னல் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் 21 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதிகளிலும் இதுபோன்ற சிக்னல்கள் அமைக்கப்பட உள்ளது. இதேபோன்று போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சாலை விதிகளை மீறுவோர் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது என்றார்.

    • வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வரிசையாக சென்றது.
    • சிக்னலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குனியமுத்தூர்,

    கோவையில் உள்ள முக்கிய சாலைகளில் கோவை தடாகம் சாலை மிகவும் முக்கியமான சாலையாகும்.காந்தி பார்க், பால் கம்பெனி, ஜி.சி.டி, வெங்கடாபுரம், வேலண்டி பாளையம், கோவில்மேடு, இடை யார்பாளையம், சிவாஜி காலனி, டி.வி.எஸ் நகர், கணுவாய், ஆனைகட்டி பகுதிகளுக்கு செல்லும் முக்கியமான சாலை இதுவாகும்.

    இந்த சாலையின் மையப்பகுதி இடையர் பாளையம் பிரிவாகும். இடையர்பாளையம் பிரிவில் உள்ள 4 ரோடு சந்திப்பில் ஒருபுறம் கவுண்டம் பாளையத்திற்கும், ஒருபுறம் வடவள்ளிக்கும், ஒருபுறம் கணுவாய்க்கும், ஒருபுறம் காந்தி பார்க்குக்கும் செல்லக்கூடிய சாலை யாகும்.

    இந்த 4 ரோடு சந்திப்பில் எந்த நேரமும் வாகனங்கள் குறுக்கும் நெடுக்குமாக சென்று கொண்டிருக்கும். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வரிசையாக சென்றது.

    ஆனால் தற்போது பல மாதங்களாக இந்த சிக்னல் செயல்படவில்லை. இதனால் வாகனங்கள் அனைத் தும் அத்துமீறி செல்லும் அவல் நிலை உள்ளது. இது குறித்து மக்கள் கூறியதாவது:- சராசரியாக ஒரு நாளைக்கு இந்த இடையர்பாளையம் பகுதி சிக்னலில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கிறது.

    சிக்னல் இயங்கி கொண்டி ருக்கும்போது எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் தற்போது சிக்னல் இயங்கப்படவில்லை. போக்குவரத்து போலீசாரும் நிற்பதில்லை. இதனால் வாகனங்கள் அனைத்தும் தாறுமாறாக செல்லும் சூழ்நிலை உள்ளது.

    4 சக்கர வாகனங்கள் வருவதற்கு முன்கூட்டியே இரு சக்கர வாகனங்கள் குறுக்கே புகுவதால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகிறது .

    குழந்தைகளை அழைத் துக் கொண்டு பள்ளிக்கு செல்லும் தாய்மார்கள் அவ்வப்போது கீழே விழுந்து எழும் சூழ்நி லையும் காணப்படுகிறது. மேலும் தடாகம் சாலை யானது செங்கல் லாரிகள் அதிகம் பயணிக்கும் சாலையாக உள்ளது.

    எனவே போக்குவரத்து போலீசார் இதனை கருத்தில் கெண்டு இந்த சிக்னலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை யென்றால் போக்குவரத்து போலீசார் இந்த இடத்தில் நின்று போக்குவரத்தை சீரமைக்க வேண்டும். இல்லையென்றால் தினமும் விபத்துகளை சந்திக்க நேரிடும்.

    எனவே இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குடிமங்கலம் நால்ரோடு வழியில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
    • சேலம், சென்னை மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களும் இந்த வழியாக செல்கின்றன.

    உடுமலை :

    உடுமலையிலிருந்து பல்லடம் திருப்பூர் செல்லும் சாலை, பொள்ளாச்சியில் இருந்து தாராபுரம் செல்லும் சாலை ஆகியவை சந்திக்கும் முக்கியமான இடமாக குடிமங்கலம் நால்ரோடு பகுதி உள்ளது. இந்த வழியில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக உடுமலை பகுதியில் இருந்து சேலம், சென்னை மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களும் இந்த வழியாக செல்கின்றன. மேலும் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளன வேலைக்கு செல்வோர் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கும் குடிமங்கலம் நால்ரோடு பகுதி வந்து பஸ் ஏறி செல்கின்றனர். நால்ரோடு பகுதி மிகவும் விசாலமாகவும் ரவுண்டான அமைக்கும் வகையிலும் உள்ளது இதனால் சாலை கடப்பதற்கு வேகமாக வரும் வாகனங்கள் பாதசாரிகளின் மீது மோதி விடுகின்றன.

    இங்கு போக்குவரத்து போலீசாரும் பணியில் இருப்பதில்லை. எனவே குடிமங்கலம் நால்ரோடு பகுதியில் தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் அதிவேகமாக வருகிறது.
    • தடுப்புகள் அமைத்து போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவரும், 42-வது வார்டு கவுன்சிலருமான அன்பகம் திருப்பதி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபுவிடம் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாநகராட்சி மங்கலம் ரோடு பாரப்பாளையம் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கும் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் வாசல் நான்கு முக்கு சாலை சந்திப்பில் அமைந்துள்ளது. அந்த பகுதியில் புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் அதிவேகமாக வருகிறது. இதனால் குழந்தைகளும், வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனால் பள்ளியின் முன் உள்ள ரவுண்டானாவில் சிக்னல் அமைக்க வேண்டும். அதுவரை அங்கு தடுப்புகள் அமைத்து போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும்.

    அதே ரோட்டில் குமரன் மகளிர் கல்லூரியில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கிறார்கள். மாலை 4 மணிக்கு கல்லூரி முடியும் நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட மினிபஸ்கள் கல்லூரியின் வாசலில் நிறுத்தி பயணிகளை ஏற்ற போட்டி போடுகிறார்கள். இதனால் இருசக்கர வாகனங்கள் மூலம் மாணவிகளை அழைக்க வரும் 400-க்கும் மேற்பட்ட பெற்றோர் கடும் சிரமத்தை சந்திக்கிறார்கள். மற்ற வாகனங்கள் கடந்து செல்ல சிரமப்படுகிறது. அதனால் வாகன ஓட்டிகளுக்கு இடையே வாக்குவாதம் பிரச்சினை ஏற்படுகிறது. அங்கு போக்குவரத்து காவலரை நியமித்து போக்குவரத்தை சீரமைக்க வேண்டும். ஏற்கனவே இதுகுறித்து கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

    சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் உறுதியளித்துள்ளார்.

    ×