என் மலர்
மொபைல்ஸ்

புது ஆண்ட்ராய்டு அப்டேட் பெறும் சாம்சங் ஸ்மார்ட்போன் - லீக் ஆன முக்கிய தகவல்
- கேலக்ஸி A55 5ஜி ஸ்மார்ட்போன் மாடலில் சாம்சங்கின் சொந்த எக்சைனோஸ் 1480 பிராசஸர் மற்றும் 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.
- ஸ்மார்ட்போன் 25W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி A55 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒன் யுஐ 6.1 கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் நான்கு தலைமுறை ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் ஐந்து ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்களை பெறும் என்று உறுதியளிக்கப்பட்டது.
சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் உடன் பென்ச்மார்க்கிங் வலைதளத்தில் காணப்பட்டது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் ஒன் யுஐ 8 பீட்டா அப்டேட் பெறலாம் என்பதை பரிந்துரைக்கிறது. கேலக்ஸி A55 5ஜி ஸ்மார்ட்போன் மாடலில் சாம்சங்கின் சொந்த எக்சைனோஸ் 1480 பிராசஸர் மற்றும் 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், கேலக்ஸி A55 5ஜி சமீபத்தில் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஒன் யுஐ 7 அப்டேட்டை சமீபத்தில் பெற்றது. இந்த மாத தொடக்கத்தில், சாம்சங் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் கேலக்ஸி S25 சீரிசுக்கான ஒன் யுஐ 8 பீட்டா 2 வெர்ஷனை வெளியிட்டது.
கேமராவை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி A55 5ஜி ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமரா, அல்ட்ரா-வைட் லென்ஸுடன் கூடிய 8MP சென்சார் மற்றும் 5MP மேக்ரோ லென்ஸ் பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 120Hz வரை ரிப்ரெஷ் ரேட் கொண்ட 6.6-இன்ச் Full-HD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ பாதுகாப்பு உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 25W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இத்துடன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இவற்றின் விலை முறையே ரூ.32,999, ரூ.42,999 மற்றும் ரூ.45,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.