என் மலர்
மொபைல்ஸ்

உலகின் மிகமெல்லிய Foldable Phone - ஹானர் அதிரடி
- ஹானர் மேஜிக் V5 ஸ்மார்ட்போன் ஜூலை 2 ஆம் தேதி சீனாவில் வெளியிடப்படுகிறது.
- ஹானர் மேஜிக் V5 மடிக்கப்பட்ட நிலையில் 8.8 மிமீ தடிமன் கொண்டிருக்கும்.
ஹானர் மேஜிக் V5 ஜூலை 2 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் ஹானர் நிறுவனம் அதன் வடிவமைப்பு மற்றும் அம்சங்களை வெளிப்படுத்தும் டீசர்களை தொடர்ச்சியாக பகிர்ந்து வருகிறது. சமீபத்திய சமூக வலைதள பதிவில், ஹானர் பிரான்டு வரவிருக்கும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா வழங்குவதை உறுதிப்படுத்தி இருக்கிறது.
புதிய ஹானர் மேஜிக் V5 ஸ்மார்ட்போன் மூன்று பின்புற கேமரா சென்சார்களை கொண்டிருக்கும் என்று தெரிகிறது. மேலும் 6,100mAh பேட்டரியைக் கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெய்போவில் வெளியாகி இருக்கும் புதிய டீசரில், ஹானர் மேஜிக் V5 மாடலில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 64-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரவிருக்கும் மாடல் சந்தையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் மிக உயர்ந்த தெளிவுத்திறன் கொண்ட பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவைக் கொண்டுள்ளது என்று நிறுவனம் கூறியது. கடந்த ஆண்டு ஹானர் மேஜிக் V3 ஸ்மார்ட்போன் 50-மெகாபிக்சல் பெரிஸ்கோப் லென்ஸ் கொண்டிருந்தது.
பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சார் தவிர, ஹானர் மேஜிக் V5 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைடு ஆங்கிள் சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.
ஹானர் மேஜிக் V5 ஸ்மார்ட்போன் ஜூலை 2 ஆம் தேதி சீனாவில் வெளியிடப்படுகிறது. இதில் 6,100mAh பேட்டரி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்- டான் கோல்ட், சில்க் ரோடு டன்ஹுவாங், வெல்வெட் பிளாக் மற்றும் வார்ம் ஒயிட் என நான்கு வண்ண விருப்பங்களில் விற்பனை செய்யப்படும். இது 12GB + 256GB, 16GB + 512GB, மற்றும் 16GB + 1TB மெமரி வெர்ஷன்களில் கிடைக்கும்.
ஹானர் மேஜிக் V5 மடிக்கப்பட்ட நிலையில் 8.8 மிமீ தடிமன் கொண்டிருக்கும். இது உலகின் மிக மெல்லிய மற்றும் இலகுவான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக அறிமுகமாகும். இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராராகன் 8 எலைட் சிப்செட் வழங்கப்படுகிறது. மேலும், இது வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.