விஜயகாந்த் நினைவிடத்தில் வழிபாடு செய்து விருப்ப மனு விநியோகத்தை தொடங்கி வைத்த பிரேமலதா

இன்று முதல் 12-ந் தேதி வரை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.விருப்ப மனு அளிப்பதற்கு தே.மு.தி.க.வின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள்.
விஜயகாந்த் நினைவிடத்தில் வழிபாடு செய்து விருப்ப மனு விநியோகத்தை தொடங்கி வைத்த பிரேமலதா
Published on

2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலுக்கான கூட்டணியை இன்னும் இறுதி செய்யாத நிலையில் 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெறும் பணியை தே.மு.தி.க. இன்று தொடங்கியது.

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புவோரின் விருப்ப மனுக்களை பெறும் முன், விஜயகாந்த் நினைவிடத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வழிபாடு செய்தார்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதியிலும் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் சட்டமன்ற பொதுத்தேர்தல் விருப்ப மனுக்களை இன்று முதல் 12-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

2026 சட்டமன்ற தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தே.மு.தி.க.வின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர்.

மேலும், தமிழக சட்டமன்ற பொதுத்தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.15 ஆயிரமும், தனித்தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.10 ஆயிரமும், புதுச்சேரி சட்டமன்ற பொதுத்தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.10 ஆயிரமும், தனித்தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.5 ஆயிரம் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை 12-ந் தேதி மாலை 5 மணிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com