என் மலர்
நீங்கள் தேடியது "ஓப்போ"
- புதிய ஸ்மார்ட்போன்களின் இந்திய வேரியண்ட்கள் அவற்றின் சீன வெர்ஷன்களை போல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட் மற்றும் ஓப்போ இந்தியா இ-ஸ்டோர் மூலம் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிகிறது.
ஓப்போ K13 டர்போ மற்றும் K13 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போன்கள் ஜூலை மாதத்தின் நான்காவது வாரத்தில் சீனாவில் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது அவற்றின் இந்திய வெளியீடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.
புதிய ஸ்மார்ட்போன்களின் இந்திய வேரியண்ட்கள் அவற்றின் சீன வெர்ஷன்களை போல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, புதிய ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் 11-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். இந்த ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட் மற்றும் ஓப்போ இந்தியா இ-ஸ்டோர் மூலம் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிகிறது.
ஓப்போ K13 டர்போ ஸ்மார்ட்போன் IPX6, IPX8 மற்றும் IPX9 தரச்சான்று பெற்ற வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இத்துடன் 7,000mAh பேட்டரி கொண்டுள்ளன. இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 8450 சிப்செட் வழங்கப்படுகிறது. இதன் ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 4 பிராசஸர் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
இத்துடன் 6.80 இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளேக்கள், 50MP டூயல் கேமரா சென்சார், 16MP செல்ஃபி லென்ஸ் வழங்கப்படுகிறது.
- ஓப்போ A5x 5G ஸ்மார்ட்போன் டூயல் சிலம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 15 சார்ந்த கலர்ஓஎஸ் 15 கொண்டிருக்கிறது.
- ஸ்மார்ட்போன் MIL-STD தர மிலிட்டரி கிரேடு சான்று பெற்றுள்ளது.
ஓப்போ A5x 5G ஸ்மார்ட்போன் நேற்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 4GB வரை RAM மற்றும் 128GB வரை ஸ்டோரேஜ் உள்ளது. இது 1,000nits பிரைட்னஸ் கொண்டுள்ளது.
நிறுவனத்தின் தகவலின்படி, ஓப்போ A5x 5G அதன் முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது 160 சதவீதம் அதிக உறுதி மற்றும் ஃபிளாக்ஷிப் கிரேடு ரீ-இன்ஃபோர்ஸ் செய்யப்பட்ட கிளாஸ் உடன் வருகிறது. இது IP65 தரச்சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போ் 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் ஓப்போ A5x 5G விலை
இந்தியாவில் ஓப்போ A5x 5G மாடலின் 4GB + 128GB விலை ரூ. 13,999 இல் தொடங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் ப்ளூ மற்றும் லேசர் ஒயிட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகள் மூலம் வாங்கும் போது வாடிக்கையாளர்கள் ரூ.1,000 உடனடி கேஷ்பேக் மற்றும் மூன்று மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை சலுகையை பெறலாம்.
ஓப்போ A5x 5G அம்சங்கள்
ஓப்போ A5x 5G ஸ்மார்ட்போன் டூயல் சிலம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 15 சார்ந்த கலர்ஓஎஸ் 15 கொண்டிருக்கிறது. இது 120Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் 1,000nits பிரைட்னஸ் கொண்ட 6.67 இன்ச் 1604x720 பிக்சல் HD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே கைவிரல் ஈரமாக இருக்கும் போதும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனில் 6nm முறையில் உருவாக்கப்பட்ட மீடியாடெக் டிமென்சிட்டி 6300 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 4GB வரை LPDDR4x RAM மற்றும் 128GB UFS 2.2 மெமரி வழங்கப்பட்டுள்ளது. கேமராவை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் 32MP பிரைமரி கேமரா, டெப்த் சென்சார் என டூயல் கேமரா செட்டப் உள்ளது. முன்புறம் 5MP செல்ஃபி கேமரா உள்ளது.
கனெக்டிவிட்டியை பொறுத்தவரை ஓப்போ A5x 5G-யில் 5G, டூயல் 4G VoLTE, Wi-Fi 5, ப்ளூடூத் 5.1, GPS, GLONASS மற்றும் USB Type-C ஆகியவை அடங்கும். இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் MIL-STD தர மிலிட்டரி கிரேடு சான்று பெற்றுள்ளது. மேலும், IP65 தரச்சான்று கொண்ட வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டணட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. ஓப்போ A5x 5G, 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான வசதியுடன் 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
- இறக்குமதி செய்யப்பட்ட சில பொருட்களின் விலையை தவறாக குறிப்பிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- விசாரணை அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதாக ஓப்போ இந்தியா தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
சீனாவின் குவாங்டன் ஓப்போ கைபேசி தொலைத்தொடர்பு கழக நிறுவனத்தின் துணை நிறுவனமான ஓப்போ இந்தியா, 4,389 கோடி சுங்க வரி ஏய்ப்பு செய்துள்ளதை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் கண்டுபிடித்துள்ளது.
இந்தியா முழுவதும் உற்பத்தி, வடிவமைத்தல், மொத்த வியாபாரம், கைபேசி மற்றும் உதிரி பாகங்கள் விநியோகம் உள்ளிட்டவற்றில் ஓப்போ இந்தியா ஈடுபட்டுள்ளது. ஒன் பிளஸ் மற்றும் ரியல்மி உள்ளிட்ட பல்வேறு கைபேசி நிறுவனங்களுடன் ஓப்போ இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்நிலையில், ஓப்போ இந்திய அலுவலகம், அதன் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கைபேசி உற்பத்தி செய்வதற்காக இறக்குமதி செய்யப்பட்ட சில பொருட்களின் விலையை ஓப்போ இந்தியா நிறுவனம் தவறாக குறிப்பிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓப்போ இந்தியா 4,389 கோடி ரூபாய் அளவுக்கு வரி விலக்கு பெற்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் மூத்த நிர்வாக பணியாளர்கள் மற்றும் உள்ளூர் விநியோகஸ்தர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதில், அவர்கள் இறக்குமதியின்போது சுங்க அதிகாரிகளிடம் தவறான தகவலை அளித்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர். சுங்க வரியை செலுத்தும்படி ஓப்போ இந்தியா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஓப்போ இந்தியா நிறுவனம், வருவாய் புலனாய்வு துறையிடம் இருந்து பெறப்பட்ட நோட்டீசுக்கு உரிய பதில் அளிப்பதாகவும், விசாரணையில் ஈடுபட்டுள்ள அரசு அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் சட்டப்பூர்வ தீர்வுகள் உள்பட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஓப்போ இந்தியா கூறி உள்ளது.






