என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    முற்றிலும் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐகூ 13 ஸ்மார்ட்போன்... விலை எவ்வளவு தெரியுமா?
    X

    முற்றிலும் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐகூ 13 ஸ்மார்ட்போன்... விலை எவ்வளவு தெரியுமா?

    • ஏற்கனவே உள்ள இரு நிறங்களுடன் ஐகூ 13 ஸ்மார்ட்போன் புதிதாக ஏஸ் கிரீன் ஆப்ஷனில் கிடைக்கும்.
    • ஸ்மார்ட்போன் அதிகம் சூடாவதை தடுக்க 7,000 மிமீ வேப்பர் சேம்பர் கொண்டுள்ளது.

    ஐகூ 13 ஸ்மார்ட்போன் முதன்முதலில் இந்தியாவில் டிசம்பர் 2024 இல் லெஜண்ட் மற்றும் நார்டோ கிரே வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது, மூன்றாவதாக மற்றொரு புதிய நிறத்தில் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது. புதிய நிறத்தைத் தவிர, இந்த ஸ்மார்ட்போன் அம்சங்களில் வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. இதில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் பிராசஸருடன் பிரத்யேக கேமிங் சிப்செட் மற்றும் 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

    இதுதவிர ஐக 13 ஸ்மார்ட்போன் 144Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 2K LTPO AMOLED டிஸ்ப்ளே மற்றும் 50-மெகாபிக்சல் பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள் அடங்கிய ரியர் கேமரா யூனிட் உள்ளது. புதிய வண்ண மாறுபாடு இந்த மாத இறுதியில் விற்பனைக்கு வரும் என்று ஐகூ தெரிவித்து இருக்கிறது.

    இந்தியாவில் iQOO 13 விலை, வண்ண விருப்பங்கள்

    ஏற்கனவே உள்ள இரு நிறங்களுடன் ஐகூ 13 ஸ்மார்ட்போன் புதிதாக ஏஸ் கிரீன் ஆப்ஷனில் கிடைக்கும். புதிய ஏஸ் கிரீன் நிற ஐகூ 13 ஸ்மார்ட்போனின் விலை முறையே ரூ. 54,999 மற்றும் ரூ. 59,999 ஆகும். இது ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வேரியண்ட்களுக்கானது ஆகும். இந்த ஸ்மார்ட்போன் தற்போது லெஜண்ட் மற்றும் நார்டோ கிரே வண்ண விருப்பங்கள் உட்பட மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. புதிய கிரீன் நிற வேரியண்ட் ஜூலை 12 ஆம் தேதி அதிகாலை 12 மணிக்கு அமேசான் மற்றும் ஐகூ இந்தியா இ-ஸ்டோர் மூலம் விற்பனைக்கு வரும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஐகூ 13 அம்சங்கள்

    ஐகூ 13 ஸ்மார்ட்போனில் 6.82-இன்ச் 2K (1,440x3,186 பிக்சல்கள்) LTPO AMOLED ஸ்கிரீன், 144Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் 1,800nits வரை பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 3 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கும் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் பிராசஸர் மற்றும் பிரத்யேக இன்-ஹவுஸ் கேமிங் Q2 சிப் மூலம் இயக்கப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட்போன் அதிகம் சூடாவதை தடுக்க 7,000 மிமீ வேப்பர் சேம்பர் கொண்டுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 16 ஜிபி வரை LPDDR5X அல்ட்ரா ரேம் மற்றும் 512 ஜிபி வரை UFS 4.1 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஃபன்டச் ஓஎஸ் 15 உடன் வருகிறது.

    புகைப்படங்கள் எடுக்க ஐகூ 13 ஸ்மார்ட்போன் 50-மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர் மற்றும் பின்புறத்தில் 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு முன்புறத்தில் 32-மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஐகூ 13 ஸ்மார்ட்போனில் 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 6,000mAh பேட்டரி உள்ளது. இது டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியை வழங்குவதற்காக IP68 மற்றும் IP69 சான்று பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை 7, ப்ளூடூத் 5.4, NFC, GPS மற்றும் யுஎஸ்பி 3.2 ஜென் 1 டைப் சி கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. இது 8.13 மிமீ தடிமன் மற்றும் 213 கிராம் எடை கொண்டது.

    Next Story
    ×