ஜியோவை தொடர்ந்து குறைந்தபட்ச மாத ரீசார்ஜ் ரூ.249 ப்ளானை நீக்கியது ஏர்டெல்

தினமும் 1 ஜிபி டேட்டாவை வழங்கிய ஒரே ஒரு ப்ரீபெய்ட் திட்டமாக ரூ.249 ரீசார்ஜ் இருந்தது. ரூ.299 (1.5GB/Day) ப்ளான் தற்போது அந்நிறுவனத்தின் குறைந்தபட்ச மாதாந்திர பேக் ஆகியுள்ளது.
ஜியோவை தொடர்ந்து குறைந்தபட்ச மாத ரீசார்ஜ் ரூ.249 ப்ளானை நீக்கியது ஏர்டெல்
Published on

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் தொகுப்பில் இருந்து ரூ.249 மதிப்புள்ள திட்டத்தை நீக்கி உள்ளது. இந்த நடவடிக்கையை தொடர்ந்து, ஜியோ சேவையின் கீழ் டெய்லி 1ஜிபி டேட்டாவுடன் வரும் எந்த பேஸிக் ரீசார்ஜும் இல்லை என்கிற சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் ரூ.299 (1.5GB/Day) ப்ளான் தற்போது அந்நிறுவனத்தின் குறைந்தபட்ச மாதாந்திர பேக் ஆகியுள்ளது.

இந்நிலையில், ஜியோவின் நடவடிக்கையைத் தொடர்ந்து, ஏர்டெலும் குறைந்தபட்ச மாதாந்திர பேக்கை நிறுத்தியுள்ளது. அதாவது நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.249 மாதாந்திர பேக் திட்டத்தை ஏர்டெல் நீக்கியுள்ளது. இனிமேல் ரூ.299 (1.5GB/Day) குறைந்தபட்ச மாதாந்திர பேக்காக இருக்கும் என்று ஏர்டெல் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com